Skip to main content

நவீன இசையின் நாயகன்!

January 06, 2019
Image

மனோ

கட்டுரையாளர்

Image

இளையராஜா தமிழ் திரையிசைப் பயணத்தில் உச்சம் தொட்ட காலகட்டத்தில் அவரது இசைக்குழுவில் பலர் இருந்தனர். அந்த குழுவில் அப்போது 11 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவனும் இருந்தான். அவனே பின்னாளில் இளையராஜாவை பின்னுக்குத் தள்ளி தமிழ் மொழியை தனது இசையின் மூலம் உலக அரங்கிற்கு கொண்டு செல்வான் என யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவர் தான் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான்.

தனது ஒன்பதாவது வயதில், தான் மிகவும் நேசித்த தந்தையை இழந்தார். கேரள திரையுலகில் பணிபுரிந்தவர் இவரது தந்தை சேகர். தந்தையின் ரத்தம் மகனுக்குள்ளும் ஓடுமல்லவா, இசையின் மீதான ஆர்வமும் திறமையும் ரஹ்மானை திரைத்துறையை நோக்கி படிப்படியாக நகர்த்தியது. தந்தையின் மரணத்திற்குப் பின் குடும்பத்தில் வருமானம் இல்லாத நிலையில் தன் தந்தையின் இசைக்கருவிகளை வாடகைக்குவிட்டு அந்த வருமானத்தில் பியானோ, ஆர்மோனியம் மற்றும் கித்தார் வாசிக்கக் கற்று கொண்டார். தன்ராஜ் மாஸ்டரிடம் முறைப்படி இசை கற்றுக் கொண்டார்.  

பின்னர் இளையராஜாவின் திரையிசைக் குழுவில் கீபோர்டு வாசிப்பவராக இணைந்தார். பிறகு எம். எஸ். விஸ்வநாதன், ரமேஷ் நாயுடு, ஜாகீர் உசேன் மற்றும் குன்னக்குடி வைத்தியநாதன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களிடம் பணியாற்றினார். டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக் கல்லூரியில் கிளாசிக்கல் மியூசிக் பயின்று பட்டம் பெற்றார். 

ஆரம்பத்தில் விளம்பரப் படங்களுக்கு இசையமைக்க ஆரம்பித்தார். பின்னர் விளம்பரத் தயாரிப்பாளர் சாரதா திரிலோக் உடன் இணைந்து விளம்பரப் படங்களை தயாரித்தார். விளம்பரங்களின் மூலம் ரஹ்மான் வெகுவாக அறியப்பட்டார். பூஸ்ட், ஏசியன் பெயின்ட்ஸ், ஏர்டெல் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்தார். இதில் ஏர்டெல் விளம்பரம் இந்தியா முழுக்க பிரபலமானது. இந்தியாவில் செல்போன்கள் அறிமுகமான ஆரம்ப காலகட்டம் அது. ஏர்டெல் விளம்பரத்தின் இசை தான் பெரும்பாலானோரது செல்போன்களில் ரிங்டோனாகவும் காலர்டோனாகவும் ஒலித்தது.  

அதே சமயம் தமிழ்த் திரையுலகை தனது இசையின் மூலம் இளையராஜா ஆட்சி செய்து கொண்டிருந்த காலம். ரஹ்மானின் இசைப்பயணத்தில் அடுத்த கட்டமாக அன்றைய தமிழ் சினிமாவின் ரசிகர்களை கவர்ந்திருந்த இயக்குநராக திகழ்ந்த மணிரத்னத்தின் ரோஜா படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தனது முதல் அடியை தமிழ்த் திரையுலகில் பலமாக எடுத்து வைத்தார் ரஹ்மான். 

ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கத்தில் 1992ல் வெளியானது ரோஜா திரைப்படம். முதல் படத்திலேயே தேசியவிருது வாங்கினார் ஏ.ஆர்.ரஹ்மான். இளையராஜா உட்பட தமிழ் திரையுலகைச் சேர்ந்த அனைத்து இசையமைப்பாளர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கவே செய்திருக்கும்.  

இதையடுத்து ரஹ்மான் மீது பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அனிருத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய போது, எப்படி விமர்சித்தார்களோ அதேபோல் ஏ.ஆர்.ரஹ்மானையும் விமர்சிக்கத்தான் செய்தார்கள். ரஹ்மானின் பாடல்களில் உள்ள இசை கடும் இரைச்சலாக உள்ளது; பொருள்களை உடைப்பது போலவும், கண்ணாடியை அடித்து நொறுக்குவது போலவும் இருக்கிறது என பலரும் விமர்சித்தனர். இந்த சமயத்தில் தான் ரஹ்மானுக்கு நாட்டுப்புறம் சார்ந்து மண்சார்ந்து இசையமைக்க வராது என்ற கருத்து பரவிவந்தது. ரஹ்மான் நகரத்தில் வளர்ந்த பையன், இவரால் கண்டிப்பாக கிராமப்புறம் சார்ந்த இசையை கொடுக்க முடியாது எனவும் கூறினார். இதற்காகவே கிழக்குச் சீமையிலே மற்றும் கருத்தம்மா படங்களில் இசையமைத்து மண்சார்ந்த அற்புதமான இசையை அள்ளிக் கொடுத்து அனைவரது வாயையும் அடைத்தார் ரஹ்மான்.

