Skip to main content

புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணிக்கும் இலங்கை அரசு!

March 23, 2019
Image

கஜமுகன்

செயற்பாட்டாளர், கஜமுகன்

Image

இலங்கை அரசுக்கு எதிராக இயங்கும் புலம்பெயர் அமைப்புகளைக் கண்காணிக்கவும், அவற்றினுள் பிளவுகளை ஏற்படுத்தவும் அதன் செயற்பாடுகளை முடக்கவும் இலங்கை அரசு முயற்சித்து வருகின்றது. புலம் பெயர் தேசங்களில் நடைபெறும் போராட்டங்களை மவுனிக்கச் செய்வதற்கும், அவர்களுக்கு எதிராக இயங்குவதற்கும் நிதிகளை ஒதுக்கி அதற்கென ஆட்களையும் திரட்டி வருகின்றது இலங்கை அரசு. இது தொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் திட்டமிடலிலும் பல அமைச்சர்கள் பின்னணியில் இருப்பதாக சந்தேகம் எழுப்பப்படுகிறது. மேலும் கடந்த காலங்களின் புலம் பெயர் தேசங்களில் விடுதலைப்புலிகளுக்கு எதிராக இயங்கி வந்தவர்கள் இலங்கை அரசின் இந்த இரகசிய நடவடிக்கைகளுக்கு தமது ஆதரவை வழங்குகின்றனர்.  

யுத்தம் நிறைவடைந்த பின்னரும் சில சட்டவிரோத நடவடிக்கைகளை இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்டனர் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அண்மையில் தெரிவித்திருந்தார். அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் வெளியான ITJP அறிக்கையும் இலங்கை ராணுவம் மற்றும் விசேட அதிரடிப் படையினரின் மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வந்தது. இதற்குப் பின்னரும் கூட 2009-இல் யுத்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மேற்கொண்ட ராணுவத்தினருக்கு எதிராக எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. யுத்தக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் வேலைகளையே இலங்கை அரசு செய்து வருகிறது. இலங்கை அரசுக்கு எதிரான போராட்டங்களை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டி அவர்களுக்கு ஆதரவாக புலம் பெயர் தேசத்தில் நிகழும் போராட்டங்களை முடக்க முயற்சிக்கின்றது இலங்கை அரசு. புலம்பெயர் தேசத்தில் நிகழும் போராட்டங்களைக் குழப்பி அதனை நீர்த்துப் போகச் செய்வதன் மூலம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கப் பெறாமல் செய்வதே இலங்கை அரசின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.
   
‘’கடந்த காலத் தவறுகளை மன்னிப்போம், மறப்போம்’’ என பிரதமர்  ரணில் விக்ரமசிங்கா அண்மையில் தெரிவித்திருந்தார். அதேபோல் ‘’இலங்கை இராணுவம் எதுவித யுத்தக் குற்றங்களிலும் ஈடுபடவில்லை, யுத்தக் குற்றங்களைப் பற்றிப் பேசுவோர் தீவிரவாதிகள் எனவும் அவர்கள் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையோர்’’ எனவும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தார். ஆகவே இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் இணைந்து இராணுவத்தினரின் மனித உரிமை மீறல்களை மறைப்பதிலும், யுத்தக் குற்றவாளிகளை காப்பாற்றுவதிலுமே குறியாக உள்ளனர் என வெளிப்படையாகத்  தெரிகின்றது. அதன் ஒரு அங்கமாகவே புலம்பெயர் செயற்பாட்டாளர்களைக் கண்காணித்து அவர்களின் நடவடிக்கைகளை முடக்க முயற்சிக்கின்றனர்.
 
மேலும், யுத்தக் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்குப் பதிலாக அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கி அவர்களை கெளரவிக்கின்றது இவ்வரசு. ஐ.நாவின் பாதுகாப்புச்சபைக்கு ஆலோசனை வழங்க மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை அரசினால் அனுப்பப்பட்டிருந்தார் எனினும் புலம் பெயர் மக்களின் போராட்டங்களினால் ஐ.நாவில் அவர் பங்கு பெறுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு இராணுவத்தின் இரண்டாம் நிலைக் கட்டளைத் தளபதியாக பதவி உயர்வு கொடுத்து அவரை கெளரவபடுத்தியிருந்தது இலங்கை அரசு. இது மனித உரிமைகளை குழி தோண்டிப் புதைக்கும் ஒரு செயலாகும். சவெந்திர சில்வாவை படைகளின் பிரதானியாக நியமித்திருப்பது கண்டிக்கத்தக்க விடயம் என ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் தற்பொழுது நடைபெற்றுகொண்டிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் கவுன்சிலின் கூட்டத் தொடரில் தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் இலங்கையின் எழுபதாவது சுதந்திர தினத்தன்று லண்டனிலுள்ள  இலங்கை தூதரகம் முன்பாக தமிழ் சொலிடாரிட்டி அமைப்பானது ஒழுங்கமைத்த போராட்டத்தில் ‘கழுத்தை அறுப்பேன்’ என விரல் மூலம் சைகை செய்து கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோவின் வழக்கு தற்பொழுது லண்டனிலுள்ள வெஸ்ட்மினிஸ்டர் குற்றவியல்  நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருகின்றது. இவ்வழக்கில் இலங்கைத் தூதரகத்தால் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், இலங்கை அரசுக்கு எதிராக இடம்பெறும் போராட்டம், ஆர்ப்பாட்டம் போன்ற செயற்பாடுகளை கண்காணித்தலும், அது தொடர்பான அறிக்கைகளை பாதுகாப்பு அமைச்சு, வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சு, இலங்கை புலனாய்வுப்பிரிவு போன்றனவற்றுக்கு தெரியப்படுத்துதலும் பிரியங்க பெர்னாண்டோவின் பணி என தெரிவிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் பிரித்தானியாவிலுள்ள உளவுத்துறை நிறுவனங்களுடன் சுமுகமான உறவைப் பேணி அதன் மூலம் இலங்கைக்குத் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதலும் பிரியங்காவின் கடமை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் புலம் பெயர் தேசத்தில், அதிலும் குறிப்பாக பிரித்தானியாவில் போராட்டத்தில் ஈடுபடும் தமிழ் மக்களைக் கண்காணிக்கும் இலங்கை அரசின் இரகசியத் திட்டம் வெளிவந்துள்ளது. சட்டவிரோதமான இச்செயலை மேற்கொள்ள இலங்கை அதிகாரிகளை அனுமதித்திருக்கும்  பிரித்தானிய அரசின் இந்நடவடிக்கையானது கண்டிக்கத்தக்கது. 

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் புலம்பெயர் தமிழர்களை புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்யும் இலங்கை அரச பிரதிநிதிகளின் செயற்பாடானது போராடும் புலம்பெயர் தமிழர்களின் வாழ்க்கையை மேலும் அபாயத்தினுள் தள்ளுகின்றது. ஆனால் இலங்கை அரசின் இந்த இரகசியத் திட்டம் வெளிவந்த பின்னரும் கூட தமிழ் மக்களின் பிரதிநிதி எனக் கூறித் திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு- நல்லிணக்கம் என்ற பெயரில் அரசுடன் சரணாகதி அடைந்திருக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு-  புலம்பெயர் தமிழர்களைக் கண்காணிக்கும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக எந்தவித கண்டனத்தையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இலங்கை அரசானது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்குவதற்குப் பதிலாக, இராணுவத்தின் யுத்தக் குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் மறைத்து, புலம் பெயர் போராடங்களை முடக்கி அதனை நீர்த்துப் போகச் செய்ய முயல்கின்றது. இலங்கை அரசின் சூழ்ச்சிகளுக்கு இரையாகாமல் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் வரை, புலம் பெயர் அமைப்புகள் ஒன்றிணைந்து தமது போராட்டதை முன்னெடுக்க வேண்டும். 
 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.!

56 minutes ago

டெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

2 hours ago

டெல்லி கலவரம்: சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைத்தது காவல்துறை!

3 hours ago

தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 செயலிழந்ததால் மக்கள் அவதி!

3 hours ago

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மியே காரணம்: பிரகாஷ் ஜவடேகர்

5 hours ago

கே.பி.பி.சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

9 hours ago

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

12 hours ago

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

13 hours ago

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

14 hours ago

குழந்தைகள் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்த மேலும் ஒருவர் கைது!

14 hours ago

என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

14 hours ago

டெல்லி வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு....!

14 hours ago

பாகிஸ்தானில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

21 hours ago

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்:ரஜினிகாந்த்

1 day ago

டெல்லி கலவரத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்: ரஜினிகாந்த்

1 day ago

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!

1 day ago

டெல்லி வன்முறை எதிரொலி: ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

1 day ago

டெல்லி வன்முறை சம்பவங்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பேரணி: சோனியா காந்தி

1 day ago

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

1 day ago

டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

1 day ago

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி கூடுகிறது!

1 day ago

ஆபாச பட விவகாரம்: மதுரையில் ஒருவர் கைது!

1 day ago

2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

1 day ago

டெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

1 day ago

தேவைப்பட்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அதிபர் ட்ரம்ப்

2 days ago

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராடும் : ட்ரம்ப்

2 days ago

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் இன்று மீண்டும் வன்முறை.!

2 days ago

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்!

2 days ago

திருவாரூரில் மார்ச் 7 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாரட்டு விழா!

2 days ago

குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு!

2 days ago

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல்!

2 days ago

மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு மார்ச் 26ல் தேர்தல்!

2 days ago

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது!

2 days ago

பல்லடம் கள்ளிப்பாளையம் SBI வங்கி கொள்ளை: தனிப்படை அமைப்பு!

2 days ago

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவரச கூட்டத்திற்கு அழைப்பு!

2 days ago

டெல்லி: வடகிழக்கு பகுதியான பிரம்மபுரியில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல்!

2 days ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஏப்ரலில் அறிவிப்பாணை?

2 days ago

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

3 days ago

தாஜ்மஹால்-க்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

3 days ago

நமஸ்தே என்று ஹிந்தியில் கூறி உரையைத் தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

3 days ago

இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்க நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது!

3 days ago

பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் அதிபர் ட்ரம்ப்!

3 days ago

இந்தியா வந்தடைந்தார் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்!

3 days ago

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட்டம்!

3 days ago

வில்சன் கொலை வழக்கு: தூத்துக்குடி, கடலூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

3 days ago

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

3 days ago

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

4 days ago

சென்னை பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து!

4 days ago

33 ஆயிரத்தை நெருங்குகிறது ஆபரணத் தங்கம்!

4 days ago

2வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டம்: மயங்க் அகர்வால் அரைசதம்

4 days ago

ஆசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் ரவி தாஹியா!

4 days ago

நேருவை தவறாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக மன்மோகன்சிங் குற்றச்சாட்டு!

4 days ago

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகை !

4 days ago

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

5 days ago

மகாராஷ்டிராவில் என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம்: உத்தவ் தாக்ரே

5 days ago

ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 32,576 ரூபாய் விற்பனை

5 days ago

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்!

5 days ago

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை!

5 days ago

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக செயல்படும்! - அதிமுக

6 days ago

நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் : கே.எஸ்.அழகிரி

6 days ago

தயாநிதி மாறனுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு!

6 days ago

லைகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

6 days ago

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!

6 days ago

முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஃபிரஞ்சு ஓபனில் கலந்துகொள்ளப் போவதில்லை: ரோஜர் ஃபெடரர் அறிவிப்பு!

1 week ago

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு செய்த பரிந்துரை வலுவிழந்துவிட்டது - மத்திய அரசு

1 week ago

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது!

1 week ago

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

1 week ago

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் - முதல்வர்

1 week ago

டேவிட் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி, சேஷாயி ஆகியோர் ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு!

1 week ago

பல்லாவரம் மற்றும் மதுரவாயல் தாலுக்காக்களில் புதிய நீதிமன்றங்கள்: சி.வி சண்முகம்

1 week ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது தவறு: வைகோ

1 week ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்: ஈபிஎஸ்

1 week ago

அவிநாசி அருகே சொகுசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து!

1 week ago

ஏப்.1 முதல் தூய்மையான பெட்ரோல்: பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவிப்பு

1 week ago

இந்தியன்-2 படப்பிடிப்பில் அதிர்ச்சி சம்பவம்!

1 week ago

சிஏஏ போராட்டம் - 20,000 பேர் மீது வழக்கு

1 week ago

மதுரை, கோவையில் எழுத்துத்தேர்வு நடைபெறாது என டிஎன்பிஎஸ்பி அறிவிப்பு!

1 week ago

சிட்கோ நில முறைகேடு வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ்!

1 week ago

"7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்" - முதல்வர் பழனிசாமி

1 week ago

இந்தாண்டு இறுதிக்குள் அத்திக்கடவு அவினாசி திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் - முதல்வர்

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி தொடங்கியது!

1 week ago

தலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத அளவில் கூடுதல் பாதுகாப்பு !

1 week ago

கொன்று குவிக்கும் கொரோனா: ஒரே நாளில் 132 மரணங்கள்!

1 week ago

இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை!- உயர்நீதிமன்றம்

1 week ago

பூரண மது விலக்கே எங்களது கொள்கை: அமைச்சர் தங்கமணி

1 week ago

சச்சின் டெண்டுல்கருக்கு லோரியஸ் விருது!

1 week ago

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு!

1 week ago

ஆவடி அருகே 2 குழந்தைகளுடன் மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!

1 week ago

ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

1 week ago

"என்பிஆர்-க்கு எதிராக மக்களை திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம்!" - திமுக தீர்மானம் நிறைவேற்றம்!

1 week ago

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்!

1 week ago

2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்!

1 week ago

வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு.

1 week ago

“கைது செய்ய முயன்றபோது போராட்டக்காரர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

“போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

”காவல்துறையின் அனுமதியின்றி வண்ணாரப்பேட்டையில்போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

வேளாண் மணடலத்தை அறிவிப்பது நீங்கள் அனுமதியை எங்கள் எம்.பிக்கள் பெற்றுத்தர வேண்டுமா? - சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி

1 week ago

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை