முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: என்.எல்.சி போராட்டம் ஒத்திவைப்பு

June 11, 2016 0 views Posted By : arunAuthors
Image

சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, இன்று நடைபெறவிருந்த என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்களின் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பணி நிரந்தரம், சுரங்கத் துறை சட்டப்படி அகவிலைப்படி உள்பட 11 அம்ச கோரிக்கைகளை நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதுதொடர்பாக என்.எல்.சி. நிர்வாகத்துடன் 3 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால், இன்று இரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக ஜீவா தொழிற்சங்கத்தினர் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் வேலைநிறுத்தத்தைத் தவிர்க்கும் பொருட்டு, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தில் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறினர்.

தங்களின் கோரிக்கைகளில் ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டதால் இன்று நடைபெறவிருந்த வேலைநிறுத்தம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜீவா தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 23ம் தேதி நடைபெறவுள்ளது.

Categories: Tamilnadu
Image

​என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ்

August 27, 2015 0 views Posted By : arunAuthors
Image

என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்தம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது. நெய்வேலியில் நடந்த தொழிற்சங்கங்களின் கூட்டுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதையடுத்து 38 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிரந்தரத் தொழிலாளர்கள் இன்றிரவு முதல் பணிக்கு திரும்புகின்றனர். 

24 விழுக்காடு ஊதிய உயர்வு, ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஜூலை 20 ஆம் தேதி முதல் என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். 

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நாள்தோறும் பலவிதமான போராட்டங்களையும் அவர்கள் நடத்தி வந்தனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சென்னை, டெல்லி, நெய்வேலியில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள்  நடைபெற்றன. 

நேற்று முன்தினம் சென்னையில் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து, நெய்வேலியில் ஐ.என்.டி.யூ.சி அலுவலகத்தில் தொழிற்சங்க நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. 

இதில் அண்ணா தொழிற்சங்கம், தொ.மு.ச உள்ளிட்ட 16 தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதில் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது. 

இதையடுத்து இன்றிரவு முதல் நிரந்தரத் தொழிலாளர்கள் பணிக்கு திரும்புகின்றனர். 

Categories: Tamilnadu
Image

என்.எல்.சி நிர்வாகம் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவு முன்னேற்றம்

August 26, 2015 0 views Posted By : suryaAuthors
Image

ஊதிய உயர்வு தொடர்பாக தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் என்.எல்.சி நிர்வாகம் சென்னையில் நடத்திய பேச்சுவார்த்தையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தத்தை அமல்படுத்த வலியுறுத்தி, கடந்த மாதம் 20ம் தேதி முதல் என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக தொழிலாளர்கள் நல ஆணையர் முன்னிலையில் டெல்லி மற்றும் சென்னையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. 

தொழிலாளர்களின் போராட்டம் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பிரதமரை நேரில் சந்தித்து மனு அளித்தன. அதன் தொடர்ச்சியாக, தொமுச, அண்ணா தொழிற்சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரதிநிதிகளுடன் என்.எல்.சி நிர்வாகம் சென்னையில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தியது. 

8 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தொழிற்சங்கத்தினர் தெரிவித்தனர். எனினும், இறுதிகட்ட பேச்சுவார்த்தை சென்னை, நெய்வேலி இல்லத்தில் நாளை நடைபெறும் என தொழிற்சங்க பிரதிநிதிகள் கூறினர்.

Categories: Tamilnadu
Image

என்.எல்.சி. நிர்வாகம் இன்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வி

August 16, 2015 0 views Posted By : manojAuthors
Image

என்.எல்.சி. தொழிலாளர்களின் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் 3-வது நாளாக நீடிக்கும் நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகம் இன்று நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. 

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சென்னை, டெல்லி ஆகிய இடங்களில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், என்.எல்.சி. நிர்வாகத்துடன் தொழிலாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்ததை அடுத்து, என்.எல்.சி. தொழிலாளர்கள் நேற்று முன்தினம் முதல் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதத்தில் பங்கேற்ற தொழிலாளர்களில் மேலும் 2 பேர் இன்று மயக்கமடைந்தனர். 

போராட்டம் 3-வது நாளாக நீடிக்கும் நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. என்.எல்.சி. தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற் இந்தப் பேச்சுவார்த்தையில், என்.ல்.சி. தலைவர் சுரேந்திர மோகன் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

எனினும், பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. பிரச்சனைக்கு சுமூக தீர்வு காணப்படும் வரை போராட்டம் தொடரும் என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. இதனிடையே, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தார். 

Categories: Tamilnadu
Image

என்.எல்.சி நிரந்தர தொழிலாளர்கள், வீட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

August 09, 2015 0 views Posted By : manojAuthors
Image

நெய்வேலி என்.எல்.சி நிரந்தர தொழிலாளர்கள் ஊதிய மாற்று ஒப்பந்ததை நிறைவேற்ற வலியுறுத்தி, இன்று தங்களது வீட்டில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்,சி நிறுவன நிரந்தர தொழிலாளர்கள் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி கடந்த 20ம் தேதி முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்.எல்.சி. நிர்வாகத்துடன் இதுவரை நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் எந்தவித உடன்பாடும் எட்டப்படவில்லை. 

இந்நிலையில், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று  அனைத்து தொழிலாளர்களும் தங்கள் வீடுகளில் கருப்பு கொடிஏற்றி என்.எல்.சி. நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

என்.எல்.சி அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் அனைத்து கட்சி தலைவர்களை சென்னையில் சந்தித்து ஆதரவு திரட்ட திட்டமிட்டுள்ளனர்.

Categories: Tamilnadu
Image

நெய்வேலி என்.எல்.சி தலைமை அலுவலகம் இன்று முற்றுகை: தொழிற்சங்கத்தினர் அறிவிப்பு

August 06, 2015 0 views Posted By : suryaAuthors
Image

முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, நெய்வேலி என்.எல்.சி தலைமை அலுவலகத்தை இன்று முற்றுகையிட போவதாக தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, என்எல்சி தொழிலாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சென்னையிலும், அதைத் தொடர்ந்து டெல்லியிலும் நடந்த 4 சுற்று பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. 

இந்நிலையில், சென்னையில் உள்ள நெய்வேலி இல்லத்தில் நேற்று நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ள என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்கள், இன்று காலை 9 மணிக்கு நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. தலைமை அலுவலக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Categories: Tamilnadu
Image

என்.எல்.சி தொழிலாளர்களுடன் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

August 05, 2015 0 views Posted By : suryaAuthors
Image

நெய்வேலி என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக சென்னையில் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. 

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிரந்தரத் தொழிலாளர்கள், கடந்த ஜூலை 20 ம் தேதி இரவு முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். டெல்லியில், மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் முன்னிலையில் நடைபெற்ற முத்தரப்புப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

இந்நிலையில், வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக சென்னையில் இன்று மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. இதனிடையே, ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தி, நெய்வேலி அனல்மின் நிலைய முதலாவது அலகை தொழிலாளர்கள் இன்று முற்றுகையிடவுள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, என்.எல்.சி. தலைமை அலுவலகத்தை நாளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காணாவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் தொழிலாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

Categories: Tamilnadu
Image

டெல்லியில் நடைபெற்ற என்.எல்.சி முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி

July 30, 2015 0 views Posted By : suryaAuthors
Image

ஊதிய உயர்வு குறித்து என்.எல்.சி தொழிலாளர்களுடன் டெல்லியில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

புதிய ஊதிய மாற்று ஒப்பந்தத்தை அமல்படுத்தக் கோரி, என்.எல்.சி. நிரந்தர தொழிலாளர்கள் கடந்த 20-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக என்.எல்.சி. நிர்வாகத்துடன் நிரந்தர தொழிலாளர்கள் சென்னையில் நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் ஏற்படவில்லை. 

இந்நிலையில், டெல்லியில், மத்திய தொழிலாளர் நல ஆணையர் மிஸ்ரா முன்னிலையில் இன்று முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், 10 சதவீதம் மட்டுமே ஊதிய உயர்வு வழங்க முடியும் என என்.எல்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

ஆனால், இதனை ஏற்க தொழிலாளர்கள் திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன் காரணமாக, தொழிலாளர்களின் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.

Categories: India
Image

என்.எல்.சி. தொழிலாளர்கள் விவகாரம்: முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க கருணாநிதி வலியுறுத்தல்

July 24, 2015 0 views Posted By : manojAuthors
Image

என்.எல்.சி. தொழிலாளர்களின் ஊதிய பிரச்சனையில் தலையிட்டு, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.

ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் இலாபம் ஈட்டும் என்.எல்.சி நிறுவன தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க மறுப்பது நியாயமாகாது என்று, இன்று அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை குறித்து இதுவரை 27 சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்தும், ஒப்பந்தம் எட்டப்படவில்லை என குறிப்பிட்டுள்ள கருணாநிதி, கடந்த 20ம் தேதி முதல் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மின்தட்டுப்பாடு அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். 

எனவே, இவ்விவகாரத்தில் தமிழக முதலமைச்சரே தலையிட்டு, என்.எல்.சி நிர்வாகத்தையும், தொழிற்சங்கத் தலைவர்களையும் அழைத்துப் பேசி பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். 

Categories: Tamilnadu
Image

தோல்வியில் முடிந்தது என்.எல்.சி. தொழிலாளர்களின் பேச்சுவார்த்தை

July 22, 2015 0 views Posted By : suryaAuthors
Image

என்.எல்.சி. தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக, சென்னை சாஸ்திரி பவனில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

தொழிலாளர் நலத்துறை ஆணையர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், என்.எல்.சி நிர்வாகம், அண்ணா தொழிற்சங்கம் மற்றும் தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவையைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். 

இந்த பேச்சுவார்த்தையில் தொழிற்சங்கத்தினரின் கோரிக்கைகளை என்.எல்.சி. நிர்வாகம் ஏற்காததால், முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை, தங்களது வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்துள்ளனர். 

என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர தொழிலாளர்கள், கடந்த 40 மாத காலமாக சிறப்பு ஊதிய மாற்று ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரி போராடி வருகின்றனர். என்எல்சி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் என்.எல்.சி தொழிலாளர்கள் கடந்த திங்கட்கிழமை இரவு முதல் வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர்.

Categories: Tamilnadu
Image
Subscribe to என்.எல்.சி