ஜப்பானில் ரோபோக்களை மட்டுமே கொண்டு உருவாக்கப்படும் விவசாய பண்ணை

February 03, 2016 0 views Posted By : suryaAuthors
Image

உலகிலேயே முதன்முறையாக ரோபோக்களை மட்டுமே கொண்டு விவசாய பண்ணையை ஐப்பான் உருவாக்குகிறது.

ஜப்பானில் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அதனால், கடுமையான தொழிலாளர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதையடுத்து, ரோபோ தொழிலாளர்களை பயன்படுத்த ஜப்பான் களமிறங்கியிருக்கிறது. 

விதைப்பதை தவிர தண்ணீர் ஊற்றி வளர்த்து அறுவடை செய்வது வரை அனைத்து வேலைகளையும் ரோபோக்கள் மட்டுமே செய்யும் விவசாய பண்ணை ஒன்றை ஜப்பான் நிறுவனம் உருவாக்க முடிவு செய்துள்ளது. அடுத்த ஆண்டு முதல் 4,400 சதுர அடியில் இந்த பண்ணை செயல்பாட்டுக்கு வருகிறது.

அண்மையில் வெளியான ஆய்வு ஒன்றில் 2035ம் ஆண்டுக்குள் ஜப்பானில் செய்யப்படும் பணிகளில் பாதி வேலைகள், ரோபோக்கள் மூலம் மேற்கொள்ளப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories: World
Image

ஜப்பான் பனிப்பொழிவில் 3 பேர் பலி

December 18, 2014 1 view Posted By : suryaAuthors

ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் பெய்த கடும் பனிமழை காரணமாக சுகாயோ, டோக்கியா மற்றும் கான்சாவா ஆகிய இடங்களில் கடும் பனிமழை பொழிந்துள்ளது. அதிகரித்துள்ள பனிபொழிவால் நீகாட்டா மற்றும் அகிடா மாகாணங்களில் 3 பேர் உயிரிழந்தனர். 

ஜப்பானின் பல்வேறு இடங்களில், கடுமையான பனி பொழிந்து வருகிறது. இதனால், வாகனங்கள், வீடுகள் மற்றும் சாலைகளில் பனி போர்வை போல் போர்த்திகிடக்கிறது. சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனியில் வாகனங்கள் சிக்கி பாதி வழியிலேயே நின்று விடுவதால் ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதனால் பெரும்பாலான இடங்களில், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. 

அதிகரித்துள்ள பனிப்பொழிவினால் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டுள்ளது. பனிபொழிவுடன், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி உள்ளதால், கடலலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அதிகரித்துள்ள பனிபொழிவால், நீகாட்டா மற்றும் அகிடா மாகாணங்களில் 3 பேர் உயிரிழந்தனர். 

Categories: World
Image

ஜப்பானில் பனிப்புயல், இயல்பு வாழ்க்கை பாதிப்பு

December 17, 2014 0 views Posted By : suryaAuthors

ஜப்பானின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் உள்ள சுகாயோ, டோக்கியா மற்றும கான்சாவா ஆகிய இடங்களில் கடும் பனிமழை பொழிந்துள்ளது.
ஜப்பானின் பல்வேறு இடங்களில், கடுமையான பனி பொழிந்து வருகிறது. இதனால், வாகனங்கள், வீடுகள் மற்றும சாலைகளில் பனி போர்வை போல் போர்த்திகிடக்கிறது. சாலைகளில் கொட்டிக்கிடக்கும் பனியில் வாகனங்கள் சிக்கி பாதி வழியிலேயே நின்று விடுவதால், ஓட்டுநர்கள் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். இதனால் பெரும்பாலான இடங்களில், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது. அதிகரித்துள்ள பனிப்பொழிவினால் பெரும்பாலான பள்ளிகளுக்கு விடுமுறை விடபட்டுள்ளது. பனிபொழிவுடன், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகி உள்ளதால், கடலலைகள் சீற்றத்துடன் காணப்படுகிறது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தென்கொரியாவில் இருந்து டோக்யோக வழியாக வந்த, அமெரிக்க விமானம் ஒன்று, மோசமான வானிலை காரணமாக கடும் தடுமாற்றத்தை சந்தித்துள்ளது. இதனால், அந்த விமானம் டோக்யோவில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டது.

 

Categories: World
Image

ஜப்பான் நிலநடுக்கத்தால் அணு உலைகளுக்கு பாதிப்பில்லை

November 24, 2014 0 views Posted By : suryaAuthors
Image

ஜப்பானில் நிலநடுக்கத்தால் அந்தப் பகுதியில் இருக்கும் 3 அணு உலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பான் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் தெரிவித்துள்ளது

ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு 180 கி.மீ. தொலைவில் உள்ள ககுபா பகுதியில் நேற்று முன்தினம் மாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 புள்ளிகள் பதிவானதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில் 3 அணு உலைகள் உள்ளன. ஆனால் இந்த நிலநடுக்கத்தால் அந்த உலைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என ஜப்பான் அணுசக்தி ஒழுங்குமுறை வாரியம் கூறிவிட்டது.

Categories: World
Image

ஜப்பான் நாடாளுமன்றத்திற்கு விரைவில் தேர்தல்: பிரதமர்

November 19, 2014 0 views Posted By : suryaAuthors

ஜப்பான் நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் முடிவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அந்த நாட்டில் தேர்தல் நடத்தவிருப்பதாக பிரதமர் அபே ஷின்ஸா அபே அறிவித்தார்.

மேலும்,  பொருளாதார சரிவை தடுத்து நிறுத்துவதற்காக கொண்டுவரவிருந்த விற்பனை வரி உயர்வையும் அவர் தள்ளி வைத்தார்.இதுகுறித்து பேசிய அவர், நாடாளுமன்றக் கீழவையை இம்மாதம் 21-ஆம் தேதியுடன் கலைக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், வரிகளை 8-லிருந்து 10 சதவீதமாக உயர்த்தும் முடிவையும், அடுத்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை தள்ளி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். தேர்தல் தேதியை அவர் அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்த மாதம் 14-ஆம் தேதி தேர்தல் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது.
ஜப்பானின் பொருளாதாரம் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், பிரதமர் அபே பல்வேறு பொருளாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தேர்தலை மனதில் கொண்டு, பல்வேறு சலுகைத் திட்டங்களையும் அவர் அறிவித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

Categories: World
Image

கனடாவில் மாயமான ஜப்பான் பெண்

November 01, 2014 2 views Posted By : suryaAuthors
Image

கனடாவில் மாயமான ஜப்பான் பெண் சுற்றுலா பயணியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஜப்பானில் எல்லோனைப் பகுதியை சேர்ந்த அட்சுமி யோசிகுபு என்ற பெண் பயணி, கடந்த வாரம் கனடா நாட்டில் சுற்றுலா மேற்கொண்டார். ஆனால் கனடாவில் இருந்து அவர் ஜப்பான் திரும்பவில்லை. இதனை அடுத்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். எல்லோனை என்பது ஜப்பானில் உள்ள சுற்றுலா தலங்களில் முக்கியமானதாகும். இங்கு கடந்த 2 வருடங்களில் மட்டும், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் அங்கு வருகை தந்துள்ளனர்.

Categories: World
Image

ஜப்பானில் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி

October 28, 2014 2 views Posted By : suryaAuthors
Image

ஜப்பானில் நவீன அறிவியல் கண்டுபிடிப்புகளின் கண்காட்சி நடைபெற்றது. இதில் பாட்டுப்பாடி, கைத்தட்டி, கிட்டார் வாசித்து அசத்திய ரோபோக்கள் பார்வையாளர்களை வசீகரித்தது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற இந்த கண்காட்சியில் ஆயிரத்து முண்ணூறுக்கும் மேற்பட்ட வடிவமைப்பாளர்கள் தங்களது கண்டுபிடிப்புகளை காட்சிபடுத்தினர். இதில் நவீன தொழில்நுடப்பத்திற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட ரோபோ ஒன்று செயற்கை நுரையீரல் மற்றும் குரல்வளைகொண்டு பாடல் பாடியது. தத்ரூபமாக பெண்ணை போலவே காட்சியளித்த ரோபோ ஒன்று நுட்பமான முக பாவங்களையும் பெண்களைப் போலவே காண்பித்து பார்வையாளர்களை வசீகரித்தது. கைத்தட்டல் மூலம் கலக்கிய ரோபோ, கால்பந்து விளையாடிய ரோபோ, கிட்டார் வாசித்த ரோபா ஆகியவையும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதேபோல் கண்காட்சியை அழகாக்கும் விதமாக வண்ண விளக்குகளால் ஜொலித்த கலை பொருட்கள், மற்றும் நவநாகரீக பொருட்கள், அதி நவீன 3டி திரைகளும் இந்த கண்காட்சியில் இடம்பெற்றன.

Categories: Business
Image
Subscribe to Japan