​தமிழக-கேரள வனப்பகுதியில் துணை ராணுவத்தினருக்கு ‘கொரில்லா’ பயிற்சி

November 24, 2016 12 views Posted By : arunAuthors
Image

மேட்டுப்பாளையம் அருகே தமிழக-கேரள வனப்பகுதியில் துணை ராணுவப்படை கமாண்டோக்களுக்கு கெரில்லா முறை தாக்குதல் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள குருடம்பாளையத்தில் உள்ள 
சி.ஆர்.பி.எப் (CRPF) பயிற்சிக்கல்லூரியில் கடந்த ஒருவருட காலமாக 9 பெண் கமாண்டோக்கள் உள்ளிட்ட 65 பேர், பல்வேறு பயிற்சிகள் பெற்று வந்தனர். 

இறுதிகட்ட கொரில்லா முறை பயிற்சிக்காக, நேற்று தமிழக – கேரள எல்லை வனப்பகுதியான பாலமலை என்னும் மலைக்காட்டிற்குள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மாவோயிஸ்ட் கும்பல்களின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படும் இப்பகுதியில், ஒரு வாரம் வரை தங்கி இருக்க வேண்டும் என அறிவறுத்தப்பட்டுள்ளது. 

மாவோயிஸ்ட்டுக்கள் போன்ற அடையாளம் தெரியாத நபர்கள் மறைந்திருந்து தாக்குதல் நடத்தினால், எதிர் தாக்குதல் நடத்தி, காயமின்றி தப்பிப்பதோடு, எதிரிகளையும் சமாளிக்கவேண்டும் 
எனவும், இந்த கடினமான பயிற்சியை முடித்துவிட்டு, ஒரு வாரத்திற்கு பின் மீண்டும் பயிற்சிக்கல்லூரி முகாமிற்கு வெற்றிகரமாக திரும்ப வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories: Tamilnadu
Image
Subscribe to கெரில்லா