​சிரியாவில் 5 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது

February 27, 2016 1 view Posted By : arunAuthors
Image

சிரியா அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே போர் நிறுத்தம் இன்று அமலுக்கு வந்தது. 

சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத் பதவி விலகக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையே ஐஎஸ், நுஸ்ரா முன்னணி போன்ற தீவிரவாத குழுக்களும் தாக்குதல் நடத்தி வருகின்றன. 

சிரிய அரசு தீவிரவாதிகளுக்கு எதிராக போர் நடத்துவதோடு கிளர்ச்சியாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வந்தது. இதனால் கிளர்ச்சியாளர் தரப்பும் எதிர்த்தாக்குதல் நடத்தி வந்தது. இந்நிலையில், ரஷ்யாவும், அமெரிக்காவும் இணைந்து, சிரிய அரசுக்கும், கிளர்ச்சியாளர் தரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் அமல்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன் விளைவாக இன்று போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. 

இருப்பினும், ஐ.எஸ். தீவிரவாதிகள் மற்றும் நுஸ்ரா முன்னணிக்கு எதிராக வழக்கம் போல் சிரிய அரசும், நேட்டோ படைகளும் தாக்குதலைத் தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Categories: World
Image

​ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 39 இந்தியர்களும் பாதுகாப்பாக உள்ளனர்: சுஷ்மா

September 18, 2015 0 views Posted By : arunAuthors
Image

ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ள 39 இந்தியர்கள் பத்திரமாக இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்துள்ளார்.

ஈராக்கில், ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் பிணைக் கைதிகளாக சிக்கியுள்ள 39 இந்தியர்கள் உயிருடன் இருக்கிறார்களா அல்லது இறந்துவிட்டார்களா என்ற தகவல் ஓராண்டைக் கடந்தும் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. 

இந்தநிலையில், டெல்லியில், பாதிக்கப்பட்ட அவர்களது குடும்பத்தினரை வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள 39 இந்தியர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார். 

இந்தியர்களை விடுவிக்க உதவுமாறு வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பு மற்றும் நட்பு நாடுகளிடம் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Categories: India
Image

ஐ.எஸ் அமைப்பின் மிகப்பெரிய தோல்வி !

March 29, 2016 0 views Posted By : suryaAuthors
Image

சிரியாவின் பால்மைரா நகரிலிருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டிருப்பது, ஐ.எஸ். அமைப்பின் மிகப்பெரிய தோல்வியாக கருதப்படுகிறது. ரஷ்ய- சிரிய ராணுவத்தின் கூட்டு நடவடிக்கை மூலம் இந்த வெற்றி எட்டப்பட்டுள்ளதாக சிரிய அரசு அறிவித்துள்ளது.

சிரியா, ஈராக் உள்ளிட்ட நாடுகளின் பெரும்பான்மையான பகுதிகளைக் கைப்பற்றி தனி அரசை உருவாக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆயுதமேந்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பினர் உலக நாடுகளுக்கு எதிரான அச்சுறுத்தலாக மேற்கத்திய நாடுகள் கருதுகின்றன. இதனால் அமெரிக்காவின் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதலை தொடுத்து வருகின்றன

ஆனால், சிரியாவில் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டிருந்த கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளித்து வந்த அமெரிக்க கூட்டு ராணுவம், சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்துக்கு எந்த ஆதரவையும் அளிக்கவில்லை. சிரிய ராணுவத்துக்கு எதிராகத் தாக்குதல் நடத்தி வந்த கிளர்ச்சியாளர்கள் அமெரிக்க கூட்டு ராணுத்தின் உதவியுடன் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகவும், சிரிய அதிபருக்கு எதிராகவும் போர் புரிந்து வந்தனர். இந்நிலையில், சிரிய ராணுவம் தனியாக ஐ.எஸ். அமைப்புக்கு எதிராகத் தாக்குதல் நடத்திவந்தது. 

இதற்கிடையே கடந்த 5 மாதங்களுக்கு முன் சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா களம் இறங்கியது. அதன் பின்பு தீவிரவாதிகளுக்கு எதிரான தாக்குதல்கள் வேகமெடுத்தன. சிரிய ராணுவத்துடன் ரஷ்ய ராணுவமும் இணைந்து பல பகுதிகளில் இருந்து தீவிரவாதிகளை விரட்டியடித்தன. அந்நாட்டின் பாரம்பரியம் மிக்க நகரமாக விளங்கிய பால்மைராவில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வந்த தீவிரவாதிகள், அங்கு இருந்த ஏராளமான பாரம்பரியச் சின்னங்களை அழித்து விட்டனர். 

பால்மைரா நகரம் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த முக்கிய பகுதியாகக் கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், ரஷ்ய ராணுவமும், சிரிய அரசுப் படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தி இந்நகரை மீட்டுள்ளது. இது சிரிய அரசுக்கு முக்கிய திருப்புமுனையாக அமைந்துள்ளது. அந்நகரை முழுமையாக புனரமைக்கும் நம்பிக்கையும் பிறந்துள்ளது.

உருக்குலைந்து காணப்படும் பால்மைரா நகரிலிருந்து தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்ட பின்னர் ஆளில்லாத விமானம் மூலம் எடுக்கப்பட்ட காணொளிக் காட்சிகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. கைவிடப்பட்ட பாலைவனம் போல் காட்சியளிக்கும், வரலாற்றுச் சிறப்பு மிக்க பால்மைரா நகரை மீண்டும் பொலிவுறச் செய்வதற்கான நம்பிக்கை பிறந்திருப்பதாக சிரிய மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Categories: World
Image

ஈராக்கில் ரமாடி நகரத்தை மீட்கும் முயற்சியில் அமெரிக்க கூட்டுப்படையினர்

May 19, 2015 0 views Posted By : suryaAuthors

ஈராக்கில் ஐ.எஸ் தீவிரவாதிகள் வசமுள்ள ரமாடி நகரத்தை மீட்கும் முயற்சியில் அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படையினர் போராடி வருகின்றனர்.  

கடந்த சில தினங்களாக அரசுப் படைகளின் மீது ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய தொடர் குண்டுவீச்சு தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிய ராணுவத்தினர், ரமாடி நகரை விட்டு வெளியேறினர். இதனையடுத்து அந்நகர் ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்நிலையில், அதனை மீட்க அமெரிக்க தலைமையிலான கூட்டுப் படையினர் 3 ஆயிரம் பேர் அளவில் ரமாடியில் குவிந்துள்ளனர். கடந்த 2 நாட்களாக ரமாடி நகரில் நடந்த தாக்குதலில் பொதுமக்கள், ராணுவ வீரர்கள் என ஒட்டு மொத்தமாக 500 பேர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories: World
Image

ஈராக்: பாதுகாப்பு படையினரை சிறைபிடித்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

May 16, 2015 0 views Posted By : suryaAuthors
Image

ஈராக்கில் முக்கிய அரசு கட்டடங்களைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள் 50-க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினரை சிறைபிடித்துள்ளனர்.

ஈராக்கின் அன்பர் மாகாணத்திலுள்ள பல்வேறு பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர். ரமாதி பகுதியில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே கடுமையாக துப்பாக்கிச் சண்டை நீடித்துவருகிறது. 

இந்நிலையில் 50க்கும் அதிகமான பாதுகாப்பு படையினரை சிறைக்கைதிகளாக பிடித்துவைத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், போலீஸ் தலைமையக கட்டடத்தைக் கைப்பற்றியுள்ளனர். அந்தக் கட்டடங்களில்  மீது தங்களது கொடிகளை பறக்கவிட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு சண்டை நீடித்துவரும் நிலையில், தற்கொலைத் தாக்குதல்களையும் தீவிரவாதிகள் அரங்கேற்றியுள்ளனர். இதில் 14-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Categories: World
Image

சிரியாவின் முக்கிய நகரை கைப்பற்றினர் தீவிரவாதிகள்

April 26, 2015 0 views Posted By : yuvarajAuthors
Image

சிரியாவில் முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள தீவிரவாதிகள் அரசுப் படைகளும் தீவிர சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத்துக்கு எதிராக ஒருபுறம் உள்நாட்டுக் கிளர்ச்சி நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் ஐ.எஸ். தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இவற்றுக்கு இடையே அல்கொய்தா ஆதரவு தீவிரவாத அமைப்பான நுஸ்ரா முன்னணியை சேர்ந்த தீவிரவாதிகள்,  ஜிசிர் அல் சுகவுர் நகருக்குள் ஊடுருவினர். 

அரசுப் படைகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் தீவிரவாதிகளின் கை ஓங்கியது. இதைத்தொடர்ந்து அந்த நகரம் தீவிரவாதிகளின் வசமாகி விட்டதாக சிரியா அரசு தெரிவித்துள்ளது. இருதரப்பிலும் பலர் உயிரிழந்து விட்டனர். லட்டாகியா- ஆலெப்போ  இடையே அமைந்துள்ள இந்த நகரத்தை முதல்முறையாக நுஸ்ரா முன்னணியினர் பிடித்திருப்பது சிரிய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

Categories: World
Image

பொதுமக்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்

November 03, 2014 0 views Posted By : editor5Authors
Image

ஐ.எஸ் தீவிரவாதிகளால் மேலும் 85 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.ஈராக்கில் பாக்தாத் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர் அட்டூழியத்தால் பல அப்பாவி பொதுமக்கள் கொன்று குவிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தலைநகர் பாக்தாத் நகரில் ஒரு பெரிய பள்ளத்திலிருந்து 35 உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 300 க்கும் மேற்பட்டோர் ஐ.எஸ் தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். 

Categories: World
Image
Subscribe to ஐ.எஸ். தீவிரவாதிகள்