​சர்வதேச கால்பந்து போட்டியில் இந்திய அணி வெற்றி!

June 11, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

கண்டங்களுக்கு இடையிலான சர்வதேச கால்பந்து போட்டித்தொடரில் கென்யாவை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.

மும்பையில் நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா-கென்யா அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கிய முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது. இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி தன் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதுடன், ஆட்டத்தின் 8வது மற்றும் 29வது நிமிடங்களில் கோல் அடித்து அசத்தினார். 

இதன் காரணமாக ஆட்டத்தின் முதல்பாதி முடிவில் 2-க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் இந்தியா முன்னிலை வகித்தது. தொடர்ந்து 2-வது பாதியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியதால், கென்யா அணியால் கோல் ஏதும் அடிக்க முடியாமல் திணறியது. ஆட்டநேர முடிவில் இந்தியா 2-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது.

இந்த போட்டியில் இரண்டு கோல்கள் அடித்த இந்திய கெப்டன் சுனில் சேத்ரி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். தற்போது விளையாடி வரும் வீரர்களில் சர்வதேச போட்டிகளில் அதிக கோல் அடித்தவர்கள் பட்டியலில் ஒரு படி முன்னேறி உள்ளார் சுனில் சேத்ரி... அர்ஜெண்டினாவின் மெஸ்சியை சமன் செய்து 2வது இடத்திற்கு அவர் முன்னேறி உள்ளார். 

Categories: Sports
Image

பிரேசில் மராத்தான்: எத்தியோப்பிய வீரர்கள் ஆதிக்கம்

January 01, 2015 0 views Posted By : suryaAuthors
Image

பிரேசிலில் நடைபெற்ற மராத்தான் போட்டியில் எத்தியோப்பிய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். உடல் வலிமையை பறைசாற்றும் இந்தப் போட்டியில் ஆடவர் மற்றும் மகளிர் பிரிவில் எத்தியோப்பிய வீரர்கள் சாம்பியன் பட்டம் வென்றனர்.

பிரேசிலின் சா பாலே நகரில் ஆண்டுதோறும் புத்தாண்டை முன்னிட்டு மராத்தான் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். 90-வது ஆண்டாக இந்த முறை களைகட்டிய ஓட்டப் பந்தயப் போட்டியில் 40 நாடுகளைச் சேர்ந்த 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். 

சுமார் 15 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபெற்ற இந்தப் போட்டியில் ஆஃப்ரிக்க நாடுகளைச் சேர்ந்த ஓட்டப் பந்தய வீரர்கள் முன்னிலை பெற்றனர்.

மகளிர் பிரிவில் எத்தியோப்பிய வீராங்கனை எமர் வுடே 50 நிமிடம் 43 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து முதலிடம் பிடித்தார். இரண்டாவது இடத்தையும் எத்தியோப்பிய வீராங்கனையே பிடித்தார்.

இதே போல் ஆடவர் பிரிவில் எத்தியோப்பிய வீரர் தாவித் 45 நிமிடத்தில் பந்தய தூரத்தைக் கடந்து சாம்பியன் பட்டம் வென்றார். கென்ய வீரர் ஸ்டான்லி இரண்டாமிடம் பிடித்தார்.

Categories: Sports
Image

கென்யா: கடுமையாக பாதிக்கப்பட்டு சுற்றுலாத்துறை

December 24, 2014 2 views Posted By : sathisAuthors
Image

இந்த ஆண்டில் நடைபெற்ற பல்வேறு தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக கென்யா சுற்றுலாத்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எப்போதும் பரபரவென்று இருக்கும் அந்நாட்டு கடற்கரைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.

ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் நாடு கென்யா. நாட்டின் முக்கிய வருவாய் ஆதாரமாக, சுற்றுலாத் துறை திகழ்ந்து வருகிறது. எழில் கொஞ்சும் கடற்கரைகள், கண்ணுக்கினிய காட்சிகள், மனதைக் கொள்ளை கொள்ளும் அழகு என சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் பார்வையிட பல நாடுகளிலிருந்தும் பயணிகள் வருகை புரிகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அங்கு நடைபெற்று வரும் தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக அந்நாட்டின் சுற்றுலாத்துறை பெரும் சரிவைச் சந்தித்து வருகிறது. சோமாலியாவை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அல் சபாப் இயக்கம் கென்யாவில் நடைபெற்ற பல தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று உள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதல் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது என்கிற நிலையில், உலகின் பல நாடுகள் தங்கள் நாட்டவரை ஆப்பிரிக்க நாடுகளுக்குச் செல்லவேண்டாம் என்று எச்சரிப்பது மேலும் பாதிப்புக்களை ஏற்படுத்துகிறது.

செப்டம்பர் மாதம் நைரோபியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 67 வெளிநாட்டவர்கள் கொல்லப்பட்டனர் என்கிற நிலையில், கென்யாவுக்குப் பயணம் மேற்கொள்ள யாரும் விரும்புவதில்லை என்பதே உண்மை. இந்த நிலை மாறவேண்டும் என்பதே அந்நாட்டு சுற்றுலாவை நம்பி வாழ்வோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Categories: World
Image

கென்யாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது

December 17, 2014 0 views Posted By : suryaAuthors
Image

கென்யாவில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஏராளமானோர் சிக்கி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தலைநகர் நைரோபியில் உள்ள மகோன்ஜெனி பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மீட்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இடிபாடுகளில் சிக்கி இருந்த 7 பேரை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக கென்ய மருத்துவமனையில் அனுமதித்தனர். கட்டிடம் இடிந்து விழுந்ததற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் பரபரப்பும் பதட்டமும் காணப்படுகிறது.

Categories: World
Image

பாகிஸ்தானில் கிரிக்கெட் விளையாட கென்யா சம்மதம்

November 26, 2014 0 views Posted By : sathisAuthors

பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க கென்யா சம்மதம் தெரிவித்துள்ளது.

அடுத்த மாதம் பாகிஸ்தான் செல்லும் கென்யா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகளும் விளையாடும் முதல் போட்டி வரும் 13-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது இலங்கை வீரர்கள் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பாகிஸ்தானில் நடைபெறவிருந்த சர்வதேச போட்டிகள் தடை செய்யப்பட்டன. 

Categories: Sports
Image

கென்யாவில் தீவிரவாதிகள் அட்டூழியம்: 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்

November 22, 2014 0 views Posted By : sathisAuthors
Image

கென்யாவில் பேருந்தைக் கடத்தி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், 28 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். 

கென்யாவில் மண்டீரியாவில் இருந்து தலைநகர் நைரோபியை நோக்கிச் சென்றுகொண்டிருந்த பேருந்தை துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் திடீரென்று மறித்துக் கடத்தினர். பேருந்தில் இருந்த பயணிகள் மீது துப்பாக்கி சூடும் நடத்தப்பட்டது. இன்று காலை 5. 45 மணிக்கு நிகழ்ந்த இந்த கடத்தலில் சுமார் 100 பேர் துப்பாக்கி ஏந்தி வந்து பயணிகளை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கிச் சுட்டனர் என்று கென்யாவின் உள்ளூர் பத்திரிக்கை செய்தியாளர் தெரிவித்தார். பயணிகளை பல குழுக்களாகப் பிரித்த தீவிரவாதிகள் குறிப்பிட்ட குழுவை மட்டும் விடுவித்துவிட்டு மற்ற குழுவில் இருந்தவர்களைத் துப்பாக்கியால் சுட்டதாகவும் தெரியவந்துள்ளது. 

Categories: World
Image

சோமாலிய அகதி முகாம் பான் கி மூன் பார்வையிட்டார்

November 01, 2014 0 views Posted By : suryaAuthors
Image

கென்யாவில் இருக்கும் சோமாலிய அகதிகள் முகாமை. ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் பார்வையிட்டார்.
முன்னதாக சோமாலிய தலைநகர் மொகதிசுக்கு வருகை தந்த அவர், சோமாலிய ராணுவத்தையும், ஆப்பிரிக்க அமைதிப் படையையும் சமாதானத்திற்காக போராடிக் கொண்டிருப்பதற்காக பாராட்டு தெரிவித்தார். பிறகு கென்யா எல்லையில் இருக்கும் சோமாலிய அகதிகள் முகாமிற்கு சென்ற அவர். அகதிகளிடம் உரையாடினார். விரைவில் அவர்களை சொந்த இடங்களில் குடியமர்த்தும் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இந்த சோகமான நிகழ்வு தொடர்வது வருத்தமளிக்கிறது எனவும் தெரிவித்தார்.

 

Categories: World
Image
Subscribe to Kenya