Skip to main content

பழங்குடியினருக்கு “அச்சே தின்” இல்லை... “ஐயகோ தின்”

May 03, 2019
Image

சந்திர பாரதி

கட்டுரையாளர்

Image

இந்திய வன சட்டம் 2019 வரைவு நிலையில் உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் வழிகாட்டுதலில் தயாரிக்கப்படும் இந்த வரைவு சட்டம் காடு வாழ் பழங்குடியினருக்கு எதிராக உள்ளதாக கருத்து உலவி வருகிறது.

இந்தியாவை பிரிட்டிஷார் ஆண்ட காலத்தில் காடுகளை வீணாகக் கிடக்கும் நிலப்பகுதிகளாக கொண்டு காட்டை அழித்து விளை நிலங்களை உருவாக்க வசதியாக சட்டங்கள் இயற்றப்பட்டன. காடுகள் அழிக்கப்பட்டதால் காட்டை தங்கள் இருப்பிடமாகக் கொண்ட பழங்குடியினர் பெரும் கஷ்டத்திற்கு உள்ளானர்கள். மூன்று வகையாக காடுகளை வரிசைப்படுத்திய இந்திய வன சட்டம் 1927, வனத்துறை அதிகாரிகளுக்கு இந்தியக் காடுகளின் ஏக போக திகாரத்தை அளித்தது. காடுகளைச் சார்ந்து வாழ்ந்த மக்கள் தங்கள் இருப்பிடமான காடுகளில் நுழைவதற்கே தடை விதிக்கப்பட்டனர்.

கடந்த மூன்று தசம ஆண்டுகளில் காடுகளை அழிப்பதின் தாக்கத்தை உணர்ந்து எதிர்ப்பான சூழலியளாளர்களின் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இருப்பினும் வனங்கள் தொடர்பான சட்டங்கள் இயற்றுவதிலோ பயன்பாட்டிலோ வனத்திற்கு உரிமையாளர்களான பழங்குடியினரின் குரல்கள் கேட்கப்பட்டதேயில்லை என்பது தான் உண்மை. மாற்று வாழ்வாதாரமும் வேலை வாய்ப்புகளுமின்றி சமூகத்தின் கடைத் தட்டில் தவித்து வருகின்றனர் பழங்குடியின மக்கள். சமூக நீதி என்பது அவர்களைப் பொறுத்த வரையில் கனவே.

தேசிய ஜனநாயகக் கூட்டணி 2019-ல் இந்திய வன சட்டம் ஒன்றை வரைவிற்கு பணித்துள்ளது. சட்ட வரைவு மாநிலங்களின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்திய வன சட்டம் 2019(வரைவு) மக்கள் நலனை முற்றிலுமாக புறக்கணித்து வணிகத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளது என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்துள்ளது. வனச் சட்ட வரைவில் வனங்கள் பாதுகாப்பு, சுற்றுச் சூழல் பாதுகாப்பு, வன மேலாண்மை என கவர்ச்சிகரமான நோக்கங்கள் கூறப்பட்டாலும், சட்டத்தின் ஷரத்துகள் பழங்குடியினருக்கு முற்றிலுமாக எதிராகவே உள்ளது.

இந்த வரைவுச் சட்டம் வனம் பற்றிய ஒரு விளக்கம் அளித்துள்ளது. அரசு எந்த நிலத்தையெல்லாம் வனம் என்று தனது வருவாய் ஆவணங்களில் பதிவில் கொண்டிருக்கின்றனவோ அவையும், அரசு தனது முடிவில் மரங்கள் உள்ள எந்த நிலத்தையும் வனமாக அரசு ஒரு ஆணையின் மூலம் அறிவிக்கலாம். இவ்வாரியான நிலத்தின் பயன்பாட்டாளர்கள் உரிமையாளர்களுக்கு அரசு நிர்ணயிக்கும் இழப்பீடு வனத்திற்கு வெளியே நிலமாகவோ, நிதியாகவோ அளிக்க வரைவுச் சட்டம் வழை வகை செய்கிறது. இது மட்டுமின்றி, தேக்கு, மூங்கில், மருத்துவ குணங்கள் கொண்ட மூலிகைக் காடுகள் போன்றவற்றை வியாபார ரீதியாக உருவாக்கி உற்பத்தி பெருக்க எந்த நிலத்தையும் வனத் துறை வனமாக அறிவிக்கலாம். இவ்வாறு உருவாக்கப்படும் வன நிலப்பரப்பு தனியாருக்கு நீண்ட கால குத்தகைக்கு விடவும் சட்ட வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வனமாகக் கருதப்பட்ட நிலப்பரப்பை உரியவர்களிடமிருந்து அரசே பறித்து தனியாருக்கு தாரை வார்க்க முடியும்.

