​படகில் கொண்டுசெல்லப்பட்ட டைனோசர் உருவம்!

May 24, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

"Jurassic World: Fallen Kingdom" திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதை முன்னிட்டு, லண்டன் தேம்ஸ் நதியில் டைனோசர் உருவம் வலம் வந்தது. 

பயோனா இயக்கியுள்ள இந்த படம் ஜூன் 6ம் தேதி திரைக்கு வருகிறது. Chris Pratt, Bryce Dallas Howard, Jeff Goldblum உள்ளிட்டோர் இப்படத்தில் நடித்துள்ளனர். 

திரைப்படத்தை ஊக்குவிக்கும் விதமாக தேம்ஸ் நதியில், படகு ஒன்றில் டைனோசர் உருவம் கொண்டு செல்லப்பட்டது. London Bridge, நாடாளுமன்றம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வலம் வந்த டைனோசர் உருவத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர். 

Categories: World
Image

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு கொண்டு வர சிபிஐ தீவிரம்!

April 27, 2018 0 views Posted By : elangoAuthors
Image

வங்கி மோசடி வழக்கில் பிரிட்டனில் தஞ்சமடைந்துள்ள பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையா, கர்நாடகத் தேர்தலில் வாக்களிக்க முடியாதது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். 

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து 9,000 கோடி ரூபாய் அளவுக்கு கடன் வாங்கிய விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். அவர் மீது இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டு, நிலுவையில் உள்ளன. 

இந்த நிலையில், லண்டன் போலீசாரால் கைது செய்யப்பட்ட மல்லையா, தற்போது, ஜாமீனில் உள்ளார். அவரை நாடு கடத்தக்கோரி லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணைக்காக அவர் அடிக்கடி நீதிமன்றத்தில் ஆஜராகி வருகிறார். 

அதன்படி, நீதிமன்றத்தில் இன்று ஆஜராக வந்த மல்லையாவிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். அப்போது, கர்நாடக தேர்தலில் ஓட்டுபோட இந்தியாவுக்கு செல்வீர்களா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், கர்நாடக தேர்தலில் வாக்களிக்க முடியாதது மிகவும் வருத்தம் அளிப்பதாக கூறினார். தற்போது ஜாமீனில் உள்ளதால், பிரிட்டனை விட்டு வெளியேற முடியாத நிலையில் இருப்பதாகவும் மல்லையா குறிப்பிட்டார். 

தற்போது இந்தியாவில் நிலவும் அரசியல் நிலவரம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதுபற்றி தமக்கு தெரியாது என்றும், எனவே கருத்து தெரிவிக்க இயலாது என்றும் கூறினார். 

இதனிடையே, மல்லையாவை நாடு கடத்தக் கோரும் வழக்கில், சிபிஐ தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட ஆதாரங்களை, லண்டன் வெஸ்ட்மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இந்திய சிறைகளின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பை காரணம்காட்டி நாடு கடத்த மல்லையா தரப்பு வழக்கறிஞர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்ட தரமான சிறை அறை இந்தியாவில் தயாராக இருப்பதாகவும் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, வழக்கின் விசாரணையை, ஜூலை 11-ம் தேதிக்கு நீதிபதி எம்மா ஆர்பத்நாட் ஒத்திவைத்தார். மேலும், அன்றைய விசாரணையின் போது, மல்லையாவை நாடு கடத்துவது தொடர்பாக தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Categories: World
Image

​5 நாள் பயணமாக வெளிநாடு செல்கிறார் மோடி!

April 16, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

பிரிட்டன், சுவீடன் நாடுகளில் 5 நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று டெல்லியில் இருந்து புறப்பட்டு செல்கிறார். 

ஸ்வீடன் தலைநகர் ஸ்டால்ஹோமில் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் இந்தோ-நார்டியாக்  முதல் உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார். மேலும், இந்தியாவுடனான வர்த்தகம், முதலீடு, சுற்றுச்சூழல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பருவநிலை மாற்றம் தொடர்பாகவும் இருநாட்டு தலைவர்களுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளார். 

அங்கிருந்து 17-ம் தேதி மாலை பிரிட்டனுக்கு செல்லும் பிரதமர் மோடி, லண்டன் நகரில் நடைபெறும் காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். 

18-ம் தேதி பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Categories: India
Image

விஷ வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்ட உளவாளி உடல்நலம் தேறி வருவதாக தகவல்!

April 07, 2018 0 views Posted By : nandhakumarAuthors
Image

விஷ வாயு தாக்குதலில் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாஜி ரஷ்ய உளவாளி குணமடைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ரஷ்ய உளவுப்பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் செர்ஜி ஸ்கிரிபால். பிரிட்டனில் தனது மகள் யூலியாவுடன் தங்கியிருந்த போது, கடந்த மார்ச் 4-ஆம் தேதி விஷவாயு தாக்குதலுக்கு ஆளானார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலிஸ்பெரி மாவட்ட மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். 

இந்த தாக்குதலை ரஷ்யா நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை கண்டித்து பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டில் பணியாற்றிய ரஷ்ய தூதரக அதிகாரிகளை வெளியேற்றியது. 

இந்நிலையில், செர்ஜி ஸ்கிரிபால் குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories: World
Image

“சிரிய மக்கள் மீதான தாக்குதலை உடனே நிறுத்துங்கள்!” : லண்டன் தமிழர்கள் முழக்கம்!

March 21, 2018 0 views Posted By : manojAuthors
Image

சிரியாவின் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, இங்கிலாந்து பிரதமர் அலுவலகம் முன்பு, செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அகதிகள் உரிமைக்கான அமைப்பு ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், சோஷலிசக் கட்சி, தமிழ் சொலிடரிட்டி உள்ளிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். அவர்கள், சிரியாவின் மீது குண்டு போடுவதை நிறுத்த வேண்டும், யுத்தவெறியர்களை சிரியாவில் இருந்து விரட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்ததுடன், கல்விக்கும் மருத்துவத்திற்கும் செலவு செய், யுத்தத்திற்கு செலவு செய்யாதே போன்ற கோரிக்கை முழக்கங்களையும் முன்வைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே அவ்விடத்தில் கடந்த ஒருவார காலமாக போராட்டத்தில் ஈடுபட்டுவரும் குர்திஸ் இன மக்களும், அகதிகள் உரிமைகள் அமைப்பின் இப்போராட்டத்திற்கு தமது ஆதரவை வழங்கினர். அதே போன்று அகதிகள் உரிமைகள் அமைப்பும் குர்திஸ் இன மக்களின் போராட்டத்திற்கு பரஸ்பர ஆதரவை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அப்ரின் ( Afrin) மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும், குர்திஷ் இன மக்கள் மீதான தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும், குர்திஷ் இன மக்கள் மீதான துருக்கி அரசின் ஒடுக்குமுறைகள் நிறுத்தப்பட வேண்டும், துருக்கி அரசிற்கு இங்கிலாந்து ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குர்திஸ் இன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உலகம் முழுவதும் 6.5 கோடிக்கும் மேற்பட்ட அகதிகள் உணவு, மருத்துவம் மற்றும் பாதுகாப்பான வாழ்விடமில்லாமலும் அவதியடைந்து வருவதாகவும், இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் தமது சுயலாபத்திற்காக ஆயுதங்களை விற்பனை செய்வதனால்தான் உலகெங்கும் யுத்தங்களும், அதன் தொடர்ச்சியாக அகதிகளும் உருவாகி வருவதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம்சாட்டினர். 

Categories: World
Image

நீட் தேர்விலிருந்து விலக்கு பெற வேண்டும் என்பதே அரசின் கொள்கை : அமைச்சர் செங்கோட்டையன்

January 29, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

லண்டனின் அனைத்து நாடுகள் பங்கேற்ற பள்ளிக் கல்வித்துறை மாநாட்டில் புதிய கல்விக் கொள்கைகளை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் பிப்ரவரி 3-ம் தேதிக்குள் நீட் தேர்விற்காக 412 பொதுத் தேர்வு மையங்கள் தொடங்கப்பட்டு 72,000 மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று கூறினார்.

நீட் தேர்வை பொறுத்தவரை மத்திய அரசிடம் தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என்பது கொள்கை முடிவாக உள்ளது என்றும் செங்கோட்டையன் தெரிவித்தார்.

Categories: Tamilnadu
Image

விஜய் மல்லையாவின் ஜாமின் நீட்டிப்பு

January 12, 2018 0 views Posted By : manojAuthors
Image

விஜய் மல்லையாவை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கில், ஏப்ரல் 2ம் தேதி வரை அவருக்கு ஜாமினை நீட்டித்து லண்டன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல்வேறு வங்கிகளிடம் இருந்து வாங்கிய 9 ஆயிரம் கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தாததால், தொழிலதிபர் விஜய் மல்லையா மீது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்குகளில் இருந்து தப்பிப்பதற்காக, அவர் இங்கிலாந்தில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்நிலையில், விஜய் மல்லையாவை 
இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, விசாரணைக்கு விஜய் மல்லையா நேரில் ஆஜரானார். வாதங்களை கேட்ட நீதிமன்றம், மல்லையாவுக்கு வழங்கிய ஜாமினை வரும் ஏப்ரல் 2ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. 

Categories: India
Image

விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்த டெல்லி நீதிமன்றம்!

January 05, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

அன்னிய செலாவணி மோசடி வழக்கில் விஜய் மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பல்வேறு வங்கிகளில் இருந்து 9 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வாங்கிய தொழில் அதிபர் விஜய் மல்லையா, அவற்றை திருப்பி செலுத்தாமல் மோசடியில் ஈடுபட்டார்.

மல்லையா மீது இந்தியாவின் பல்வேறு நீதிமன்றங்களில், வழக்குகள் நிலுவையில் இருக்கும் நிலையில், அவர் தற்போது இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளார். அவரை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

இந்நிலையில், இங்கிலாந்து நிறுவனத்துக்கு சுமார் 1 கோடியே 30 லட்சம் ரூபாயை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.

அந்நிய செலாவணி ஒழுங்குமுறை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை விசாரித்த டெல்லி நீதிமன்றம், விசாரணைக்காக ஆஜராகுமாறு மல்லையாவுக்கு பலமுறை சம்மன் அனுப்பியது.

எனினும் அவர் ஆஜராகாத நிலையில், மல்லையாவை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories: India
Image

விமானத்திலேயே சண்டையிட்டுக் கொண்ட விமானிகளை பணியிடை நீக்கம் செய்த விமான நிறுவனம்!

January 04, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

விமானத்தில் சண்டையிட்டுக் கொண்ட இரண்டு விமானிகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. 

மும்பையில் இருந்து லண்டனுக்கு கடந்த 1-ம் தேதியன்று புறப்பட்ட விமானத்தில் அதன் விமானிகள் இருவரும் சண்டையிட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. இதில் பெண் விமானியின் கன்னத்தில் சக விமானி அறைந்ததால் விமானத்தின் காக் பிட்டை விட்டு வெளியே வந்த பெண் விமானி அழுது கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் விமான பணிபெண்கள் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் விமானம் லண்டன் போய் சேர்ந்தது. இது தொடர்பாக விமானப் பயணிகள் மற்றும் சக ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் சம்பந்தப்பட்ட அந்த இரு விமானிகளையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர்.

Categories: India
Image

பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொல்லும் திட்டம் முறியடிப்பு!

December 07, 2017 0 views Posted By : krishnaAuthors
Image

பிரிட்டன் பிரதமர் தெரசா மே-வை கொலை செய்யும் திட்டத்தை லண்டன் போலீசார் முறியடித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.  

வடக்கு லண்டனை சேர்ந்த நைமூர் ரஹ்மான் மற்றும் முஹமது இம்ரான் என்ற இரண்டு இஸ்லாமிய இளைஞர்கள் பிரதமர் தெரசா மே-வை கொலை செய்ய திட்டம் தீட்டியதாகக் கூறி லண்டன் போலீசார் கைது செய்துள்ளனர்.

டவுனிங் சாலையில் உள்ள தெரசா மே அலுவலகத்தில் குண்டு வீசி தாக்க அவர்கள் திட்டமிட்டிருந்ததாகவும் அவர்களிடம் இருந்து இரண்டு வெடி குண்டுகள்  கைப்பற்றப்பட்டதாகவும் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரதமரின் அலுவலக வாயில் முன்பு வெடிகுண்டுகளுடன் காத்திருந்த போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட அந்த இளைஞர்களை லண்டன் போலிசார் இன்று வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 

Categories: World
Image
Subscribe to லண்டன்