பாஜக கூட்டணி அரசில் பங்கேற்க சிவசேனா நிபந்தனை

October 29, 2014 0 views Posted By : suryaAuthors
Image

மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி அரசில் பங்கேற்க 13 அமைச்சர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சிவசேனா நிபந்தனை விதித்துள்ளது. மகாராஷ்டிராவில் சிவசேனா ஆதரவுடன் பாஜக அரசு அமைகிறது. அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக நாளை மறுதினம் பாஜக மாநிலத் தலைவர் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்கிறார். முன்னதாக பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராக பட்நாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சியில் சிவசேனா பங்கேற்குமா என்பது தற்போதுவரை கேள்விக் குறியாக உள்ளது. கூட்டணி அரசில் பங்கேற்க 13 அமைச்சர் பதவி மற்றும் துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சிவசேனா நிபந்தனை விதித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

Categories: அரசியல்
Image
Subscribe to BJP alliance