​இன்ஸ்டாகிராமில் புதிய Star-ஆன 7 மாத குழந்தை!

July 26, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

வாட்ஸ் அப். ஃபேஸ்புக், ட்விட்டர் போன்று, இன்ஸ்டாகிராமிலும் அதிக நேரத்தை செலவிடுகின்றனர் இன்றைய இணையதள வாசிகள். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களையும் வீடியோக்களையும் பார்ப்பதற்கு தனி கூட்டமே இருக்கிறது.

பலர், தங்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அவர்களுக்கான பாலோயர்களை (Followers) அதிகப்படுத்துவதற்கு பல முயற்சிகளை எடுப்பர். ஆனால், தன்னுடைய அழகான முடியால் இன்ஸ்டாகிராமில் Star -ஆக வலம்வருகிறது ஜப்பானை சேர்ந்த ஒரு குழந்தை.
 

 

. ##thinout #baby#hair#babygirl#hairmax #6#6months ##Monchhi♡

A post shared by / hair diary (@babychanco) on

2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பிறந்த இந்த குழந்தைக்கு சான்கோ ( Chanco ) என்று பெயர்வைத்த பெற்றோர்,   "Hair Diary" என்ற பெயரில் அந்த குழந்தையின் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பகிர்வதற்காக இன்ஸ்டாகிராம் கணக்கை துவங்கினர். இதுவரை மொத்தம் 46 போஸ்ட் மட்டுமே பதிவேற்றம் செய்திருந்தாலும் 1.3 லட்சம் ஃபாலோயர்ஸ் (Followers) இருக்கின்றனர்.

அந்த இன்ஸ்டாகிராமில் போடப்படும் புகைப்படங்கள் அனைத்திற்கும் அதிகமானோர் லைக் செய்வது மட்டுமல்லாமல், அந்த குழந்தையின் முடியை பற்றி கருத்துக்களை தெரிவிக்கின்றனர். 

Categories: World
Image

​ஸ்போர்ட்ஸ் கார் போன்று மாறும் ரோபோ!

April 28, 2018 1 view Posted By : shanmugapriyaAuthors
Image

ஜப்பானில் ஸ்போர்ட்ஸ் கார் போன்று மாறும் மிகப்பெரிய ரோபாவை வடிவமைத்து, பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். 

12 அடிக்கும் மேலான உயரம் கொண்ட இந்த ரோபோ, அடுத்த நிமிடமே ஸ்போர்ட்ஸ் கார் போன்று, மாறும் திறன் கொண்டது. இந்த காரினுள் 2 பேர் அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோவால் மணிக்கு 100 மீட்டர் வேகத்தில் நடந்து செல்ல முடியும். தேவைப்பட்டால், அடுத்த நிமிடமே காராக மாறி, சாலையில் வேகமாக பயணிக்க முடியும். 

ரோபோ வரலாற்றில், இது ஒரு புதிய சாதனை என கருதப்படுகிறது. இது மிகவும் விலை உயர்ந்த ஓர் விளையாட்டுப் பொருள் என அதனை தயாரித்த பிரேவ் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தின் செயல் தலைவர் Kenji Ishida தெரிவித்துள்ளார். 

தீம் பார்க், விளையாட்டுப் பூங்கா போன்ற குழந்தைகளுக்கான பொழுதுப்போக்கு இடங்களில், இந்த ரோபோக்களை நிறுவ உள்ளாகவும் அவர் தெரிவித்தார். தமது மாணவப் பருவத்தில் தாம் பார்த்த அனிமேஷன் திரைப்படங்களே, இதுபோன்ற ஒரு ரோபோவை உருவாக்குவதற்கு காரணமாக அமைந்ததாகவும் Kenji Ishida தெரிவித்துள்ளார்.

Categories: World
Image

​ஜப்பானில் அதிகம் வசூல் பெற்ற இந்திய திரைப்படம்!

April 18, 2018 4 views Posted By : shanmugapriyaAuthors
Image

உலகம் முழுவதும் வசூலில் சாதனை படைத்த 'பாகுபலி-2' திரைப்படம், ஜப்பானில் ரஜினி படத்தின் வசூல் சாதனையை முறியடிக்கவில்லை என, தகவல் வெளியாகி உள்ளது. 

கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி, மீனா நடிப்பில் வெளியான 'முத்து' படம் ஜப்பானில் 'டேன்சிங் மகாராஜா' என்ற பெயரில் வெளியாகி, 1. 6 ( இந்திய மதிப்பில் சுமார் 10.5 கோடி ரூபாய்) மில்லியன் டாலர் வசூலித்தது. 

