Skip to main content

Breaking News

பரிசுத்தொகையில் பாரபட்சம் காட்டும் தமிழக அரசு!

April 26, 2019
Image

குதுப்தீன்

கட்டுரையாளர்

Image

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை களைகட்டும் ஆசிய அளவிலான தடகளப் போட்டி, இந்த முறை கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்றது. 21-ம் தேதி இந்தப் போட்டி தொடங்கிய போது, தமிழகத்தில் ஐபிஎல் கிரிக்கெட் விளையாட்டு தொடர் பற்றிய வாதப் பிரதிவாதங்கள் வலைத்தளங்களில் சூடுபிடிக்கத் தொடங்கியது.


23-ம் தேதி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஹைதராபாத் அணியை வீழ்த்திய செய்தியை ஒன்றுமில்லாமல் செய்தார் திருச்சியைச் சேர்ந்த தடகள வீராங்கனை கோமதி.


தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்ற அவர், பந்தய தூரத்தை 2:02.70 வினாடிகளில் கடந்து தங்கப் பதக்கத்தைச் சூடினார். ஆசிய அளவில் தங்கப் பதக்கம் வென்ற மகிழ்ச்சியில் அவர் திளைத்திருக்க, இதுதான் அவரது ஓட்டப் பந்தய வாழ்வில் மிகச் சிறந்த போட்டி என சொல்லும் வகையில் குறைவான நேரத்தில் பந்தய தூரத்தை கடந்திருப்பதை அறிந்து மகிழ்ந்தார்.


பல்வேறு தரப்பிலிருந்தும் கோமதிக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. தமிழக அரசு சார்பிலும் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதோடு, ஊக்கத் தொகையாக 3 லட்சம் ரூபாயும் கோமதிக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஒரு பக்கம் கோமதியை தமிழர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் அதேவேளை, மறுபக்கம் விளையாட்டு ஆர்வலர்கள் தமிழக அரசின் விளையாட்டுக் கொள்கையை விமர்சித்து விளாசத் தொடங்கியிருக்கிறார்கள்.


சர்வதேச அளவில் சாதிக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களும் ஊடங்களுக்கு பேட்டியளிக்கும் போது, இரண்டு விஷயங்களை மறக்காமல் குறிப்பிடுவது வாடிக்கை. 1. பதக்கம் பெற உதவியவர்களுக்கு நன்றி. 2. தமிழக அரசின் உதவியை எதிர்பார்ப்பது.


கோமதியும் அப்படித்தான் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தார். தமிழக அரசு விளையாட்டு வீரர்களுக்கு உதவி செய்தால், திறமையான ஏழை மாணவர்கள் சாதிப்பார்கள் என்று கூறினார்.


நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை சர்வதேச அளவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் போது, பதக்க வேட்டையில் பின்தங்கும் போது இந்திய அளவில் விவாதம் நடப்பதும், போட்டிகள் முடிவடைந்த பின் அதைக் கடந்து போவதும்தான் இந்திய விளையாட்டுத் துறையின் சாபக் கேடாக உள்ளது.


கோமதி போன்ற சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்த வீரர்கள், திடீரென பதக்கம் பெற்று கவனம் பெறும் போது, விளையாட்டுத் துறையின் மீது அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்ற குரல்கள் எழுவது வாடிக்கை. இப்போதும் அப்படித்தான் குரல்கள் ஒலிக்கின்றன. ஆனால் அரசின் கொள்கை முடிவிலேயே, பாரபட்சங்களை கைவிட்டு, சீர்திருத்தம் செய்ய வேண்டும் என தற்போது, விளையாட்டு ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.


தமிழகத்தில் விளையாட்டுத்துறை மேம்படுத்த, ஐஏஎஸ் அதிகாரியின் தலைமையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் செயல்பட்டு வருகிறது. பயிற்சியாளர்களை நியமிப்பது, விளையாட்டு மைதானங்களை பராமரிப்பது, திறமையான விளையாட்டு வீரர்களை தேர்வு செய்து பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மேற்கொண்டு வருகிறது.


