ஹாக்கி சாம்பியன்ஸ் தொடர் புபனேஷ்வரில் நாளை தொடங்குகிறது

December 05, 2014 0 views Posted By : suryaAuthors
Image

8 அணிகள் பலப்பரீட்சை நடத்தும் 35-வது ஹாக்கி சாம்பியன்ஸ் தொடர் நாளை தொடங்குகிறது. 
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் ஹாக்கி சாம்பியன்ஸ் தொடர் இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறுகிறது. டிசம்பர் 6-ம்  தேதி முதல் 14-ம் தேதி வரை ஒடிஷா மாநிலம் புபனேஷ்வரில் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த  தொடரில் போட்டியை நடத்தும் நாடு என்ற முறையில் இந்தியாவும் நடப்பு சாம்பியன் என்ற முறையில் ஆஸ்திரேலியவும் இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. நெதர்லாந்து, பாகிஸ்தான், பெல்ஜியம், அர்ஜென்டினா, இங்கிலாந்து மற்றும் ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனி உள்ளிட்ட 8 நாடுகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இந்திய அணி இதுவரை சாம்பியன்ஸ் தொடரை வென்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. காயத்தால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய அணியின் கேப்டன் சர்தார் சிங் ஹாக்கி சாம்பியன்ஸ் தொடரில் விளையாடுவார் என இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ஃபெலிக்ஸ் தெரிவித்துள்ளார். 

Categories: Sports
Image
Subscribe to ஹாக்கி சாம்பியன்ஸ் தொடர்