ஜப்பானில் அதிகம் வசூலித்து சாதனை படைத்த முதல் இந்திய திரைப்படம் என்ற பெருமையையும் 'முத்து' படம் பெற்றது. அமீர்கான் நடிப்பில் வெளியான ‘3 இடியட்ஸ்’ படம், 1.48 மில்லியன் டாலர்களை ( இந்திய மதிப்பில் சுமார் 9.7 கோடி ரூபாய்)  வசூலித்து இரண்டாம் இடத்தில் உள்ளது. 

'பாகுபலி-2' திரைப்படம் 100 நாட்கள் ஓடி, 1.3 மில்லியன் டாலர் ( இந்திய மதிப்பில் சுமார் 8.3 கோடி ரூபாய்)  வசூலித்து 3ஆம் இடத்தையே பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Categories: World
Image

ஆசிய பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து அபார ஆட்டம்!

April 28, 2017 0 views Posted By : krishnaAuthors
Image

ஆசிய பேட்மிண்டன் தொடரின் காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை பி.வி. சிந்து முன்னேறியுள்ளார். 

சீனாவில் நடந்து வரும் இந்த தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டத்தில் ஜப்பானின் Aya Ohori ஐ சிந்து எதிர் கொண்டார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து முதல் செட்டை 21க்கு 14 என்ற செட் கணக்கில் தனதாக்கினார். 2 வது செட்டிலும் சிந்து ஆதிக்கம் செலுத்தினார். சிந்துவின் ஆதிரடி ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் ஜப்பான் வீராங்கனை எளிதில் வீழ்ந்தார்.

ஆட்ட முடிவில் 21 க்கு 14, 21 க்கு 15 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று காலிறுதிக்கு சிந்து முன்னேறினார்.

Categories: Sports
Image

​விண்வெளி ஆராய்ச்சியில் புதிய சாதனை படைத்துள்ள ஜப்பான்!

September 24, 2018 1 view Posted By : shanmugapriyaAuthors
Image

விண்கல்லில் முதல்முறையாக இரண்டு ஆளில்லா ரோவர்களை தரையிறக்கி ஜப்பான் வரலாற்று சாதனை படைத்துள்ளது. 

ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா, கடந்த 2014-ம் ஆண்டு, பூமிக்கு அருகேயுள்ள ரைகு என்ற விண்கல்லின் மாதிரிகளை சேகரிப்பதற்காக ஹயபுஸா-2 என்ற ஆளில்லா விண்கலத்தை விண்ணிற்கு அனுப்பியது. இந்த விண்கலம் கடந்த ஜூன் மாதம் 27-ம் தேதி ரைகுவை சென்றடைந்தது. 

இந்நிலையில், ஹயபுஸாவின் பொருத்தப்பட்டிருந்த மினர்வா-2 என்று அழைக்கப்படும் இரண்டு ஆளில்லா ரோவர்கள் விண்கல் மீது வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டதாக ஜாக்ஸா அறிவித்துள்ளது. அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஜாக்ஸா வெளியிட்டுள்ளது.

Categories: World
Image

​அதிக கதிர்வீச்சை வெளியேற்றக்கூடிய செல்போன் எது தெரியுமா?

September 04, 2018 5 views Posted By : shanmugapriyaAuthors
Image

தற்போது விற்பனையிலுள்ள ஸ்மார்ட் போன்களிலேயே அதிக கதிர்வீச்சை வெளியேற்றக்கூடிய  போன்கள் பற்றிய தகவல்களை ஜெர்மனியை சேர்ந்த கதிர்வீச்சு பாதுகாப்பு அமைப்பு வெளியிட்டுள்ளது.

உலகிலேயே அதிக கதிர்வீச்சு வெளியேற்றக்கூடிய ஸ்மார்ட்போன் சீனாவில் தயாரிக்கப்படும் சியாமி எம் ஐ ஏ1 (xiaomi mi a1) என ஆய்வு முடிவு கூறுகிறது.

சீனாவில் தயாரிக்கப்படும் ஒன் பிளஸ் 5டி (One Plus 5T)  மொபைல் அதிக கதிர்வீச்சை வெளியேற்றுகிறது.

ஒன் பிளஸ் 5டி போனுக்கு பிறகு அடுத்த 5 இடங்களிலும் சீனாவில் தயாரிக்கப்படும் வாவ் வே (huawei) மொபைலின் மாடல்கள் இடம்பெற்றுள்ளன.

எட்டாவது இடத்தில் ஒன் பிளஸ் 5 (One Plus 5) மொபைலும், ஒன்பதாவது இடத்தில் வாவ் வே P9 (huawei p9) மொபைலும் உள்ளன.

அமெரிக்காவில் உள்ள ஆப்பிள் கம்பெனி தயாரிக்கும் ஐ போன் 7 கதிர்வீச்சு வெளியேற்றும் மொபைல்போன்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளது 

ஆபத்துக்குரிய கதிர்வீச்சை வெளியேற்றும் முதல் 15 மொபைல்களில்  12  சீனாவில் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: World
Image

சூரை மீன் ஏற்றுமதி தொடர்பாக, ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்யப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்

August 27, 2018 3 views Posted By : manojbAuthors
Image

அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், சூரை மீன் ஏற்றுமதி தொடர்பாக, ஜப்பானுடன் ஒப்பந்தம் செய்யப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த ஆண்டு ஏற்பட்ட ஓகி புயலில் சிக்கி உயிரிழந்த 177 மீனவர்களில், 136 பேரின் குடும்பத்தில் ஒருவருக்கு, அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார். கல்வித் தகுதி அடிப்படையில், இந்த வேலை வழங்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான படகுகள் தமிழக மீனவர்களுக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளதாகவும் ஜெயக்குமார் தெரிவித்தார்.  

Categories: Tamilnadu
Image

​ஜப்பானில் கனமழையால் 200பேர் உயிரிழந்ததையடுத்து தற்போது வெயிலுக்கு 14 பேர் பலி!

July 17, 2018 0 views Posted By : manojbAuthors
Image

ஜப்பானில் வீசி வரும் அனல் காற்று காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஜப்பானில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. அப்போது பெய்த கனமழை காரணமாக அங்கு 200 பேர் உயிரிழந்த நிலையில் உடனடி மாறுதலாக அங்கு கடும் வெப்பம் நிலவி வருகிறது. அதாவது அதிகபட்சமாக அங்கு சுமார் 40 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. 

அதுமட்டுமின்றி சராசரியாக ஜப்பானின் அனைத்து பகுதிகளிலும் 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது. இதையடுத்து கடும் வெயில் காரணமாக மக்கள் வீடுகளிலேயே முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடையின்றி வெளியில் வரமுடியாத அளவு வெப்பநிலை ஜப்பானை வாட்டிவதைத்து வருகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானோர் வெளியில் வருவதற்கு மிகுந்த சிரமமாக உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

சோகம் என்னவெனில் சமீபத்தில் மழை காரணமாக ஏற்கனவே 200 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது ஜப்பானில் வீசி வரும் அனல் காற்று காரணமாக கடந்த 3 நாட்களில் மட்டும் 14 பேர் உயிரிழந்துள்ளனர் 

Categories: World
Image

​ஜப்பானில் கனமழையால் வெள்ளப்பெருக்கு; 48 பேர் உயிரிழப்பு!

July 08, 2018 0 views Posted By : manojbAuthors
Image

ஜப்பானின் பல்வேறு பகுதிகளில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 48 பேர் பலியானதாகவும், 22 பேர் மாயமாகியுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது. 

கிழக்கு மற்றும் மேற்கு ஜப்பானில் உள்ள நகரங்களில் பெய்துவரும் தொடர் கனமழையால் நாட்டின் பல பகுதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 48 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமின்றி 22 பேர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில் மாயமான 22 பேரும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. லட்சக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவித்துவரும் நிலையில், தற்போது ராணுவம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுவருகிறது.

Categories: World
Image

உலகக் கால்பந்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள ஜப்பான் அணியினர்!

July 04, 2018 0 views Posted By : manojbAuthors
Image

இந்த உலகக்கோப்பையில் எந்த அணி கோப்பையை வென்றாலும் சரி, ஜப்பான் அணியினர் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்து விட்டார்கள். 

2018 உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பரபரப்பான நாக் அவுட் சுற்றுகள் நேற்றுடன் நடந்து முடிந்தன. நேற்றைய ஆட்டங்களின் முடிவில் ஸ்வீடன், இங்கிலாந்து அணிகள் நாக் அவுட் சுற்றில் வெற்றிபெற்று காலிறுதிக்குள் நுழைந்தன.

நேற்றைய முந்தைய நாள் ஆட்டத்தில் ஜப்பான் அணி தோற்கும் வரை, நாக் அவுட் சுற்றுகளில் அர்ஜென்டினா அணியின் தோல்விதான்  யாரும் எதிர்பார்த்திராத கால்பந்து ரசிகர்கள் மனமுடைந்து போகும்படியான மாபெரும் தோல்வியாக இருந்தது.