கடந்த 2001-ம் ஆண்டு, விளையாட்டுத் துறையில் சாதிப்பவர்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் விகிதம் மாற்றி அமைக்கப்பட்டது. அதன் விவரம்:

எண்     விளையாட்டுப் போட்டி           தங்கம்               வெள்ளி                வெண்கலம் 
1                    ஒலிம்பிக்                        ரூ. 2 கோடி           ரூ. 1 கோடி         ரூ. 50 லட்சம்
2                ஆசியப் போட்டி                ரூ. 50 லட்சம்       ரூ. 30 லட்சம்     ரூ. 20 லட்சம்
3        காமல்வெல்த் போட்டி            ரூ. 50 லட்சம்       ரூ. 30 லட்சம்      ரூ. 20 லட்சம்
4           தெற்காசிய போட்டி               ரூ. 5 லட்சம்         ரூ. 3 லட்சம்        ரூ. 2 லட்சம்
5               தேசிய போட்டி                    ரூ. 5 லட்சம்        ரூ. 3 லட்சம்         ரூ. 2 லட்சம்

ஆதாரம்: https://www.sdat.tn.gov.in/content.php?token=highcash

ஒலிம்பிக் சங்கம் சர்வதேச மற்றும் ஆசிய அளவில் நடைபெறும் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. அதேபோல, காமல்வெல்த் விளையாட்டுப் போட்டிகளும் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. தெற்காசிய மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.


இந்தப் போட்டிகளில் வெல்பவர்களுக்கு மட்டுமே தமிழக அரசின் சார்பில் ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. ஒலிம்பிக்கில் இடம்பெறாத, செஸ், கேரம், வளுதூக்குதல் மற்றும் டென்னிகோட் ஆகிய போட்டிகளில் சர்வதேச மற்றும் தேசிய போட்டிகளில் பதக்கம் வென்றாலும் ஊக்கப் பரிசு வழங்கப்படுகிறது.


ஊக்கப் பரிசு தொடர்பான தமிழக அரசின் மேற்கண்ட பட்டியல் குறித்து, விளையாட்டு ஆர்வலர்களும் பயிற்சியாளர்களும் பதக்கம் வெல்லும் வீரர்களும் தொடர்ந்து ஆட்சேபனைகளையும் அதிருப்தியையும் அரசுக்கு தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழக அரசு கவனம் குவிப்பதாக தெரியவில்லை.


திருப்பூர் மாவட்டம் சோமனூர் கிராமத்தைச் சேர்ந்த, மும்முறை தாண்டுதல் வீரர் கமல்ராஜ். இவர் கடந்த ஆண்டு சர்வதேச போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை குவித்து அசத்தியிருக்கிறார். ஆனால் தமிழக அரசின் சார்பில் எந்த ஊக்கத்தொகையும் உதவியும் வழங்கப்படவில்லை.


➤ 2018, பிப்ரவரியில் ஈரானில் நடைபெற்ற ஆசிய உள்ளரங்குப் போட்டியில் வெள்ளிப் பதக்கம்.


➤ 2018, மே மாதத்தில் இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய தடகளப் போட்டியில் தங்கம்.


➤ 2018, ஜூனில் ஜப்பான் நடைபெற்ற ஆசிய இளையோர் தடகளப் போட்டியில் தங்கம்


இது மும்முறை தாண்டுதல் வீரர் கமல்ராஜின் சாதனைகள். இவர் ஒரு மில் தொழிலாளியின் மகன் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.


ஒலிம்பிக் சங்கம் சர்வதேச அளவில் போட்டிகள் நடத்துவதைப் போல, ஒவ்வொரு விளையாட்டு சங்கமும் சர்வதேச, ஆசிய அளவில் போட்டிகளை நடத்தி வருகின்றன. அப்படி சர்வதேச தடகள சம்மேளனம் நடத்திய ஆசியப் போட்டியில்தான் கோமதி தங்கப் பதக்கத்தை வென்றிருக்கிறார். இதுவே ஒலிம்பிக் சங்கம் நடத்தியிருந்தால் 50 லட்சம் ரூபாய் ஊக்கத் தொகையை தமிழக அரசு வழங்கியிருக்கும். ஆனால் வெறுமனே 3 லட்சம் ரூபாய் மட்டுமே தற்போது தமிழக அரசால் வழங்கப்பட்டிருக்கிறது.


ஊக்கத் தொகை வழங்குவதில் தமிழக அரசின் கவனமின்மையையும் பாரபட்சமும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும், ஆசிய தடகளப் போட்டி கடந்த முறை, இந்தியாவில் ஒடிசாவில் நடைபெற்றது. அந்த தொடரில், புதுக்கோட்டையைச் சேர்ந்த லஷ்மணன் 5000 மீட்டர் மற்றும் 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயங்களில் தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. அதே தொடரில் 400 மீட்டர் தொடரோட்டத்தில் தங்கப் பதக்கம், 400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜிவ்-க்கு 15 லட்சம் ரூபாயும் ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்கி கவுரவித்தது. (சட்டசபையில் வைத்து இந்த அறிவிப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டதை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும்.)

ஒலிம்பிக் போட்டிகளில் சாதிக்கத் துடிக்கும் திறமையாள இளம் வீரர்களை கண்டறிய அரசு தவறுவதோடு, விளையாட்டுப் போட்டிகளின் படிமுறைகளையும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கூர்ந்து நோக்கத் தவறுவதாக விளையாட்டு ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சர்வதேச, ஆசிய போட்டிகளில் பதக்கம் வெல்வதே, ஒலிம்பிக் போட்டிகளில் கால் பதிப்பதற்கான முன்னோட்டப் போட்டிகளாக உள்ளன. அப்படியிருக்கையில், தமிழக அரசின் ஊக்கத் தொகை பட்டியலில் விளையாட்டு சங்கங்கள் நடத்தும் சர்வதேச போட்டிகளை இணைக்காதது, விளையாட்டு வீரர்களின் திறமைகளை அவமதிப்பது என இளம் விளையாட்டு வீரர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்வு: இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழப்பு!

2 minutes ago

கொரோனாவால் இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளே பாதிக்கப்பட்டுள்ளன; கொரோனா குறித்த விழிப்புணர்வு கட்சி தொண்டர்களிடம் இருக்க வேண்டும்- பிரதமர் மோடி

5 hours ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 99 ஆக உயர்வு: தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 571ஆக உயர்வு.

8 hours ago

உலகளவில் கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,458 ஆக உயர்வு; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,273,712 ஆக உயர்வு!

8 hours ago

டாஸ்மாக் கடைகளிலிருந்து சரக்குகளை மாற்றும்போது மது விற்பனை: போலீசாரின் கண் முன்னே பெட்டி, பெட்டியாக வாங்கிச் சென்ற குடிமகன்கள்.

8 hours ago

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 65,000 தாண்டியது!

1 day ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 77 ஆக அதிகரிப்பு; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374 ஆக உயர்வு!

1 day ago

ஊரடங்கு காரணமாக புத்துயிர் பெறும் இயற்கை வளங்கள்: கங்கை நதியில் 40 சதவீத மாசுகள் குறைந்திருப்பதாக ஆய்வில் தகவல்.

1 day ago

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரிடம் அன்புடனும், பரிவுடனும் நடந்துகொள்ள மக்களுக்கு முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்.

1 day ago

தமிழகத்தில் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 485 ஆக அதிகரிப்பு.

1 day ago

தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

1 day ago

கடந்த 24 மணி நேரத்தில் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதார அமைச்சகம்

2 days ago

தமிழகத்தில் கொரோனாவிற்கு 2வது உயிரிழப்பு!

2 days ago

கொரோனா தடுப்பு பணிகளுக்காக அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிதியுதவி!

2 days ago

அமெரிக்காவில் கோரதாண்டவம் ஆடி வரும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 480 பேர் உயிரிழப்பு.

2 days ago

கொரோனா வைரசால் பஞ்சாபில் விவசாயம் கடும் பாதிப்பு: அறுவடை நேரத்தில் ஆட்கள் கிடைக்காமல் விவசாயிகள் அவதி.

2 days ago

இந்தியாவில் கொரோனாவால் 2,547 பேர் பாதிப்பு: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக அதிகரிப்பு.

2 days ago

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59,000-ஐ கடந்தது: நேற்று ஒரே நாளில் 6000க்கும் மேற்பட்டோர் பலி.

2 days ago

144 தடை உத்தரவை மீறினால் சட்டம் தன் கடமையைச் செய்யும்: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை.

2 days ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 411ஆக உயர்வு: சமூக பரவல் நிலையை அடையவில்லை என பீலா ராஜேஷ் தகவல்.

2 days ago

#BREAKING | இந்தியாவில் 2,500ஐ கடந்த கொரோனா பாதிப்பு!

2 days ago

சென்னையில் நாளை முதல் ஆடு, கோழி உட்பட அனைத்து இறைச்சி கடைகளையும் மூட சென்னை மாநகராட்சி உத்தரவு!

2 days ago

தமிழகத்தில் வரும் 7ம் தேதி முதல் வீடு வீடாகச் சென்று ரூ.1,000 வழங்க அரசு முடிவு!

2 days ago

அகல் விளக்குகளை ஏற்றி கொரோனா இருளை நீக்குவோம்! - பிரதமர் மோடி

2 days ago

உலகளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 54,000-ஐ தாண்டியது!

2 days ago

உலகளவில் கொரோனாவிற்கு பலியானோரின் எண்ணிக்கை 53,000 கடந்தது: நேற்று ஒரே நாளில் 5,900 பேர் உயிரிழப்பு.

3 days ago

மகாராஷ்டிராவில் இருந்து தமிழகம் நோக்கி நடந்து வந்த லோகேஷ் என்ற 22 வயது மாணவர் உயிரிழப்பு;

3 days ago

#BREAKING | தமிழகத்தில் புதிதாக 75 பேருக்கு கொரோனா பாதிப்பு!

3 days ago

கேரளாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 286ஆக உயர்வு!

3 days ago

கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் இந்தியாவில் 12 பேர் உயிரிழப்பு!

3 days ago

கேரளாவில் மருத்துவ சான்று இருந்தால் மது வழங்கலாம் என்ற உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை!

4 days ago

இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக உயர்வு; பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1965 ஆக உயர்வு!

4 days ago

அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 884 பேர் உயிரிழப்பு: பாதிக்கப்பட்டோர்கள் எண்ணிக்கை 2,00,000 தாண்டியது.

4 days ago

தும்மும் போது கொரோனா வைரஸ் 26 அடி வரை பரவ வாய்ப்பு: சமூக பரவல் குறித்த ஆய்வில் அதிர்ச்சித் தகவல்.

4 days ago

இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு ஆளானோர் எண்ணிக்கை 1,834 ஆக உயர்வு: கடந்த 24 மணி நேரத்தில் 437 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்.

4 days ago

டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமிய மாநாடு குறித்து முறையான விசாரணை மேற்கோள்ள வேண்டும்: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சி வேண்டுகோள்.

4 days ago

உலகளவில் கொரோனா தாக்கத்திற்கு பலியானவர்கள் எண்ணிக்கை 47,000 தாண்டியது: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 10,00,000-ஐ நெருங்கியது.

3 days ago

பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் அடுத்த 3 மாதங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்!

5 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நாளை ஆலோசனை!

5 days ago

கொரோனா தொற்றால் அவசர நிலையை நோக்கி நாடு செல்கிறது: ஜப்பான் அரசு செய்தி தொடர்பாளர் அறிவிப்பு.

4 days ago

நிஜாமுதின் பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட 617 பேர் மருத்துவமனையில் அனுமதி... டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா தகவல்.

5 days ago

கடலூரில் கொரோனா வார்ட்டில் அனுமதிக்கப்பட்டு இருந்த பெண் உயிரிழப்பு: சிறுநீரக கோளாறு காரணமாக உயிரிழந்தாக மருத்துவர்கள் தகவல்.

4 days ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தனது ஒரு வருட ஊதியத்தை வழங்கிய கர்நாடக முதல்வர் எடியூரப்பா: மக்களும் தங்களால் முடிந்த தொகையை வழங்க கோரிக்கை.

5 days ago

கொரோனாவல் சிகிச்சை பெறுவோர் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்க செயலி: செல்பி எடுத்து ஆப்பில் பதிவேற்றினால், சிகிச்சை என சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.

5 days ago

விளை பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்ல தடையில்லை - முதல்வர் பழனிசாமி

5 days ago

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 124 ஆக உயர்வு!

5 days ago

தமிழகத்தில் ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

5 days ago

அடுத்த 3 மாதங்களுக்கு EMI கட்டத்தேவையில்லை என தமிழக நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி!

6 days ago

அடுத்த 3 மாதங்களுக்கு EMI கட்ட தேவையில்லை! - தமிழக நிதித்துறை செயலாளர்

6 days ago

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் சிறு, குறு விவசாயிகள் பாதிப்பு!

6 days ago

தமிழகத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு;பாதிப்பு எண்ணிக்கை 74 ஆக உயர்வு!

6 days ago

ராஜஸ்தான் மாநிலத்தில் 17 வயது சிறுமி உட்பட 4 பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு!

5 days ago

கொரோனா பாதிப்பால் மேற்குவங்கத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு!

6 days ago

கொரோனாவுக்கு மகாராஷ்டிராவில் மேலும் 5 பேர் பாதிப்பு!

5 days ago

இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு!

6 days ago

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.500 கோடி நன்கொடை!

6 days ago

கேரளாவில் இன்று ஒரே நாளில் 32 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு

6 days ago

ஸ்பெயினில் கொரோனா பாதிப்பிற்கு கடந்த 24 மணி நேரத்தில் 812 பேர் உயிரிழப்பு!

6 days ago

கொரோனா பணிகளை மேற்கொள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைப்பு!

1 week ago

திமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,071 ஆக உயர்வு!

1 week ago

கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு புதுச்சேரி சட்டப்பேரவையில் மௌன அஞ்சலி!

1 week ago

ஏப்ரல் 14ம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் தற்போதைக்கு இல்லை! - மத்திய அரசு

1 week ago

மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனா பாதிப்பால் மேலும் ஒருவர் மரணம்!

6 days ago

புதுச்சேரியில் இன்று இடைக்கால பட்ஜெட்!

1 week ago

உலகம் முழுவதும் பரவிய கொரோனாவால் 7,02,100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

1 week ago

தமிழகத்தில் வெளி மாநில தொழிலாளர்களின் தேவைகளை கண்காணிக்க குழு!

6 days ago

காரணமின்றி சாலையில் நடமாடுபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்த, மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவு!

1 week ago

கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 202 ஆனது!

1 week ago

தமிழகத்தில் மேலும் 8 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது!

1 week ago

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் 6 பேர் பலி, புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு.

1 week ago

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்வு!

1 week ago

கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் நேற்று உயிரிழந்த 3 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என மக்கள் நல வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

1 week ago

தமிழகத்தில் இன்று முதல் மேலும் தீவிரமாகும் கட்டுப்பாடுகள்: பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே மளிகைக் கடைகள், காய்கறி சந்தைகள் செயல்பட அனுமதி.

1 week ago

இந்தியாவில் கொரோனா தொற்று எண்ணிக்கை 987 ஆக அதிகரிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 20 ஆக உயர்வு.

1 week ago

இந்தியாவில் சமூக தொற்றாக கொரோனா வைரஸ் பரவவில்லை: அச்சம் வேண்டாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வேண்டுகோள்.

1 week ago

உலக அளவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30,000ஐ கடந்தது; பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6.50 லட்சத்தை கடந்தது.

1 week ago

#BREAKING | மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 28 பேருக்கு கொரோனா பாதிப்பு!

1 week ago

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு டாடா குழுமம் ரூ.1500 கோடி நிதியுதவி!

1 week ago

மகாராஷ்டிராவில் கொரோனா பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு!

1 week ago

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,00,000 கடந்தது!

1 week ago

உலகளவில் கொரோனா தாக்கத்தால் பலியானவர்கள் எண்ணிக்கை 27,000-ஐ தாண்டியது: நோய் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 5,96,000 ஆக உயர்வு.

1 week ago

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,00,000-ஐ தாண்டியது: நேற்று ஒரே நாளில் 18,000க்கும் அதிகமானோர் பாதிப்பு.

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 748 ஆக உயர்வு: நோய் தாக்கத்திற்கு 19 பேர் பலியானதாக மத்திய சுகாதார துறை தகவல்.

1 week ago

கொரோனா நோய் தடுப்புக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ.4000 கோடி வழங்க வேண்டும்: மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்.

1 week ago

தனிமைப்படுத்திக் கொள்வதே கொரோனாவை தடுப்பதற்கான ஒரே தீர்வு: முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்.

1 week ago

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு: அயர்லாந்தில் இருந்து சென்னை வந்த இளைஞர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல்.

1 week ago

கொரோனா தாக்குதலுக்கு இதுவரை இல்லாத வகையில் இத்தாலியில் ஒரே நாளில் 1,000 பேர் மரணம்!

1 week ago

தமிழகத்தில் கடைகள் திறக்க கட்டுப்பாடு விதித்தது தமிழக அரசு!

1 week ago

பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் மேட் ஹான்காக்கிற்கும் கொரோனா பாதிப்பு உறுதியானது!

1 week ago

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,000ஐ கடந்தது!

1 week ago

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது!

1 week ago

தமிழகத்தில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்வு.

1 week ago

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 85,520 ஆக உயர்வு; நேற்று ஒரே நாளில் 17,000க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிப்பு.

1 week ago

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் 5,31,806 பேர் பாதிப்பு: உயிரிழந்தோரின் எண்ணிக்கை 24,000-ஐ தாண்டியது.

1 week ago

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,00,000 கடந்தது!

1 week ago

சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த இருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது!

1 week ago

தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு; பாதிப்பு எண்ணிக்கை 27 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் 144 தடையை ஏப்ரல் 14ம் தேதி வரை நீட்டித்து முதல்வர் பழனிசாமி உத்தரவு!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை