ரித்திக் ரோஷன் விவாகரத்து வழக்கு

November 02, 2014 1 view Posted By : editor5Authors
Image

பாலிவுட்டின் அழகிய தம்பதிகளாக வலம் வந்த ரித்திக் ரோசன் - சுசானே வின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.1980 ல் ஒரு குழந்தை நட்சத்திரமாக ஆஷா என்னும் திரைப் படத்தில் அறிமுகமான ரித்திக் 2000 ம் ஆண்டில்  முதன் முதலில்  கஹோ நா... பியார் ஹே எனும் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார்.. இப்படம் பெரும் வெற்றி அடைந்தது..அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்த ரித்திக்,  கிரிஷ், தூம் 2, ஜோதா அக்பர் போன்ற வெற்றி படங்களை கொடுத்தார்..இவரது நடிப்பிற்கும், டான்சுக்கும் மயங்காதவர்கள் யாருமே இல்லனு சொல்லலாம்.அந்த அளவிற்கு சிறப்பாக நடிக்க கூடியவர் நடிகர் ரித்திக்.
பாலிவுட்டின் அழகிய தம்பதிகளாக வாழ்ந்து வந்தவர்கள் ரித்திக் ரோஷனும், சுசானேவும். யார் கண்பட்டதோ தெரியவில்லை, இப்போது இவர்கள் இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். இருவரும் விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறி உள்ளனர்.அதன் விளைவாக இன்று இவர்கள் கேஸ் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.

Categories: Cinema
Image
Subscribe to ஹிரித்திக் ரோஷன்