பெல்ஜியம் அணியுடனான நேற்றைய முந்தைய நாள் ஆட்டத்தின் ஆரம்பத்தில் ஜப்பான் அணி அபாரமாக விளையாடி ஒரு மணி நேரத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னணியில் இருந்தது. ஆனால் சற்று நேரத்திலேயே ஆட்டம் தலைகீழாக மாறிப்போனது. 69 வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி தனது முதல் கோலை அடித்தது. அதற்கு அடுத்த 5வது நிமிடத்திலேயே அதாவது ஆட்டத்தின் 74வது நிமிடத்தில் பெல்ஜியம் அணி தனது இரண்டாவது கோலை அடித்து ஜப்பானுக்கு பேரதிர்ச்சி கொடுத்தது. ஆட்ட முடிவில் இறுதியாக இரு அணிகளும் 2-2 என சமநிலையிலிருந்த காரணத்தால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதனை பயன்படுத்திக் கொண்ட பெல்ஜியம் அணி வீரர் நாசர் சடி 94வது நிமிடத்தில் மேலும் ஒரு கோல் அடித்து ஜப்பானை வீழ்த்தி பெல்ஜியம் காலிறுதிக்குள் நுழைய வழிவகுத்தார். ஆரம்பத்தில் 2-0 என முன்னிலை வகித்த ஜப்பான் அணி 3-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவும் என சற்றும் எதிர்பார்த்திராத ஜப்பான் அணியினர் மற்றும் ரசிகர்கள் சோகத்தில் மூழ்கினர்.இந்த தோல்வியை ஜப்பான் அணி வீரர்களும் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை. ஆட்டம் முடிந்தவுடன் ஜப்பான் அணி வீரர்கள் அனைவரும் மைதானத்தில் சேர்ந்து நின்றனர். 2018 உலகக்கோப்பையில் ஜப்பான் அணியின் பங்கேற்பு அத்துடன் முடிவுக்கு வந்ததையடுத்து, அதுவரை அவர்களுக்கு அன்பும் ஆதரவும் அளித்துவந்த ரசிகர்கள் அனைவருக்கும் ஒருசேர ஜப்பான் அணியினர் நன்றி தெரிவித்தனர். 

ஜப்பான் அணி வீரர்கள் அந்த சமயத்தில் பெரிதளவில் மனம் தளர்ந்திருந்தும், மைதானத்தில் அணியின் தோல்விக்காக கண்ணீர் சிந்திக் கொண்டிருந்த ரசிகர்களை சமாதானப்படுத்தும் விதமாக அதுவரையிலான போட்டிகளில் ரசிகர்களிடமிருந்து தாங்கள் பெற்றுவந்த அன்பினை திருப்பி செலுத்தும் விதமாக நன்றி செலுத்தி ரசிகர்களை அரவணைத்தனர்.  

அதுமட்டுமின்றி தோல்விக்குப் பிறகு அவர்களது உடைமாற்றும் அறையினை முற்றிலுமாக சுத்தம் செய்துவிட்டு அங்கு ரஷ்யா நாட்டிற்கு 'நன்றி' என எழுதி வைத்து விட்டுச் சென்றுள்ளனர். ஜப்பான் அணியினரின் இந்த செயல் ஜப்பான் ரசிகர்கள் பல சந்தர்ப்பங்களில் ஜப்பான் அணி விளையாடிய போட்டிகளுக்குப் பிறகு ஸ்டேடியத்தை சுத்தம் செய்ததை நினைவு படுத்துகிறது. ஏன் பெல்ஜியம் உடனான ஜப்பானின் இறுதி ஆட்டத்திற்குப் பிறகு கூட ஜப்பான் ரசிகர்கள் கண்ணீருடன் ஸ்டேடியத்தை சுத்தம் செய்துவிட்டுத்தான் சென்றார்கள். இந்த உலகக்கோப்பையில் எந்த அணி கோப்பையை வென்றாலும் சரி, ஜப்பான் அணியினர் கால்பந்து ரசிகர்கள் மத்தியில் தங்களுக்கென ஒரு தனியிடத்தைப் பிடித்து விட்டார்கள். அவ்வளவு பெரிய தோல்விக்குப் பிறகும் மைதானத்தில் அவர்கள் நடந்துகொண்ட விதமும் ரசிகர்களிடம் அவர்கள் காட்டிய அன்பும் ரஷ்யாவிற்கு அவர்கள்  நன்றி கூறிய விதமும் மறக்க முடியாத ஒன்றாக இந்த உலகக்கோப்பையில் எழுதப்பட்டு விட்டது. 

Categories: Sports
Image
Subscribe to Japan