​பிரபல எழுத்தாளர் சௌபா மரணம்!

June 11, 2018 18 views Posted By : shanmugapriyaAuthors
Image

பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சௌபா என்றழைக்கப்பட்ட சௌந்தரபாண்டியன் உடல்நலக் குறைவால் காலமானார்.

மகனை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட சௌபா, உடல்நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கைதிகளுக்கான சிறப்பு வார்டில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.  

சர்க்கரை அளவு அதிகரித்ததையடுத்து சௌபாவின் இடதுகாலின் ஒரு பகுதி அண்மையில் மருத்துவர்கள் அறிவுரையின் படி அகற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் இருந்த சௌபா, அதிகாலை 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதுரை கோச்சடை எஸ்பிஓஏ காலனியைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சௌபா, சீவலப்பேரி பாண்டி கதை எழுதியதன் மூலம் பிரபலமானவர். பின்னாளில் அதுவே 'சீவலப்பேரி பாண்டி' என்ற தமிழ்த் திரைப்படமாக வந்து வெற்றி பெற்றது. இவரது மனைவி லதா பூரணம் (55). தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலைக்கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்து வருகிறார். 

இவர்களுடைய மகன்  விபின் கடந்த மாதம் உயிரிழந்தார். அவர் கொல்லப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் சௌபா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். 

Categories: Tamilnadu
Image

செய்தியாளர்களை ஒருமையில் பேசிய ரஜினிகாந்திற்கு கண்டனம்!

May 31, 2018 2 views Posted By : shanmugapriyaAuthors
Image

பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசிய ரஜினிகாந்த் மன்னிப்புக் கேட்க வேண்டும் என சென்னை பத்திரிகையாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக, அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு மற்றும் வன்முறை சம்பவத்தில் காயமடைந்தவர்களை சந்திப்பதற்காக தூத்துக்குடிக்கு சென்று சென்னை திரும்பிய ரஜினிகாந்த், விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களை ஒருமையில் பேசியதற்கு கண்டனம் தெரிவிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொதுவெளிக்கு வருபவர்களிடம் கேள்விகள் கேட்பதும், அதனை மக்களுக்குத் தெரிவிப்பதும் செய்தியாளர்களின் பணி என்றும், இதற்காக மிரட்டுவதும், ஒருமையில் பேசுவதும் அநாகரிக செயல் என்றும்,  இதை அனுமதிக்க முடியாது என்றும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்த விவகாரத்தில் ரஜினி மன்னிப்புக் கேட்க வலியுறுத்தி, ஆர்ப்பாட்டம் நடத்தவும் சென்னை பத்திரிகையாளர் சங்கம் முடிவு செய்துள்ளது.

Categories: Tamilnadu
Image

பிரதமரை விமர்சித்த விவகாரத்தில் பிரகாஷ்ராஜ் மீது வழக்குப்பதிவு!

October 04, 2017 0 views Posted By : krishnaAuthors
Image

பிரதமர் மோடி ஒரு சிறந்த நடிகர் என விமர்சித்த விவகாரத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் மீது, வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த மாதம், பெங்களூருவில் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் என்பவர், மர்ம நபர்களால் சுட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில், பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் பிரகாஷ்ராஜ், பத்திரிக்கையாளர் கவுரி கொலையை பாஜகவினர் கொண்டாடி வருகின்றனர் என்றும், அவர்களது செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் என்றும் குறிப்பிட்டார்.

மேலும், இதன் மூலம்  தன்னைவிட மிகச்சிறந்த நடிகர் என்பதை பிரதமர் மோடி நிரூபித்திருக்கிறார் என்றும் பிரகாஷ் ராஜ் பேசியிருந்தார். இந்நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ், பிரதமரை விமர்சித்ததை எதிர்த்து, உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு வரும் 7-ந் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. 

Categories: Tamilnadu
Image

கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் மீது அவதூறு வழக்குப் பதிவு!

September 19, 2017 0 views Posted By : krishnaAuthors
Image

பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை சம்பவம் தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணை தலைவர் ராகுல் காந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் மீது அவதூறு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மும்பை ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் த்ருதிமன் ஜோஷி சார்பில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். அமைப்பு மீது அடிப்படை முகாந்திரம் இல்லாமல் பொய் பரப்புரை மேற்கொள்ளப்படுவதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கருத்தியலை மக்கள் மத்தியில் தவறாக சித்தரிக்கும் வகையில் சோனியாகாந்தி, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பேசிவருவதாகவும் தெரிவித்துள்ளார். 

எனவே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.

Categories: India
Image

பீகாரில் பத்திரிக்கையாளர் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபர்கள்!

September 07, 2017 13 views Posted By : krishnaAuthors
Image

பீகாரில் ஆர்வால் என்னுமிடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் செய்தியாளரான பங்கஜ் மிஸ்ரா என்பவரைத் துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடி விட்டனர். 

பீகார் தலைநகர் பாட்னா அருகே ஆர்வால் என்னுமிடத்தில் செய்தியாளர் பங்கஜ் மிஸ்ரா நடந்து சென்று  கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இருவர், அவர் மீது துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டனர்.

குண்டுக்காயம் பட்ட பங்கஜ் மிஸ்ரா மயங்கிக் கீழே விழுந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். படுகாயம் அடைந்த மிஸ்ரா உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இருநாட்களுக்கு முன்பு கன்னட பத்திரிக்கையாளர் கெளரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்ட அதிர்ச்சி விலகும் முன், பீகாரில் செய்தியாளர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories: India
Image

பத்திரிக்கையாளர்களை விரட்டியடித்த மு.க.அழகிரி ஆதரவாளர்கள்!

August 29, 2018 2 views Posted By : wasimAuthors
Image

செய்தி சேகரிக்க வந்த பத்திரிக்கையாளர்களை மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் விரட்டியடித்த சம்பவம் மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை சத்யசாய் நகரில் உள்ள இல்லத்தில், அடுத்த மாதம் 5ம் தேதி சென்னையில் பேரணி நடத்துவது தொடர்பாக தனது ஆதரவாளர்களுடன் கடந்த சில நாட்களாக அழகிரி ஆலோசனை நடத்தி வருகிறார். 

நேற்றைய தினம் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், அழகிரியின் இல்லத்திற்கு வந்த ஆதரவாளர்கள் எண்ணிக்கை குறைந்திருந்ததாக தமிழ் நாளேடு ஒன்றில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இந்நிலையில், இன்று அழகிரி இல்லத்திற்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்களை அழகிரி ஆதரவாளர்கள் விரட்டியடித்தனர். இதனால், அங்கு பரபரப்பு நிலவியது.

Categories: Tamilnadu
Image

கோபியில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

December 12, 2014 0 views Posted By : suryaAuthors
Image

ஆந்திராவில் தமிழக செய்தியாளர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து கோபி பேருந்து நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இலங்கை அதிபர் ராஜபக்சே, சாமி தரிசனத்திற்காக திருப்பதியை வந்ததைக் கண்டித்து மதிமுகவினர் போராட்டம் நடத்தினர். இதை படம்பிடிக்க முயன்ற செய்தியாளர்கள் மீது ஆந்திர காவல்துறையினர் தாக்குதல் நடத்தினர்.  ஆந்திரா காவல்துறையினரின் இந்த செயலைக்கண்டித்து கோபி பேருந்து நிலையத்தில் மனித நேய மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஆந்திரா காவல்துறையினரைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

Categories: Tamilnadu
Image

மியான்மர் பத்திரிக்கையாளரின் இறுதி ஊர்வலம்

November 08, 2014 13 views Posted By : suryaAuthors
Image

மியான்மர் நாட்டில் ராணுவ காவலில் இறந்த பத்திரிக்கையாளரின் இறுதி ஊர்வலம் நேற்று நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பத்திரிக்கையாளர் பார் கை என்பவர் கடந்த செப்டம்பர் மாதம் 30 அன்று ராணுவத்தால் கைது செய்யப்பட்டார். பிறகு அக்டோபர் 4 அன்று ராணுவக் காவலில் கொல்லப்பட்டார். இதனால் அங்கு ராணுவத்திற்கு எதிராக பல போராட்டங்கள் நடந்தன. இதனையடுத்து அவரின் இறுதி ஊர்வலம் நேற்று யான்கன் நகரத்தில் நடந்தது. இதில் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர் ஆங் சாங் சூகியின் முன்னாள் மெய்க்காப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories: World
Image

பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரிக்கை

November 03, 2014 0 views Posted By : ganeshAuthors
Image

மியான்மர் நாட்டின் யான்கன் நகரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்க கோரி அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். மியான்மர் நாட்டில் பத்திரிக்கையாளர்கள் மீது நடத்தப்படும் அடக்கு முறைகளை தடுக்க கோரியும், பாதுகாப்பு வழங்க கோரியும்  நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல பத்திரிக்கையாளர்கள் ராணுவத்தாலும், வேறு சில தீவிரவாத இயக்கங்களாலும் கடந்த சில மாதங்களில் கொல்லப்பட்டுள்ளதால் பாதுகாப்பு இல்லாத சூழல் நீடிக்கிறது. எனவே தங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories: World
Image

செய்தியாளர்களுடன் மோடி சந்திப்பு

October 25, 2014 4 views Posted By : AnonymousAuthors
Image

செய்தியாளர்களுடன் உள்ள உறவை மேலும் வலுப்படுத்த விரும்புவதாக டெல்லியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுடன் தேநீர் விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இதற்கு பின் நடந்த கூட்டத்தில், தூய்மை இந்தியா திட்டம் நமது தேசிய கடமை என்றும், தூய்மை இந்தியா திட்டத்தை பிரபலப்படுத்தியதில் ஊடகங்களின் பங்கு மிகச்சிறப்பானது என்றும்  தெரிவித்தார். மேலும் 80 சதவிகித ஊடகங்கள் மத்திய அரசை விமர்சிக்கின்றன என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Categories: India
Image
Subscribe to Journalist