இந்த சட்ட வரைவு வனத் துறை அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வழங்குகிறது. இந்த சட்டத்தின் மூலம் கையகப்படுத்தப்படும் நிலப்பரப்பின் உரிமையாளர்கள் அனுபவ பாத்யதை உடையவர்களை நிலத்தில் இருந்து வெளியேற்றும் உரிமை வனத் துறைக்கு உண்டு. இழப்பீட்டை வனத் துறையே முடிவு செய்யும். நிலத்தை ஒப்படைக்க மறுத்து எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வனத்துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. நடவடிக்கைகளின் ஒரு அங்கமாக ஆயுதப் பிரயோகம் செய்யவும் வனத் துறைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக எவரிடமும் வனத்துறை முன் அனுமதி பெறவோ விளக்கமளிக்கவோ தேவையில்லை என்பது தான் கொடுமை. வனத்துறையின் கொடுமைகளை அரங்கேற்ற மாநில அரசுகள் வனத்துறையால் தடுத்து கைது செய்யப்பட்டவர்களை தடுப்புக் காவலில் வைக்க கட்டடங்களும், ஆயுத உதவிகளும் அளிக்க வேண்டும் என்கிறது சட்ட வரைவு. நிலம் கையகப்படுத்துவதை எதிர்ப்பவர்கள் மீது துப்பாக்கிச்சூட்டைக் கூட வனத் துறை நடத்தலாம்.

இந்த வரைவுச் சட்டப்படி வனப்பகுதியை ஒட்டி வாழும் பழங்குடியினர் காட்டுக்குள் சமையல் நெருப்பிற்காக சுள்ளி பொறுக்கினாலோ, காய்ந்த சருகுகளைச் சேகரித்தாலோ குற்றம். பழங்குடியினர் காட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்கப்படலாம், மீறி நுழைந்தால் வனத்துறையினர் அவர்களை தாக்கி வெளியேற்றலாம், ஏன் துப்பாக்கிச்சூடு கூட நடத்தலாம். இதற்கெல்லாம் மாநில அரசுகள் வனத்துறைக்கு உதவிகரமாக இருக்க வேண்டும் என்கிறது வரைவு சட்டம்.

கிட்டத்தட்ட 30 கோடி மக்கள் வனம், வனம் சார்ந்த பகுதிகளில் தங்கள் வாழ்வாதாரத்தைக் கொண்டுள்ளார்கள், இந்த வரைவுச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சட்டமானால் இவர்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். வனத்துறையின் அடக்கு முறை ஆட்சி பழங்குடியினர் மீது கட்டவிழ்த்து விடப்படும்.

இதனைத் தான் ராகுல் காந்தி தனது தேர்தல் பரப்புரையில் மோடியின் அரசு பழங்குடியினருக்கு எதிரான சட்டம் கொண்டு வர இருக்கிறது. பழங்குடியினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படலாம் என்றெல்லாம் பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். பழங்குடியினரை சுட்டுக் கொல்லும் அளவிற்கு இந்த அரசு செல்லாது என்று நம்புவோம். ராகுல் மிகைப்படுத்தியே பேசியுள்ளார் என்றும் எடுத்துக் கொள்வோம்.

வரைவுச் சட்டமேயானாலும் ஆட்சியாளர்களின் மன ஓட்டத்தை வெளிப்படுத்தும் ஆவணமாகவே கருதபப்ட வேண்டும், இந்த வரைவுச் சட்டம் கூறும் செய்தி பாரதிய ஜனதாவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஏழைகளுக்கும் பழங்குடியினருக்கும் எதிரானது என்பது தான். 

”அச்சே தின்” அதானிகளுக்கும் அம்பானிகளுக்கும் தான்... பொது மக்களுக்கு இல்லை என்பதை மீண்டும் ஒருமுறை இந்த சட்ட வரைவு நிரூபணமாக்குகிறது....  

 

 

 

 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

ப.சிதம்பரத்தை 4 காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு அனுமதி அளித்தது டெல்லியில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

10 hours ago

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மீதான வழக்கின் உத்தரவை அரைமணி நேரம் ஒத்திவைத்தது டெல்லி சிபிஐ நீதிமன்றம்..!

11 hours ago

நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது: முத்தரசன், சிபிஐ

12 hours ago

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்!

13 hours ago

“அமைச்சர் ஜெயக்குமார் ஒரு ஜோக்கர்!” - மு.க.ஸ்டாலின்

15 hours ago

நளினிக்கு வழங்கப்பட்ட பரோல் மேலும் 3 வாரங்களுக்கு நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு....!

16 hours ago

ப.சிதம்பரம் கைதைக் கண்டித்து சென்னையில் காங்கிரசார் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு...!

17 hours ago

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக டெல்லியில் திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்...!

21 hours ago

அக்டோபர் 2ம் தேதி முதல் ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து ரயில்வே அதிரடி !

1 day ago

ப.சிதம்பரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ கேவியட் மனு தாக்கல்!

1 day ago

விசாரணைக்கு ஆஜராகாததால் ப.சிதம்பரத்தை தேடப்படும் நபராக அமலாக்கத்துறை அறிவித்ததாக தகவல்...!

1 day ago

ப.சிதம்பரத்திற்கு எந்த நிவாரணமும் அளிக்க கூடாது: அரசு வழக்கறிஞர்

1 day ago

காஷ்மீர் பிரச்னைக்கு தீர்வு காண சமரசம் செய்ய தயார் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் அறிவிப்பு!

1 day ago

தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம்!

1 day ago

ப. சிதம்பரத்தை வேட்டையாட துடிப்பது வெட்கக்கேடானது என பிரியங்கா காந்தி கண்டனம்!

1 day ago

விரும்பத் தகாத வார்த்தைகளை பேசுவதற்கு துண்டு சீட்டு தேவையா? : தமிழிசை

1 day ago

குலாம் நபி ஆசாத் ஜம்மு காஷ்மீருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!

1 day ago

ப.சிதம்பரத்தை கைது செய்ய தீவிரம் காட்டும் சிபிஐ அதிகாரிகள்!

1 day ago

2019ம் ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விருதுகள் அறிவிப்பு; கிரிக்கெட் வீரர் ரவீந்திர ஜடேஜா அர்ஜூனா விருதுக்கு தேர்வு!

2 days ago

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், ப. சிதம்பரத்திற்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!

2 days ago

7 பேர் விடுதலை குறித்த தீர்மானம் குறித்து ஆளுநரிடம் விளக்கம் கேட்க முடியாது என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்...!

2 days ago

கர்நாடகாவில் முதலமைச்சர் எடியூரப்பா தலைமையிலான அரசில் 17 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு!

2 days ago

ஜஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு முன்ஜாமின் கிடைக்குமா?; இன்று தீர்ப்பு...!

2 days ago

ராஜஸ்தான்- குஜராத் எல்லை வழியாக இந்தியாவிற்குள் 4 தீவிரவாதிகள் நுழைந்ததாக தகவல்!

2 days ago

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன், பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

2 days ago

ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பாக வரும் 22ஆம் தேதி டெல்லியில் திமுக ஆர்ப்பாட்டம் - மு.க.ஸ்டாலின்

3 days ago

"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

3 days ago

சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....!

3 days ago

துறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....!

3 days ago

பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...

3 days ago

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....!

3 days ago

ஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

4 days ago

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

4 days ago

சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...!

4 days ago

பூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

4 days ago

நாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...!

4 days ago

திருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...!

5 days ago

அத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...!

5 days ago

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம்

5 days ago

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது!

5 days ago

"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்!" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

5 days ago

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை

5 days ago

தமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்

5 days ago

கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...!

5 days ago

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்!

6 days ago

"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

6 days ago

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!

6 days ago

டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...!

6 days ago

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...!

6 days ago

வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....!

6 days ago

முன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....

6 days ago

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...

6 days ago

காஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...!

6 days ago

அண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்

1 week ago

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி

1 week ago

21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...!

1 week ago

செங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...!

1 week ago

"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது!

1 week ago

நள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்!

1 week ago

நீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்

1 week ago

வேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்

1 week ago

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்!

1 week ago

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

1 week ago

100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

1 week ago

முன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்

1 week ago

மேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

1 week ago

“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி

1 week ago

“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்!” - முதல்வர் பழனிசாமி

1 week ago

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

1 week ago

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு!

1 week ago

தொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி!

1 week ago

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு!

1 week ago

இல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...!

1 week ago

கேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு!

1 week ago

திராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்

1 week ago

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

1 week ago

2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்!

1 week ago

கர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

1 week ago

கேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி!

1 week ago

அத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்!

1 week ago

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு!

1 week ago

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...!

1 week ago

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ

1 week ago

"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி!" - பியர் கிரில்ஸ்

1 week ago

கேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி!

1 week ago

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.

1 week ago

தமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி!

1 week ago

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

மிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்!

1 week ago

வேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை!

1 week ago

ஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை!

1 week ago

வேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

1 week ago

உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...!

1 week ago

திமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்

1 week ago

கனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...!

1 week ago

இந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி

1 week ago

அம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி

1 week ago

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ராசாமணி

1 week ago

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு...!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை