நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு புகார் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

February 08, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

நிலக்கரி இறக்குமதியில் முறைகேடு செய்ததாக எழுந்த புகாரில் மத்திய அரசு, சி.பி.ஐ, வருவாய் புலனாய்வுத்துறை 2 வாரங்களில் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2012-2016ம் ஆண்டுகளில் வெளிநாடுகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் மூலம் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் சந்தை மதிப்பைவிட கூடுதல் தொகை கொடுத்து நிலக்கரியை வாங்கியதால் அரசுக்கு இழப்பு ஏற்பட்டதாக புகார் எழுந்தது.

இதனையடுத்து 4 நிறுவனங்கள் மீது சிபிஐ புகார் பதிவு செய்தது. ஆனால் நாடு முழுவதும் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறி, பொதுநல வழக்காடு மையம் என்ற அமைப்பு  சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணையின் போது மத்தியஅரசு, சி.பி.ஐ, வருவாய் புலனாய்வுத்துறை ஆகிய துறைகள் 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

Categories: India
Image

தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்கிறது - அமைச்சர் தங்கமணி

September 21, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

தமிழகத்தில் உள்ள அனல்மின் நிலையங்களில் அடுத்த 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாட்டால் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அங்கு சென்ற அமைச்சர் தங்கமணி, தடையின்றி மின்உற்பத்தி கிடைக்க நடவடிக்கை எடுக்கமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனல்மின் நிலையங்களில் அடுத்த 6 நாட்களுக்கு தேவையான நிலக்கரி கையிருப்பு உள்ளது எனவும், தமிழகத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்படவில்லை எனவும், தமிழகம் மின்மிகை மாநிலமாக திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.

காற்றாலையின் மூலம் சுமார் 3000 மெகாவாட் மின் உற்பத்தி ஆவதால் அனல் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்தார். நெல்லை பாளையங்கோட்டையில் பாரமரிப்பு பணிக்காக மின்வெட்டை அமல்படுத்த திட்டமிடப்பட்டதாகவும், ஆனால், பாரமரிப்பு பணி நிறுத்தப்பட்டு விட்டதாகவும் அமைச்சர் தங்கமணி கூறினார்.

Categories: Tamilnadu
Image

​மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தி வைப்பு!

September 20, 2018 0 views Posted By : shanmugapriyaAuthors
Image

சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக 600 மெகாவாட் மின்னுற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேட்டூரில் 840 மெகாவாட் மற்றும் 600 மெகாவாட் கொண்ட 2 அனல்மின் நிலையங்கள் உள்ளன.  இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஆயிரத்து 440 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய முடியும். இந்நிலையில் போதிய நிலக்கரி இன்மையால் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. 

ஏற்கனவே நான்கு யூனிட் கொண்ட 840 மெகாவாட் அனல் மின்நிலையத்தில் 2 மற்றும் 3 வது யூனிட்களில் மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதானால் மேட்டூர் அனல்மின் நிலையத்தில் ஆயிரத்து 20 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது

Categories: Tamilnadu
Image

தமிழகத்தில் எப்போதும் மின்வெட்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை - அமைச்சர் தங்கமணி விளக்கம்!

September 19, 2018 0 views Posted By : krishnaAuthors
Image

தமிழகத்தில் எப்போதும் மின்வெட்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை என அமைச்சர் தங்கமணி விளக்கமளித்துள்ளார். 

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை நேரில் சந்தித்த தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, தமிழகத்திற்கு கூடுதல் நிலக்கரி வழங்க கோரிக்கை விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தமிழகத்தில் மின் வெட்டு நிலவுவதாக எதிர்க்கட்சிகள் கூறுவதில் உண்மையில்லை என தெரிவித்தார். 15 நாட்களுக்கு தேவையான நிலக்கரி மட்டுமே தமிழகத்தில் கையிருப்பில் வைக்கப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்ட அவர், மின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரி போதுமான அளவில் உள்ளதாக கூறினார். 

நிலக்கரி கையிருப்பை அதிகரிக்க கூடுதல் ரயில் வேகன்களை ஒதுக்க கோரியுள்ளதாக தெரிவித்த தங்கமணி, தமிழகத்தில் 2 நாட்களாக மழை பெய்து வருவதால் மின்சாரத் தேவை குறைந்துவருவதாக குறிப்பிட்டார்.

Categories: Tamilnadu
Image

​தமிழகத்தில் மின்வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை: அமைச்சர் தங்கமணி

September 17, 2018 2 views Posted By : shanmugapriyaAuthors
Image

தேவையான அளவிற்கு நிலக்கரி கையிருப்பில் இருப்பதால், தமிழகத்தில் மின் வெட்டு என்ற பேச்சுக்கே இடமில்லை என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். 

நாமக்கல் திருச்சி சாலையில் உள்ள பொன்விழா நகரில் அம்மா பூங்கா மற்றும் அம்மா உடற் பயிற்சி மையத்தினை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுவாக தமிழக மின்சார வாரியத்திற்கு மே 15 முதல் அக்டோபர் 15 வரை காற்றாலை மின்சாரம் இருக்கின்ற காரணத்தினால், மத்திய அரசு தர வேண்டிய நிலக்கரி குறைக்கப்படும் எனத் தெரிவித்தார். 

எட்டுவாகன்கள் என்று வழங்கப்பட்ட நிலக்கரி, பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்திற்கு பின்னர்,  தற்போது 12 வாகன்கள் என உயர்த்தப்பட்டுள்ளதாக தங்கமணி தெரிவித்தார். அதனை 16 வாகன்களாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை விடுப்பதற்காகவே தாம் டெல்லி செல்ல உள்ளதாகக் அவர் கூறினார். நிலக்கரி பற்றாக்குறை உள்ளதாக  வதந்திகளை பரப்பி மக்களிடையே மின்வெட்டு குறித்த பீதியைக் ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயல்வதாகவும், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார். 

Categories: Tamilnadu
Image

​மின்சார உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பு குறைவு: அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படும் அபாயம்!

September 12, 2018 2 views Posted By : shanmugapriyaAuthors
Image

மின்சார உற்பத்திக்கான நிலக்கரி கையிருப்பு தமிழகத்தில் குறைவாக இருப்பதால், 3 மின் நிலையங்களில் தற்காலிகமாக மின் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், அறிவிக்கப்படாத மின்வெட்டு அமல்படுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை அருகே வல்லூரில் பாரமரிப்பு பணி காரணமாக மூன்று அலகுகளிலும், மேட்டூர் அனல் மின்நிலையத்திலும் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் தினசரி 1410 மெகாவாட் மின்சார உற்பத்தி குறைந்துள்ளது. தற்போதைய சூழலில் தமிழகத்தில் சுமார் 7 நாட்களுக்குத் தேவையான நிலக்கரி மட்டுமே கையிருப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, தனியார் நிறுவனங்களிடம் இருந்து கூடுதல் நிலக்கரியை கொள்முதல் செய்யவும் மின்வாரியம் திட்டமிட்டுள்ளது. தற்போதைய கணக்கெடுப்பின் படி, தமிழகத்தில் உள்ள அனல் மின் நிலையங்களை முழுமையாக செயல்படுத்த தினமும் 75 ஆயிரம் டன் நிலக்கரி தேவைப்படுகிறது. 

இதில் ஏறத்தாழ 60 ஆயிரம் டன் நிலக்கரி மேற்குவங்கம் மற்றும் ஒடிஷாவில் இருந்து ரயில்கள் மூலம் கோல் இந்தியா நிறுவனம் மூலம் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக மேற்குவங்கத்தில் கனமழை பெய்வதால், நிலக்கரி வெட்டி எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காற்றாலை மின்சாரமும் பெரிய அளவில் கை கொடுக்காத நிலையில், அனல் மின் உற்பத்தியும் குறைந்து வருவதால், தமிழகத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படும் நிலை உருவாகியுள்ளதாக தொழில்துறையினர் அச்சம் தெரிவிக்கின்றனர். 

Categories: Tamilnadu
Image

நிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கு: சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

November 20, 2014 0 views Posted By : sathisAuthors
Image

நிலக்கரி ஒதுக்கீட்டு வழக்கில் அடுத்த கட்ட விசாரணையை துவக்குமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜய் தர்பா, அவரது மகன் தேவேந்திர தர்தா மற்றும் ராஜேந்திர தர்தா, மனோஜ் ஜஸ்வால், ஆனந்த் ஜெய்ஸ்வால், அபிஷேக் ஜெய்ஸ்வால் மற்றும் சிலர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்திருந்தது. இதற்கான ஆவணங்களை சிபிஐ, சிறப்பு நீதிமன்றத்திடம் ஒப்படைத்தது. இந்த வழக்கு தொடர்பான இறுதி வாதத்தை இன்று கேட்டறிந்த பின், சிறப்பு நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Categories: India
Image

நிலக்கரி சுரங்கங்களை மறுஏலம் விட அவசர சட்டம்?

October 21, 2014 0 views Posted By : AnonymousAuthors
Image

ரத்து செய்யப்பட்ட 214  நிலக்கரிச் சுரங்க உரிமங்களை இணையத்தளம் மூலம் மறுஏலம் விடுவதற்கான அவசர சட்டம் கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான பரிந்துரை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கடந்த 1993ம் ஆண்டு முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட 214 நிலக்கரி சுரங்க உரிமங்கள் சட்டவிரோதமானவை எனக் கூறி  அவற்றை கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
இந்நிலையில் நாட்டின் எரி சக்தி தேவையை சமாளிக்க உடனடியாக  அந்த சுரங்க உரிமங்களை இணையதளம் மூலம் மறுஏலம் விட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கு மத்திய அமைச்சரவை நேற்று அனுமதி அளித்ததையடுத்து அவசரச் சட்டம் கொண்டுவர குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.

Categories: India
Image
Subscribe to Coal