​வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஆட்டத்தில் சாதனை மழை பொழிந்த இந்திய வீரர்கள்!

October 22, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய வீரர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளனர். 

சச்சின் டெண்டுல்கர் 5 முறை 150 ரன்கள் குவித்து, முதலிடத்தில் இருந்த நிலையில், ரோகித் சர்மா 6வது முறையாக 150 ரன்கள் விளாசி அச்சாதனையை முறியடித்தார். ஒருநாள் போட்டி, டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில், வேகமாக 60 சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில், சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்த விராட் கோலி முதலிடத்தை பிடித்தார். 427 இன்னிங்சில் சச்சின் டெண்டுல்கர், 60 சதங்கள் அடித்த நிலையில், விராட் கோலி 386 போட்டிகளில் அதனை முறியடித்துள்ளார். 

ஒருநாள் போட்டியில் கேப்டனாக இருந்து அதிக சதங்கள் விளாசியவர்கள் பட்டியலில், தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸை பின்னுக்கு தள்ளிய விராட் கோலி, 14 சதங்களுடன் 2வது இடத்தை பிடித்தார். தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகளில் தலா இரண்டாயிரம் ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் விராட் கோலி நான்காவது இடத்தை பிடித்தார். இரண்டாவது பேட்டிங்கின்போது, 2-வது விக்கெட்டுக்கு 246 ரன்கள் சேர்த்ததில், ரோகித் சர்மா, கோலி இணை சாதனை படைத்தது. மேலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 246 ரன்கள் சேர்த்த இந்திய இணை, என்ற மற்றொரு சாதனையும் நிகழ்த்தப்பட்டுள்ளது. 

Categories: Sports
Image

​வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்!

October 12, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹைதராபாத் நகரில் இன்று தொடங்குகிறது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் இன்று தொடங்க உள்ள நிலையில், நேற்று இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டனர். 

இந்திய அணியின் வலுவான பேட்டிங் வரிசை மற்றும் பந்து வீச்சு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் அந்த அணியின் கேப்டன் ஹோல்டர், பந்து வீச்சாளர் கேமர் ரோச் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளது மேற்கிந்திய தீவுகளுக்கு நம்பிக்கை அளிக்கிறது. இதற்கிடையே, மேற்கிந்திய தீவுகள் அணியை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம் என, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

முதல் டெஸ்ட்டில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் களம் இறங்குகிறது. அதே நேரத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிகளும் வெற்றிக்காக போராடும் என்பதால், இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Categories: Sports
Image

​மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி: வலுவான நிலையில் இந்தியா!

October 05, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில், இந்திய அணி 364 ரன்கள் குவித்து வலுவான நிலையில் உள்ளது. 

புஜாரா 86 ரன்களிலும், ரஹானே 41 ரன்களிலும் அவுட்டாகினர். முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் எடுத்துள்ளது. கேப்டன் கோலி 72 ரன்களுடனும், ரிஷாப் பண்ட் 17 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

முதல்நாள் ஆட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ப்ரித்வி ஷா, டெஸ்ட் போட்டியின் முதல் சதத்தை தமது தந்தைக்கு அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளார். அறிமுக போட்டியில் சதம் விளாசி அசத்தியுள்ள ப்ரித்வி ஷாவுக்கு சக வீரர்கள் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

Categories: Sports
Image

​ மேற்கிந்திய தீவுகளுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்!

October 04, 2018 2 views Posted By : shanmugapriyaAuthors
Image

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. 

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்குகிறது. முன்னதாக நேற்று இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். கோலி தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல், ரஹானே, புஜாரா, ரிஷாப் பந்த், அஸ்வின், ஜடேஜா உள்ளிட்ட வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

அறிமுக வீரர் ப்ரித்வி ஷா தொடக்க ஆட்டக்காரராக போட்டியில் விளையாட உள்ளார். ஜேசன் ஹோல்டர் தலைமையிலான மேற்கிந்திய தீவுகள் அணியில் சுனில் அம்ப்ரிஸ், தேவேந்திர பிஷூ, ப்ரத்வைட், கேமர் ரோச் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதே உத்வேகத்துடன் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி கைப்பற்றும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Categories: Sports
Image

​முதல் டெஸ்ட் போட்டி வலுவான நிலையில் தென்னாப்பிரிக்கா

December 18, 2014 0 views Posted By : suryaAuthors
Image

மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணி வலுவான நிலையில் உள்ளது. 

தென்னாப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற மேற்கு இந்திய தீவுகள் தென்னாப்பிரிக்கா அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தது. தென்னாப்பிரிக்கா அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. பின்னர் இறங்கிய ஆம்லா மற்றும் டிவில்லியர்ஸ் நிலைத்து நின்று ஆடி அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும் சதம் அடித்தனர். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட்டுகளை இழந்து 340 ரன்கள் எடுத்துள்ளது. ஆம்லா 133 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 141 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 

Categories: Sports
Image

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடர்களை தடை செய்ய பிசிசிஐ முடிவு

October 21, 2014 0 views Posted By : AnonymousAuthors
Image

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான தொடர்களை பிசிசிஐ தடை செய்துள்ளது. இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட அந்த அணி பாதியில் நாடு திரும்பியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற பிசிசிஐ செயற்குழு கூட்டத்தில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அந்த அணியுடனான தொடர்களை ரத்து செய்வதாக முடிவெடுக்கப்பட்டது. மேலும் பாதியில் தொடரை ரத்து செய்தததால், ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கவும் இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் அணி 5 ஒருநாள் போட்டிகள், ஒரு டிவெண்டி டிவெண்டி, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதாக இருந்தது. ஆனால் அந்நாட்டு வீரர்கள் ஊதிய பிரச்சினை காரணமாக 4-வது ஒருநாள் ஆட்டம் முடிந்தவுடம் அந்த அணி நாடு திரும்பியது.

Categories: Sports
Image
Subscribe to West Indies