Skip to main content

10 ஆண்டுகளாக கிரிக்கெட்டை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் கோலி!

December 25, 2019 7 views Posted By : krishnaAuthors
Image

கிரிக்கெட்டுக்கும் இந்தியாவுக்கும் அப்படி என்ன பிணைப்போ என்னவோ, கிரிக்கெட் பற்றிய செய்திகளில் இந்திய வீரர்களின் பெயர்களே அதிகம் அடிபடுகிறது.
முன்பு ஒருநாள் போட்டிகளில் சச்சின் சாதனை.. டெஸ்ட் போட்டிகளில் சச்சின் சாதனை என்று செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். தற்போது காலம் சச்சினை,
கோலியை ரிப்ளேஸ் செய்திருக்கிறது. கிரிக்கெட் பற்றிய எல்லா செய்திகளிலும் கோலியின் பெயர் இருக்கிறது. கிரிக்கெட்டில் கோலி செய்த சாதனைகளின்
மைல்கல்லாக, கடந்த பத்து ஆண்டுகளின் கிரிக்கெட் உலக நாயகனாக உருவெடுத்திருக்கிறார் விராட் கோலி.


ஒருநாள் கிரிக்கெட்:

ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட், டி20 என்று தான் தடம் பதித்த அனைத்திலும் ஏதாவது ஒரு சாதனையை நிகழ்த்தியிருக்கிறார் கோலி. 2010 முதல் 2019
வரையிலான பத்து ஆண்டுகளில் 227 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 1038 பவுண்டரி, 115 சிக்ஸர்கள் உட்பட 11,125 ரன்களை குவித்திருக்கிறார்.
இதில் 52 அரை சதங்களும், 42 சதங்களும் அடக்கம். சராசரியாக 60.79 ரன்களை வைத்திருக்கிறார் கோலி. கடந்த 10 ஆண்டுகளில் அதிக சதங்களை அடித்த
வீரரும் கோலி தான். 42 சதங்களை இந்த பத்து ஆண்டுகளில் விளாசியிருக்கிறார். கோலிக்கு அடுத்தபடியாக, “ஹிட்மேன்” ரோகித் சர்மா 28 சதங்களை
விளாசியிருக்கிறார். ரோகித் சர்மாவை விட 14 சதங்கள் அதிகம் விளாசியிருக்கிறார் கோலி. சதம் மட்டுமல்லாமல் அதிக அரை சதங்களை விளாசியுள்ளதும்
கோலி தான். இந்த பத்து ஆண்டுகளில் 94 முறை 50 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். அதோடு இந்த காலகட்டத்தில் அதிக ஒருநாள் போட்டிகளில்
விளையாடியிருப்பதும் விராட் கோலி தான். இந்த காலகட்டத்தில் மொத்தம் 227 ஒருநாள் போட்டிகளில் களமிறங்கியிருக்கிறார். கோலிக்கு அடுத்து தோனி 196
போட்டிகளிலும், இலங்கை அணி வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் 196 போட்டிகளிலும், இங்கிலாந்தின் மோர்கன் 195 போட்டிகளிலும், ரோகித் சர்மா 180 போட்டிகளிலும்
களமிறங்கியிருக்கின்றனர். ஒருநாள் போட்டிகளில் அதிகபட்ச சராசரியை வைத்திருக்கும் வீரர்கள் பட்டியலில் கோலிக்கு இரண்டாமிடம். 64.20 சராசரியுடன்
தென்னாப்பிரிக்க அணியின் டி வில்லியர்ஸ் முதலிடத்தில் இருக்க, 60.79 சராசரியுடன் இரண்டாமிடத்தில் இருக்கிறார் விராட் கோலி. எனினும், டி வில்லியர்ஸ் அனைத்து போட்டிகளிலும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், தற்போது விளையாடி வரும் வீரர் என்று பார்த்தால் விராட் கோலிக்கு தான் முதலிடம். ஒருநாள் போட்டிகளில் ஜாம்பவானாக இருந்தாலும், அதிக முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு 5வது இடம். 20 டக் அவுட்டுகளுடன் மலிங்கா
முதலிடத்தில் இருக்க, 13 டக் அவுட்டுகளுடன் 5வது இடத்தில் இருக்கிறார் கோலி.

டி20:
ஒருநாள் போட்டிகள் மட்டுமல்லாமல் டி20 போட்டிகளிலும் கோலியின் சாதனைகள் விரிகிறது. 2010 ஜூன் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 போட்டியில்
முதன்முறையாக களமிறங்கிய விராட் கோலி, கடைசியாக மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக டிசம்பர் 11ம் தேதி நடைபெற்ற போட்டி வரை மொத்தம் 75
போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 70 இன்னிங்ஸில் விளையாடி 247 பவுண்டரி, 71 சிக்ஸர்கள் உட்பட 2633 ரன்களை விளாசியிருக்கிறார். டி20 போட்டிகளில்
அதிக ரன்களை விளாசியவர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு தான் முதலிடம். டி20 போட்டிகளில் 2000 ரன்களை கடந்திருப்பது மொத்தம் 2 பேர் தான். அந்த
இரண்டு பேரும் இந்திய அணி வீரர்கள் என்பதும், கோலியும், ரோகித்தும் தான் அந்த இருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 90 போட்டிகளில் விளையாடி 2392
ரன்களை விளாசி இரண்டாவது இடத்தில் இருக்கிறார் ரோகித் சர்மா. சராசரியை கணக்கில் கொண்டாலும் கோலிக்கு தான் முதலிடம். 52.66 சராசரியுடன்  
பாகிஸ்தானின் பாபர் அஸாம், முன்னாள் இந்திய அணி கேப்டன் தோனி ஆகியோரை பின்னுக்குத்தள்ளியிருக்கிறார். 70 இன்னிங்ஸில் மொத்தமாக 247
பவுண்டரிகளை சிதறடித்திருக்கிறார் கோலி. அதிக பவுண்டரிகளை விளாசிய வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் இருப்பது கோலி தான். கோலியின் இந்த
சாதனையை தற்போதைக்கு முறியடிக்க முடியுமென்றால் அது ரோகித் சர்மாவாகதான் இருக்க முடியும். 212 பவுண்டரிகள் அடித்து, பவுண்டரி ரேஸில்
முன்னணியில் இருக்கிறார் ரோகித். ஆனால் மொத்தமாக கணக்கில் கொண்டால் அயர்லாந்தின் ஸ்டிர்லிங் என்ற வீரர் 231 பவுண்டரிகளை விளாசியிருக்கிறார்.
அதேபோல, டி20 போட்டிகளில் அதிக அரைசதங்களை கடந்த பட்டியலிலும் கோலி தான் முன்னணியில் இருக்கிறார். 24 முறை 50+ ரன்களை எடுத்திருக்கிறார்
கோலி. கோலிக்கு அடுத்தபடியாக 21 முறை 50+ ரன்களை எடுத்து ரோகித் சர்மா இரண்டாமிடத்திலும், 17 முறை 50+ ரன்கலை எடுத்து மார்ட்டின் குப்தில்
மூன்றாமிடத்திலும் இருக்கின்றனர். நாட் அவுட் என்று எடுத்துக்கொண்டால் விராட் கோலிக்கு இரண்டாவது இடம். தென்னாப்பிரிக்க அணியின் வீரர் டுமினி 57
இன்னிங்ஸில் களமிறங்கி 21 முறை ஆட்டமிழக்காமல் இருந்திருக்கிறார் என்றால், விராட்கோலி 70 இன்னிங்ஸில் களமிறங்கி 20 முறை ஆட்டமிழக்காமல்
களத்தில் இருந்திருக்கிறார்.

டெஸ்ட் கிரிக்கெட்:
என்னதான் 2008ம் ஆண்டிலேயே ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி அறிமுகம் ஆகிவிட்டாலும், சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் முதன்முதலாக
களமிறங்கியது 2011ல் தான். 2011 ஜூன் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய விராட் கோலி, கடைசியாக
இந்த ஆண்டு நவம்பரில் வங்கதேச அணிக்கு எதிராக களமிறங்கியதுவரை மொத்தம் 84 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். 141 இன்னிங்ஸில்
களமிறங்கியிருக்கும் கோலி 7202 ரன்களை விளாசியிருக்கிறார். ஆனாலும் அதிக சதமடித்தவர்கள் பட்டியலில் கோலிக்கு தான் முதலிடம். 27 சதங்களுடன்
கோலி முதலிடத்திலும், 26 சதங்களுடன் ஸ்மித் இரண்டாமிடத்திலும், 23 சதங்களுடன் வார்னர் மூன்றாமிடத்திலும் உள்ளனர். ஆனால், ஸ்மித் 128 இன்னிங்ஸில்
26 சதங்களை விளாசியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 111 போட்டிகளில் விளையாடி 8818 ரன்களை இங்கிலாந்து வீரர் குக் அடித்திருந்தாலும்,   டெஸ்ட்
போட்டிகளில் விராட் கோலி குறைவான போட்டிகளில் விளையாடி இந்த பத்து ஆண்டுகளில் அதிக ரன்களை விளாசியவர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தை
பிடித்திருக்கிறார். 162 இன்னிங்ஸில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் 7282 ரன்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.
ஒருநாள் போட்டிகளைப் போன்று முன்பே டெஸ்ட் போட்டிகளிலும் களமிறங்கியிருந்தால், டெஸ்ட் பட்டியலிலும் கோலியே முதலிடம் பிடித்திருப்பாரோ
என்னவோ..

கேப்டனாக:

பேட்டிங்கில் கோலி கில்லி என்றால், கேப்டன்ஷிப்பில் கோலி மங்காத்தாவாக இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 53 போட்டிகளில் இந்திய அணியை
வழிநடத்தியுள்ள விராட் கோலி, 33 முறை இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்திருக்கிறார். கோலி தலைமையிலான இந்திய அணி மொத்தம் 10 முறையே
தோல்வியை தழுவியிருக்கிறது. இங்கிலாந்து அணியின் குக் 59 போட்டிகளில் அந்த அணியை வழிநடத்தியிருக்கிறார், அவருக்கு அடுத்து மிஸ்பா உல் ஹக் 56
முறை பாகிஸ்தான் அணியை வழிநடத்தியிருக்கிறார். இவர்களுக்கு அடுத்தபடியாக ஒரு அணியை அதிக முறை வழிநடத்தியிருப்பது விராட் கோலி தான்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி இந்திய அணியை 50 போட்டிகளில் வழி நடத்தியிருக்கிறார். அந்த போட்டிகளில் இந்திய அணி 20 முறை
வெற்றியையும், 18 முறை தோல்வியையும் தழுவியிருக்கிறது. ஒருநாள் போட்டிகளை எடுத்துக்கொண்டால், அதிலும் கோலியின் ஆதிக்கம் இருக்கிறது. அதிக
போட்டிகள் ஒரு அணியை வழி நடத்திய கேப்டன்கள் பட்டியலில் 130 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்திய தோனி முதலிடத்தில் இருக்கிறார். தோனி
தலைமையிலான இந்திய அணி 71 முறை வெற்றியும், 50 முறை தோல்வியையும் தழுவியிருக்கிறது. ஆனால், கோலி தலைமையில் 83 ஒருநாள் போட்டிகளில்
களமிறங்கியிருக்கும் இந்திய அணி 60 போட்டிகளில் வெற்றியையும், 20 போட்டிகளில் தோல்வியையும் தழுவியிருக்கிறது. தோனி கேப்டன்ஷிப்பில் வெற்றி
சதவீதம் 58.33; கோலி தலைமையில் வெற்றி சதவீதம் 74.69. டி20 போட்டிகளை எடுத்துக்கொண்டால் 30 போட்டிகளில் இந்திய அணியை வழி நடத்தியிருக்கும்
கோலி அதில் 18 போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடித்தந்திருக்கிறார். 11 போட்டிகளில் தோல்வியை சந்தித்திருக்கிறது கோலி தலைமையிலான
இந்திய அணி. ஒரு அணியை அதிக போட்டிகளில் வழிநடத்திய வீரர்கள் பட்டியலில் 53 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தி பட்டியலில் முதலிடத்தில்
இருக்கிறார் தோனி. அதில் 32 முறை வெற்றியையும், 20 முறை தோல்வியையும் சந்தித்திருக்கிறது இந்திய அணி. தோனி தலைமையிலான அணியில் இந்திய
அணியின் வெற்றி சதவீதம்61.53 என்பதும், கோலி தலைமையிலான இந்திய அணியின் வெற்றி சதவீதம் 62.06 என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கண்டவைகள் எல்லாம் கோலி எட்டியுள்ள சாதனைகளின் சிறுதுளிகள் மட்டுமே. கடலில் எப்படி கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்தாலும், கண்ணுக்கு
தெரிவது சில உயிரினங்கள் மட்டுமே. அது போல கோலியின் நூற்றுகணக்கான சாதனைகளில் சிலவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட முடிந்தது. முழுதையும்
சொல்லவேண்டுமெனில் அதை சொல்வதற்கும் சிரமம், படிப்பதற்கும் சிரமம் என்பதால் சிலவற்றோடு முடித்துக்கொள்ளலாம். கடந்த 2000 முதலான பத்து
ஆண்டுகளில் சிறந்த வீரராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். 2010-2019 வரையிலான இந்த பத்து
ஆண்டுகளில் சிறந்த வீரராக விராட் கோலி முழுமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி தேர்ந்தெடுக்கப்படுவது தான் நியாயமும்
கூட.

Categories: Sports
Image
தற்போதைய செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்

37 minutes ago

தமிழகத்தில் கொரோனாவிற்கு 2வது உயிரிழப்பு!

4 hours ago

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி!

4 hours ago

அமெரிக்காவில் கோரதாண்டவம் ஆடி வரும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 480 பேர் உயிரிழப்பு.

7 hours ago

கொரோனா வைரசால் பஞ்சாபில் விவசாயம் கடும் பாதிப்பு: அறுவடை நேரத்தில் ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி.

7 hours ago

இந்தியாவில் கொரோனாவால் 2,547 பேர் பாதிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு.

7 hours ago

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,000-ஐ கடந்தது: நேற்று ஒரே நாளில் 6000க்கும் மேற்பட்டோர் பலி.

7 hours ago

144 தடை உத்தரவை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை.

7 hours ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411ஆக உயர்வு: சமூக பரவல் நிலையை அடையவில்லை என பீலா ராஜேஷ் தகவல்.

7 hours ago

#BREAKING | இந்தியாவில் 2,500ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

19 hours ago

சென்னையில் நாளை முதல் ஆடு, கோழி உட்பட அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு!

22 hours ago

தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று ரூ.1,000 வழங்க அரசு முடிவு!

22 hours ago

அகல் விளக்குகளை ஏற்றி கொரோனா இருளை நீக்குவோம்! - பிரதமர் மோடி

1 day ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,000-ஐ தாண்டியது!

1 day ago

உலகளவில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 53,000 கடந்தது: நேற்று ஒரே நாளில் 5,900 பேர் உயிரிழப்பு.

1 day ago

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த லோகேஷ் என்ற 22 வயது மாணவர் உயிரிழப்பு;

1 day ago

#BREAKING | தமிழகத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 day ago

கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 286ஆக உயர்வு!

1 day ago

கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 12 பேர் உயிரிழப்பு!

2 days ago

கேரளாவில் மருத்துவ சான்று இருந்தால் மது வழங்கலாம் என்ற உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை!

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1965 ஆக உயர்வு!

2 days ago

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டோர்கள் எண்ணிக்கை 2,00,000 தாண்டியது.

2 days ago

தும்மும் போது கொரோனா வைரஸ் 26 அடி வரை பரவ வாய்ப்பு: சமூக பரவல் குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.

2 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானோர் எண்ணிக்கை 1,834 ஆக உயர்வு: கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

2 days ago

டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு குறித்து முறையான விசாரணை மேற்கோள்ள வேண்டும்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள்.

2 days ago

உலகளவில் கொரோனா தாக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 47,000 தாண்டியது: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,00,000-ஐ நெருங்கியது.

1 day ago

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்!

3 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!

3 days ago

கொரோனா தொற்றால் அவசர நிலையை நோக்கி நாடு செல்கிறது: ஜப்பான் அரசு செய்தி தொடர்பாளர் அறிவிப்பு.

3 days ago

நிஜாமுதின் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 617 பேர் மருத்துவமனையில் அனுமதி... டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தகவல்.

3 days ago

கடலூரில் கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் உயிரிழப்பு: சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் தகவல்.

2 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனது ஒரு வருட ஊதியத்தை வழங்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா: மக்களும் தங்களால் முடிந்த தொகையை வழங்க கோரிக்கை.

3 days ago

கொரோனாவல் சிகிச்சை பெறுவோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க செயலி: செல்பி எடுத்து ஆப்பில் பதிவேற்றினால், சிகிச்சை என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

3 days ago

விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல தடையில்லை - முதல்வர் பழனிசாமி

3 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக உயர்வு!

3 days ago

தமிழகத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

3 days ago

அடுத்த 3 மாதங்களுக்கு EMI கட்டத்தேவையில்லை என தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி!

4 days ago

அடுத்த 3 மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை! - தமிழக நிதித்துறை செயலாளர்

4 days ago

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் சிறு, குறு விவசாயிகள் பாதிப்பு!

4 days ago

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு;பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

4 days ago

ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

3 days ago

கொரோனா பாதிப்பால் மேற்குவங்கத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

4 days ago

கொரோனாவுக்கு மகாராஷ்டிராவில் மேலும் 5 பேர் பாதிப்பு!

4 days ago

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

4 days ago

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி நன்கொடை!

4 days ago

கேரளாவில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

4 days ago

ஸ்பெயினில் கொரோனா பாதிப்பிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 812 பேர் உயிரிழப்பு!

4 days ago

கொரோனா பணிகளை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு!

5 days ago

திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்வு!

5 days ago

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் மௌன அஞ்சலி!

5 days ago

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை! - மத்திய அரசு

5 days ago

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் மரணம்!

5 days ago

புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட்!

5 days ago

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் 7,02,100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

5 days ago

தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்களின் தேவைகளை கண்காணிக்க குழு!

5 days ago

காரணமின்றி சாலையில் நடமாடுபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

5 days ago

கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 202 ஆனது!

5 days ago

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

5 days ago

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 பேர் பலி, புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு.

5 days ago

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு!

5 days ago

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

6 days ago

தமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.

6 days ago

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.

6 days ago

இந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.

6 days ago

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.

6 days ago

#BREAKING | மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

6 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதியுதவி!

6 days ago

மகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!

6 days ago

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 கடந்தது!

1 week ago

உலகளவில் கொரோனா தாக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது: நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,96,000 ஆக உயர்வு.

6 days ago

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 18,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு: நோய் தாக்கத்திற்கு 19 பேர் பலியானதாக மத்திய சுகாதார துறை தகவல்.

1 week ago

கொரோனா நோய் தடுப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.4000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

தனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே தீர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

6 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த இளைஞர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

1 week ago

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை இல்லாத வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 1,000 பேர் மரணம்!

1 week ago

தமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு!

1 week ago

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது!

1 week ago

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000ஐ கடந்தது!

1 week ago

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது!

1 week ago

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.

1 week ago

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,520 ஆக உயர்வு; நேற்று ஒரே நாளில் 17,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு.

1 week ago

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 5,31,806 பேர் பாதிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியது.

1 week ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,00,000 கடந்தது!

1 week ago

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது!

1 week ago

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் 144 தடையை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு!

1 week ago

கொரோனா நிவாரண பணிகளுக்காக ரூ.1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவிற்கு பலி எண்ணிக்கை 16ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக அதிகரிப்பு: இதுவரை 13 பேர் உயிரிழந்த நிலையில், 42 பேர் குணமடைந்ததாக அறிவிப்பு.

1 week ago

மகாராஷ்டிராவில் ஒருவர் கொரோனாவுக்கு மரணம்; இந்தியாவில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கொரோனா பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

1 week ago

பின்தங்கிய வகுப்பு மக்களுக்காக ரூ.50 லட்சம் மதிப்பிலான அரிசியை நன்கொடையாக வழங்குவதாக சவுரவ் கங்குலி அறிவிப்பு

1 week ago

உலகளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20,494 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 11 ஆக உயர்வு!

1 week ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்திற்கு ரூ.4,000 கோடி ஒதுக்க முதல்வர் பிரதமருக்கு கடிதம்!

1 week ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19,000 ஆக உயர்வு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 562 ஆக உயர்வு; உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக அதிகரிப்பு.

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை