Skip to main content

பாஜகவின் வெற்றிகரமான தோல்வி!

December 12, 2018
Image

சந்திர பாரதி

கட்டுரையாளர்

Image

வெற்றிகரமான தோல்வியை ஐந்து மாநில தேர்தல்களில் பாஜக சந்தித்துள்ளது.

ராஜஸ்தானில் காங்கிரஸ் வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் கூறின. சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் பாஜகவிற்கே அதிக வாய்ப்புகள் என்ற கருத்து கணிப்புகளை தேர்தல் முடிவுகள் பொய்பித்திருக்கின்றன. மிசோரத்தில் காங்கிரஸ் தோற்று இருப்பது வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் தனது செல்வாக்கை முழுவதுமாக இழந்திருப்பதை உறுதிப்படுத்துகிறது.

பாஜகவின் விவசாயிகள் விரோத போக்கும், வேலை வாய்ப்பை ஏற்படுத்த மாநிலத்தில் ஆட்சியில் இருந்த பாஜக அரசுகளும் மத்திய பாஜக அரசும் தவறியதற்கான கடுமையான எதிர் வினையை வாக்காளர்கள் ஆற்றியிருக்கிறார்கள். பட்டியலின மக்களுக்கு எதிரான சட்டத் திருத்தங்கள் கொண்டு வந்தது, அரவணைப்பற்ற போக்கு, பட்டியலின மக்கள் பெருவாரியாக காங்கிரஸை தேர்தலுக்குச் சென்ற ஐந்து மாநிலங்களிலும் ஆதரிக்க காரணியாக அமைந்து விட்டது. குறிப்பாக மத்திய பிரதேசம் ராஜஸ்தானில் வன்கொடுமைச் சட்ட திருத்தம் செய்த பாஜகவின் வேட்பாளர்களை வாக்கு சேகரிக்கக் கூட பல இடங்களில் பட்டியிலன மக்கள் அனுமதிக்கவில்லை என்ற தகவல்கள் வந்தன.

பாரம்பரியமாக சட்டீஸ்கரில் காங்கிரஸை ஆதரித்த பட்டியலின மக்கள் வாக்கு வங்கியில் போட்டியைச் சந்தித்தது காங்கிரஸ். பட்டியிலினத் தலைவரும், சட்டீஸ்கர் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜித் ஜோகி பகுஜன் சமாஜ்வாடி கட்சியுடன் கூட்டணி வைத்துப் போட்டியிட்டார். பாஜகவை ஆதரித்து வந்த பிற்படுத்தப்பட்ட மக்களின் வாக்குகளைக் குறிவைத்தது காங்கிரஸ். பெரும்பாலனவர்கள் விவசாயத்தைத் தொழிலாகக் கொண்டிருந்ததால் விவசாயக் கடன் தள்ளுபடி, சலுகைகள் மற்றும் விளை பொருட்களுக்கு நியாயமான எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்யப்படும் என கவர்ச்சிகரமாக வாக்குறுதி அளித்தது. இதே போன்ற வாக்குறுதிகளை பாஜகவும் அளித்தாலும் கடந்த ஆட்சியின் செயல்பாடுகள் மீதும் மத்திய பாஜக ஆட்சியில் விவசாயிகள் புறக்கணிப்பு போக்கும் சட்டீஸ்கர் விவசாயிகள் மத்தியில் அவ நம்பிக்கையைத் தான் ஏற்படுத்தியது என்றால் மிகையாகாது.

மேலும், மோடி ,அமித் ஷா தங்கள் பிரச்சாரங்களில் மாவோயிஸ்டுகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சட்டீஸ்கர் மாநிலத்தில் “நகர்புற நக்ஸல்கள்” என அரசின் மீது விமர்சனம் வைப்பவர்களை குற்றம் சாட்டிப் பேசியதை சட்டீஸ்கர் வாக்காளர்கள் ரசிக்கவில்லை. சட்டீஸ்கரில் காங்கிரஸூக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தால் மாநில நிர்வாகம் மாவோயிஸ்டுகளின் சொல்படிதான் நடக்கும் என விமர்சனம் செய்து பிரச்சாரம் செய்தது எதிர் விளைவையே ஏற்படுத்தியது.

பதினைந்து ஆண்டுகளாக மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. இயற்கையாகவே ஆள்பவர்களுக்கு எதிரான மனநிலை வாக்காளர்கள் மத்தியில் இருந்தது. கடந்த ஆட்சியில், வியாபம் ஊழல், உட் கட்டமைப்பு வசதிகளில் குறைபாடு, விவசாயிகளின் கோரிக்கைகள் உதாசீனம் செய்யப்பட்டது என சிவ்ராஜ் சிங் செளகானின் அரசு மீது இருந்தது. இருப்பினும், கடந்த காலங்களில் காங்கிரஸ் உட்கட்சிப் பூசலில் சிதறுண்டு இருந்ததைப் போல இந்த முறையும் உள்குத்துகளால் எளிதாக காங்கிரஸ் வீழும் என்ற எண்ணத்தை முறியடைத்தனர் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும் கமல் நாத்தும். சர்ச்சைகுரிய தலைவரான திக் விஜய் சிங் பின்னணியில் இயங்கினார். கடுமையான போட்டியை பாஜகவிற்கு காங்கிரஸ் மத்திய பிரதேசத்தில் அளித்துள்ளது. அறுதிப் பெரும்பான்மைக்கு நெருக்கத்தில் காங்கிரஸ் பிற கட்சிகளுடன் ஆட்சியமைக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் காங்கிரஸ் எளிதில் வென்றிருக்க வேண்டிய மாநிலம் ராஜஸ்தான். இருப்பினும் நெருக்கடியில் தான் வென்றிருக்கிறது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும். வசுந்தரா ராஜீ ஆட்சியின் மீதும் குறிப்பாக , பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்டிருந்த வாக்காளர்கள் பாஜகவை நிராகரித்துள்ளனர். பட்டியலின மக்களின் பெரும் ஆதரவும், விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதியின் கவர்ச்சியும் அதிக வாக்காளர்களை காங்கிரஸை நோக்கி நகர்த்தியுள்ளது. பெரு வெற்றி பெற்றிருக்க வேண்டிய மாநிலத்தில் சொற்பமாக வெற்றி பெற்றதற்கான பின்னணியில் உட்கட்சிப் பிரச்சனைகள் உள்ளன. மத்திய பிரதேசத்தைப் போலவே இளைஞரான சச்சின் பைலட் மூத்த அரசியல்வாதியான அசோக் கேலட்டுடன் இணைந்து பணியாற்றினார். இருப்பினும் யார் முதல்வர் என்ற கேள்வி சுழன்று கொண்டே இருந்தது வெற்றியின் அளவு குறைந்ததற்கு மிக முக்கிய காரணம். காங்கிரஸ் ராஜஸ்தான் அனுபவத்தில் இருந்து கற்க வேண்டிய பாடம் அதிகம்.

தெலுங்கானாவில் காங்கிரஸ் பெருமளவு வெற்றி பெற இயலவில்லை. முக்கிய காரணமாக, ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரிப்பதில் காங்கிரஸ் கால தாமதம் செய்தது என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஆழப் பதிந்திருந்தது தான். கூடவே, மாநிலம் பிரிவதை எதிர்த்த தெலுங்கு தேசம் கட்சியுடன் காங்கிரஸ் செய்து கொண்ட தேர்தல் உடன்பாடு பெருமளவு மக்களால் கருணையுடன் பார்க்கப்படவில்லை. தென் மாநிலங்களில் கூட்டணியை தீர்மானிப்பதில் காங்கிரஸ் கள யதார்த்தங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்ற பாடம் கற்க வேண்டிய ஒன்று.

மிசோரம் மாநிலத்தில் காங்கிரஸ் சந்தித்திருக்கும் தோல்வி, வட கிழக்கு மாநிலங்களில் காங்கிரஸ் மீண்டும் ஜனனம் எடுக்க வேண்டியதையே காட்டுகிறது. நமது தேசத்தின் எல்லைகளான வட கிழக்கு மாநிலங்களின் நலனும் பாதுகாப்பும் ஜனநாயகம் காப்பாற்றபட வேண்டியதும் அவசியம். நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்கள் எண்ணிக்கைக் குறைவேயானாலும், அத்தியாவசியமானது என்பதை காங்கிரஸ் தலைமை உணர வேண்டும்.

ஐந்து மாநில தேர்தல்களில் எத்தனை மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை அமைக்கிறது, எத்தனை சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றது என்பதை விட முக்கியமான கற்பிதம் உள்ளது. தொடர்ந்து 15 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் கட்சிக் கட்டமைப்புகள் சிதைந்து போயிருந்தாலும் உட்கட்சி மனமாச்சர்யங்களை ஒதுக்கி வைத்து ஒற்றுமையாக கட்சிப் பணிகளில் ஈடுபட்டால் வெற்றி சாத்தியமாகும் என்ற பாடம் மற்ற மாநில காங்கிரஸ் கட்சியினரும் கற்க வேண்டியது. அதே நேரத்தில் உதட்டளவில் ஒன்றுபட்டு செயலளவில் முழு அர்ப்பணிப்போடு பணியாற்ற தவறினால் ராஜஸ்தான் முடிவுகளைப் போல கவலையான தருணங்களைச் சந்திக்க வேண்டிவரும் என்பதையும் உணர வேண்டும்.

ராகுல் காந்தி ஐந்து மாநில வெற்றியை சம நிலையில் கையாள வேண்டும். கூட்டணிகள் அமைப்பதில் சாதுரியத்துடன் இருக்க வேண்டும். இளைஞர்களை கட்சிப் பணிகளில் முன்னிறுத்த வேண்டும். மூத்த காங்கிரஸார், இசைந்து இணைந்து பணியாற்ற வேண்டும்.

இவை சாத்தியப்பட்டால், பாஜக ”வெற்றிகரமான தோல்விகளை” தொடர்ந்து ருசிக்கும்...

 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

நிவர் புயல் - ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது!

4 days ago

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் தவசி காலமானார்!

4 days ago

காங்கிரஸ் மூத்த தலைவருமான தருண் கோகோய் உடல்நலக்குறைவால் காலமானார்!

4 days ago

நிவர் புயல் - வரும் 24, 25ம் தேதிகளில் சென்னை, திருச்சி, மற்றும் தஞ்சாவூர் இடையேயான ரயில் சேவை ரத்து!

5 days ago

சென்னையில் 24,25 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்!

5 days ago

நிவர் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்தில் காற்று வீசும்!

5 days ago

சென்னைக்கு தென்கிழக்கே 110 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ள நிவர் புயல்!

5 days ago

அடுத்த 24 மணிநேரத்தில் உருவாகிறது நிவர் புயல்: வானிலை மையம்!

5 days ago

நிவர் புயல்: அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் ஆலோசனை!

5 days ago

பொதுப் பிரிவினருக்கான மருத்துவக் கலந்தாய்வு தொடங்கியது!

5 days ago

வங்கக் கடலில் உருவாகிவரும் நிவர் புயல்: தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு!

5 days ago

தேர்தல் நேரத்தில் கூட்டணிகள் உடையலாம், புதிய கூட்டணிகள் உருவாகலாம்! - கமல்

5 days ago

தோல்வியை தவிர்க்க காங்கிரசில் சீர்திருத்தம் தேவை! - குலாம் நபி ஆசாத்

5 days ago

2ம் உலகப் போருக்கு பின்னர் உலகம் சந்தித்த மிகப் பெரிய சவால் கொரோனா! - பிரதமர் மோடி

5 days ago

நவ.25ம் தேதி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் முதல்வர் பழனிசாமி ஆய்வு!

6 days ago

பேரறிவாளன் விடுதலை விவகாரத்தில் ஆளுநரே முடிவெடுக்க முடியும்! - சிபிஐ

6 days ago

மருத்துவக் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் கட்டணத்தை அரசே செலுத்தும்!

6 days ago

இப்போதிருந்தே உழைத்தால்தான், அடுத்த 5 ஆண்டுகளில் ஆட்சியைப் பிடிக்க முடியும்! - அமித்ஷா

6 days ago

2-ஜி ஊழலில் தொடர்புடையவர்களுக்கு, ஊழலை பற்றி பேச என்ன தகுதி உள்ளது! - அமித்ஷா

6 days ago

ஒரே மாதத்தில் 3-வது முறையாக மதுரையில் தீ விபத்து!

6 days ago

நவ.25 முதல் தமிழகம் - ஆந்திரா இடையே பேருந்து சேவை!

6 days ago

7.5% உள்ஒதுக்கீடு மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணங்கள் அனைத்தையும் தமிழக அரசே ஏற்கும்: முதல்வர் பழனிசாமி

1 week ago

தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!

1 week ago

முருகன் அறுபடை வீடுகளில் கந்தசஷ்டி திருவிழா!

1 week ago

மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வருகை!

1 week ago

CBSE: 10,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும்

1 week ago

இடைத்தேர்தலில் பெற்ற வெற்றியை சட்டப்பேரவை தேர்தலிலும் உறுதி செய்ய வேண்டும்! - முதல்வர்

1 week ago

ஆன்லைன் ரம்மிக்கு தடை: அவசர சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்!

1 week ago

தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய உதயநிதி ஸ்டாலின் கைது!

1 week ago

ஜனவரியில் பரப்புரையை தொடங்கும் ஸ்டாலின்!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 90,04,366 ஆக உயர்வு!

1 week ago

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் 10 பேருக்கும் குறைவாக பதிவான கொரோனா தொற்று!

1 week ago

தருமபுரி அருகே கிணற்றில் விழுந்த காட்டு யானை பத்திரமாக மீட்பு!

1 week ago

திருச்செந்தூர் கோயிலில் கடற்கரையில் இன்று சூரசம்ஹாரம்!

1 week ago

உச்சநீதிமன்ற தீர்ப்பை மதித்து பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும்! - திரை பிரபலங்கள்

1 week ago

திமுக எம்.எல்.ஏ பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது!

1 week ago

சென்னையில் நேற்று மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற 4 மாணவர்களுக்கு கொரோனா!

1 week ago

மூல வைகை ஆற்றில் தொடர்ந்து 2வது நாளாக வெள்ளப்பெருக்கு!

1 week ago

லட்சுமி விலாஸ் வங்கிக்கு விதிக்கப்பட்ட தடையால் பொது மக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து உள்ளனர் - ஜோதிமணி எம்.பி.

1 week ago

மருத்துவ படிப்பில் சேருவதற்கான கலந்தாய்வு 2வது நாளாக இன்றும் நடைபெறுகிறது!

1 week ago

பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த ஒதுக்கப்பட்ட நிதியை உயர்த்தி அரசாணை!

1 week ago

பள்ளிகளை திறப்பது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை! - பள்ளிகல்வித்துறை

1 week ago

தமிழகத்தில் நேற்று புதிதாக 1,714 பேருக்கு கொரோனா உறுதி!

1 week ago

திருச்செந்தூர் கடற்கரை நுழைவு வாயிலில் சூரசம்ஹாரம் நடத்த அனுமதி!

1 week ago

அடுத்தாண்டு ஜனவரி 27-ல் சசிகலா விடுதலை என தகவல்!

1 week ago

முதல் முறையாக வெப் சீரிஸில் சானியா மிர்சா!

1 week ago

நீட் தேர்வை எதிர்த்து போராடுவது தமிழகம் மட்டுமே! - முதல்வர் பழனிசாமி

1 week ago

கொரோனா தடுப்பூசி சோதனையில் 95% வெற்றி! - Pfizer நிறுவனம்

1 week ago

கல்லூரி மாணவர்களுக்கான அரியர் தேர்வுகளை ரத்து செய்ய முடியாது! - யு.ஜி.சி தகவல்

1 week ago

தென்கிழக்கு அரபிக்கடலில் நாளை உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

1 week ago

ஜோ பைடனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததாக பிரதமர் ட்வீட்

1 week ago

செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 505 கன அடியாக குறைந்தது!

1 week ago

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் தவசிக்கு விஜய்சேதுபதி ரூ.1 லட்சம் நிதியுதவி!

1 week ago

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 89 லட்சத்தை நெருங்குகிறது!

1 week ago

பாஜகவின் வேல் யாத்திரை டிச.6க்கு பதில் 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுபெறும் - பாஜக அறிவிப்பு

1 week ago

பீகார் மாநிலத்தின் முதலமைச்சராக 4 வது முறையாக நிதிஷ்குமார் பதவியேற்பு!

1 week ago

சென்னையில் தொடர் மழை காரணமாக அடையாறு ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

1 week ago

ஊரக சாலை உட்கட்டமைப்பு நிதியத்தின் கீழ் 15,376 கி.மீ. சாலைகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி நிதி ஒதுக்கீடு!

1 week ago

நவம்பர் 23-ல் திமுக உயர்நிலை செயல் குழு கூட்டம்!

1 week ago

பழனி, அப்பர் தெருவில் இடத்தகராறு காரணமாக 2 பேர் மீது துப்பாக்கிச் சூடு!

1 week ago

நவம்பர் 18ல் மருத்துவக் கலந்தாய்வு! - அமைச்சர் விஜயபாஸ்கர்!

1 week ago

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு!

1 week ago

மதுரையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்ததாக 154 பேர் மீது வழக்குப்பதிவு.

1 week ago

தேசிய பத்திரிகை தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

1 week ago

மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங்கிற்கு கொரோனா தொற்று உறுதி!

1 week ago

பிரபல வங்காள நடிகர் செளமித்ர சாட்டர்ஜி கொல்கத்தாவில் காலமானார்!

1 week ago

நாளை மறுநாள் முதல் மஹாராஷ்டிரா மாநிலத்தில் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி.

1 week ago

மாலை 6 மணிக்கு வெளியான மாஸ்டர் டீசர்: வெளியான ஒரு மணி நேரத்தில் லட்சக்கணக்கோர் டீசரை பார்த்து ரசித்துள்ளனர்.

1 week ago

எல்லை காட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதல் தொடர்பாக, இந்தியாவிற்கான பாகிஸ்தான் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்.

1 week ago

தென்காசி மாவட்டத்தில் குற்றாலம், சுரண்டை, ஆலங்குளம் உள்ளிட்ட பல இடங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்து வருகிறது!

2 weeks ago

கோயில்களில் குடமுழுக்கு விழாக்களை நடத்த தமிழக அரசு அனுமதி!

2 weeks ago

திருச்செந்தூர் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை: மாவட்ட நிர்வாகம்

2 weeks ago

தமிழகத்தில் 14 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

2 weeks ago

தேர்தலுக்கு தயாராகும் அதிமுக; தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, பிரசாரக் குழுக்கள் உள்ளிட்டவை அமைப்பு.

2 weeks ago

நடிகர் அர்ஜூன் ராம்பாலுக்கு போதைப்பொருள் கட்டுப்பாட்டு அமைப்பு நோட்டீஸ்!

2 weeks ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு - தமிழக அரசு அறிவிப்பு

2 weeks ago

விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார் விஜய்!

2 weeks ago

பட்டாசு, தீப்பெட்டி தொழிலாளர்களுக்கு தனி அமைப்புசாரா நலவாரியம்: முதல்வர் பழனிசாமி

2 weeks ago

பஹ்ரைன் பிரதமர் மறைவுக்கு வைகோ இரங்கல்!

2 weeks ago

நாகாலாந்தில் ஜனவரி 31ம் தேதி வரை பட்டாசு வெடிக்க தடை!

2 weeks ago

7 தமிழர் விடுதலை தொடர்பாக ஆளுநருக்கு தமிழக அரசு உத்தரவிட முடியாது - முதல்வர் பழனிசாமி

2 weeks ago

சவுதி அரேபியாவில் உள்ள பிரான்ஸ் தூதரகம் அருகே குண்டு வெடிப்பு!

2 weeks ago

ரிபப்ளிக் டிவியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!

2 weeks ago

பீகார் சட்டமன்ற தேர்தலில் 75 இடங்களில் வென்று ராஷ்டிரிய ஜனதா தளம் முதலிடம்.

2 weeks ago

பீகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ்-ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி 110 இடங்களை கைப்பற்றியுள்ளன.

2 weeks ago

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கிறது பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி!

2 weeks ago

ஐபிஎல் இறுதிப்போட்டி: டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்!

2 weeks ago

UFO நிறுவனமும் VPF கட்டணத்தை நவம்பர் மாதம் தள்ளுபடி செய்வதாக அறிவிப்பு!

2 weeks ago

சத்ருஹன் சின்ஹா மகன் காங்கிரஸ் வேட்பாளர் லவ் சின்கா பினாக்கிபூர் தொகுதியில் முன்னிலை!

2 weeks ago

ஆர்.ஜே.டி கட்சியைச் சேர்ந்த லாலு பிரசாத்தின் மகன்கள் தேஜஸ்வி யாதவ், தேஜ் பிரதாப் யாதவ் ஆகியோர் முன்னிலை.

2 weeks ago

பீகார் சட்டப்பேரபை தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் தொடக்கம்.

2 weeks ago

தமிழகத்தில் புதிதாக 2,257 பேருக்கு கொரோனா உறுதி!

2 weeks ago

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு புதிய வேளாண் சட்டமே காரணம் - மம்தா பானர்ஜி

2 weeks ago

9, 10, 11, 12-ம் வகுப்பினருக்கு வரும் 16-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

2 weeks ago

பீகாரில் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன!

2 weeks ago

தமிழக அரசு - நீட் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் இன்று தொடக்கம்!

2 weeks ago

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது எப்போது? - அனைத்து பள்ளிகளில் இன்று கருத்துக் கேட்பு கூட்டம்!

2 weeks ago

தடையை உடைத்து மீண்டும் வேல் யாத்திரை நடத்துவோம்: எல்.முருகன்

2 weeks ago

தமிழகத்தில் புதிதாக 2,334 பேருக்கு கொரோனா உறுதி!

2 weeks ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    75.54/Ltr
  • டீசல்
    68.22/Ltr
Image பிரபலமானவை