டெல்லி தேர்தல்: ஆம் ஆத்மி மனு தள்ளுபடி

November 11, 2014 2 views Posted By : suryaAuthors
Image

.
 டெல்லி சட்டப்பேரவை கலைக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான தேதியை உடனடியாக அறிவிக்க வேண்டும் என்ற ஆம் ஆத்மியின் கோரிக்கையை எச்.எல். தத்து அடங்கிய உச்ச நீதிமன்றம் அமர்வு தள்ளுபடி செய்தது.
தற்போது தேர்தல் ஆணையகத்தின் பொறுப்பில் இந்த விவகாரம் இருப்பதால் அதில், உச்ச நீதிமன்றம் தலையிட முடியாது என்று நீதிபதி தெரிவித்தார்.
மேலும், தேர்தல் தேதி அறிவிக்கும் வரை இந்த மனுவை ரத்து செய்யாமல் உயிருடன் இருக்கும்படி செய்ய வேண்டும் என்ற ஆம் ஆத்மி தரப்பு வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷனின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிபதி எச்.எல். ததது, மனுவில் அத்தகைய முக்கிய விஷயங்கள் எதுவும் இல்லை என்று தெரிவித்தார். 

Categories: India
Image
Subscribe to டெல்லி சட்டப்பேரவை