​ஹாக்கிக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள 'ஜெய்ஹிந்த் இந்தியா' ஆல்பம்!

November 18, 2018 1 view Posted By : manojbAuthors
Image

வரும் நவம்பர்  28ம் தேதி ஒடிஷா மாநிலத்திலுள்ள புவனேஷ்வர் நகரில் ஆண்களுக்கான உலகக் கோப்பை ஹாக்கி போட்டி துவங்கவுள்ளது. இந்த ஹாக்கி உலகக்கோப்பை இந்தியாவில் நடக்கவுள்ளதால் இதனை பெரும்பாலான மக்களிடம் கொண்டு சேர்க்க ஏ.ஆர். ரஹ்மான் இசையமைப்பில் 'ஜெய்ஹிந்த் இந்தியா' எனும் தீம் சாங் ஒன்று தயாராகியுள்ளது. 

அந்தப் பாடலின் முன்னோட்டத்தை இன்று ஏ.ஆர். ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் . இந்த முன்னோட்டத்தில் நயன்தாரா, ஷாரூக்கான், ட்ரம்ஸ் சிவமணி, இந்திய ஹாக்கி விளையாட்டு வீரர்கள் எனப் பலரும்  நடித்திருக்கின்றனர். இந்தியர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் இந்த ஆல்பம் உருவாகியுள்ளது. 

இந்த ஆல்பத்தை ரஹ்மானே தயாரித்துள்ளார். ரஹ்மான் உடன் இணைந்து குல்சார், நீத்தி மோஹன், ஸ்வேதா மோஹன், ஷாஷா திருப்பதி, டிரம்ஸ் சிவமணி ஆகியோரம் இப்பாடலில் முக்கிய பங்காற்றியுள்ளனர். இப்பாடலை உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவுள்ள மில்லெனியம் சிட்டியில் கட்டாக்கில் 28 ம் தேதி ஏ.ஆர் ரஹ்மான் மேடையில் நேரடியாக பாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

  

Categories: Sports
Image

சிறந்த ஆல்பத்திற்கான பரிசு

November 02, 2014 0 views Posted By : editor5Authors
Image

லண்டனில் நடைபெற்ற 2014ம் ஆண்டிற்கான பார்க்லே மெர்குரி பரிசை எடின்பர்க் டிரியோ யங் பாதர்ஸ் வென்றிருக்கிறார்கள்.யங் பாதர்ஸ் இசையமைத்த முதல் ஆல்பமான டெட் ஆல்பத்திற்கு இந்த பரிசு கிடைத்துள்ளது.பல இசைக்கலைஞர்கள் அடங்கிய தேர்வுகுழுவால் டெட் சிறந்த ஆல்பமாக தேர்வாகி இருப்பது சிறப்புக்குரியது.டெட் ஆல்பத்தின் வெற்றி நாயகர்களுக்கு 20 லட்சம் ருபாய் பரிசாக கிடைத்துள்ளது.

Categories: Cinema
Image
Subscribe to ஆல்பம்