இளையராஜாவின் இசைக்காக கடந்த காலங்களில் காத்திருந்த இயக்குநர்கள் ரஹ்மானை நோக்கிப் படையெடுக்கத் துவங்கினார்கள். இசையில் புதுமையாக எதையாவது செய்து ஆய்வுக்குட்படுத்தி தைரியமாக அவற்றை, தான் இசையமைக்கும் படங்களிலேயே பரீட்சயம் செய்து பார்ப்பவர் ரஹ்மான். இப்படியிருக்க ரஹ்மான் இசையமைத்த முத்து திரைப்படம் ஜப்பானில் பெரும் வெற்றிபெற்றதன் வாயிலாக இந்தியாவைத் தாண்டி பரவலாக அறியப்பட்டார்.

இந்தி, தமிழ், ஆங்கிலம் என பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். 2 ஆஸ்கார் விருதுகள், 2 கோல்டன் குளோப் விருதுகள், 1 பாஃப்டா விருது, 2 கிராமி விருதுகள், 6 தேசிய விருதுகள், பத்ம பூஷண் , பத்ம ஸ்ரீ, 15 பிலிம்பேர் விருதுகள், 18 தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் மற்றும் 12IIFA Awards என பல்வேறு விருதுகளையும் வென்று புகழின் உச்சத்திற்கு சென்றார். அதுமட்டுமல்லாமல் 6 முறை ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டுள்ளது. ரசிகர்களால் இசைப்புயல் என்றும் ஆசியாவின் மொசார்ட் என்றும் அழைக்கப்பட்டார்.

2009ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்றதும் உலக அரங்கில், நமது தாய் மொழியான தமிழில் அவர் எப்பொழுதும் உச்சரிக்கும் தாரக மந்திரமான 'எல்லாப் புகழும் இறைவனுக்கே' என்ற வார்த்தைகளை கூறி தமிழ்மொழியை உலக அரங்கில் ஒலிக்கச் செய்தார். இப்படியாக பல வெற்றிகளை தனது வாழ்க்கையில் திறமையின் மூலம் அசாத்தியமாக அடைந்தாலும், ரஹ்மானிடம் தலைக்கணம் என்பது துளியும் இருக்காது. 

இப்படியாக ரஹ்மானின் வாழ்கை வரலாறு பலருக்கும் நம்பிக்கை அளிக்கும் விதமாக இருந்தாலும், ரஹ்மான் கடந்த நவம்பர் 4, 2018ல் வெளியிட்ட தனது சுயசரிதையில் “வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சோதனையையே சந்தித்தேன். தந்தை இறந்த பிறகு எனது 25வது வயது வரை தற்கொலை எண்ணமே மேலோங்கி இருந்தது. என் தந்தை இல்லாத வெறுமையான நாட்கள் தான் என்னை அச்சமற்றவனாக மாற்றியது. இறப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. எதுவாக இருந்தாலும் அது உருவாக்கப்படும்போதே அதன் முடிவும் எழுதப்பட்டிருக்கும்” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

"எடப்பாடி என்ற ஊர் எப்போதும் என் கவனத்தில் உள்ளது!" - முதல்வர் எடப்பாடி பழனிசாமி

37 minutes ago

சீன அரசுக்கு எதிராக ஹாங்காங்கில் 11வது வாரமாக நீடிக்கும் போராட்டம்....!

3 hours ago

துறையூர் அருகே 100 அடி கிணற்றுக்குள் லோடு வேன் விழுந்து 8 பேர் பலி....!

3 hours ago

பால் உற்பத்தியாளர்கள் நலன் கருதியே பால் விலை அதிகரிக்கப்பட்டதாக முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்...

3 hours ago

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்தது....!

3 hours ago

ஆப்கானிஸ்தான் நிகழ்ந்த தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்பு!

19 hours ago

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு!

1 day ago

சென்னை நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது...!

1 day ago

பூடானில் RUPAY, நீர்மின் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...

1 day ago

நாளை முதல் லிட்டருக்கு 6 ரூபாய் உயருகிறது ஆவின் பால்...!

1 day ago

திருக்குளம் செல்லுமுன் அத்திவரதர் தரிசனம் - நியூஸ்7தமிழில் நேரலை...!

1 day ago

அத்திவரதரின் கடைசி தரிசனம்; இன்னும் சற்று நேரத்தில் நியூஸ்7 தமிழில் நேரலை...!

1 day ago

தமிழகம், புதுவையில் அடுத்த 24 மணிநேரத்தில் மிதான மழைக்கு வாய்ப்பு...! - வானிலை ஆய்வு மையம்

1 day ago

டெல்டா பாசனத்திற்காக கல்லணையில் இருந்து நீர் திறக்கப்பட்டது!

2 days ago

"அத்திரவரதரை ஒரு கோடியே 7500 பேர் தரிசனம் செய்துள்ளனர்!" - காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர்

2 days ago

மக்கள்தொகையை கட்டுப்படுத்துவதில் தென்மாநிலங்கள் சிறப்பாக செயல்படுகின்றன - ஐக்கிய நாடுகள் சபை

2 days ago

தமிழகம் முழுவதும் இன்று விட்டுவிட்டு மழை பெய்யும்: வானிலை மையம்

2 days ago

கிண்டி, சைதாப்பேட்டை, தி.நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழை...!

2 days ago

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல்களை அரங்கேற்றலாம் என்ற தகவலால் ஜம்மு காஷ்மீரில் உஷார் நிலை அமல்!

2 days ago

"எதிர்கால சூழ்நிலையை பொறுத்து அணு ஆயுத கொள்கையில் மாற்றம் வரலாம்" - பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தகவல்

2 days ago

அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு..!

3 days ago

டி.என்.பி.எல். இறுதிப்போட்டியில் சென்னை சேப்பாக் அணி அபார வெற்றி...!

3 days ago

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்க விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனை...!

3 days ago

வெள்ளத்தில் சிக்கிய ஆம்புலன்ஸுக்கு உயிரை பொருட்படுத்தாமல் வழிகாட்டிய 12 வயது சிறுவன்....!

3 days ago

முன்னாள் மேயர் உள்பட மூவர் படுகொலை வழக்கில் திமுகவின் முக்கிய பிரமுகர்களிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி திட்டம்.....

3 days ago

நாட்டின் பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளதாக மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு...

3 days ago

காஞ்சிபுரத்தில் இன்றோடு நிறைவு பெறுகிறது அத்தி வரதர் தரிசனம்...!

3 days ago

அண்ணா, எம்ஜிஆர், வழியில் இந்தி திணிப்பை எதிர்ப்பதில் உறுதியாக இருக்கிறோம் - முதலமைச்சர்

4 days ago

நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த சுதந்திர போராட்ட வீரர்களுக்கு தலை வணங்குகிறேன் - பிரதமர் நரேந்திர மோடி

4 days ago

21 குண்டுகள் முழங்க மூவர்ணக் கொடியை செங்கோட்டையில் ஏற்றினார் பிரதமர் மோடி...!

4 days ago

செங்கோட்டையில் முப்படையினர் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார் பிரதமர் மோடி...!

4 days ago

"அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது" - சென்னை உயர்நீதிமன்றம்

4 days ago

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 106 அடியை தாண்டியது!

5 days ago

நள்ளிரவில் குடும்பத்தாருடன் அத்தி வரதரை தரிசித்த ரஜினிகாந்த்!

5 days ago

நீலகிரியை சீரமைக்க 200 கோடி ரூபாய் தேவை: ஓபிஎஸ்

5 days ago

வேறு இடத்தில் ஜெ. நினைவு இல்லம் அமைப்பது அரசின் கொள்கை முடிவுக்கு எதிரானது - சென்னை மாவட்ட ஆட்சியர்

5 days ago

ஜெயலலிதாவின் வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான இறுதி அறிக்கை தாக்கல்!

5 days ago

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

6 days ago

100 அடியை தாண்டி வேகமாக நிரம்பும் மேட்டூர் அணைக்கு வெடிகுண்டு மிரட்டல்...

6 days ago

முன்னாள் கார் டிரைவரால் உயிருக்கு ஆபத்து என ஜெ. தீபா கதறல்

6 days ago

மேட்டூர் அணையிருந்து இன்று தண்ணீர் திறந்துவிடுகிறார் முதலமைச்சர் பழனிசாமி.

6 days ago

“நீலகிரியில் என்னென்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ அது எடுக்கப்பட்டு வருகிறது”.- முதல்வர் பழனிசாமி

6 days ago

“விளம்பரம் தேடுவதற்காகவே மு.க.ஸ்டாலின் நீலகிரி சென்றுள்ளார்!” - முதல்வர் பழனிசாமி

6 days ago

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை நாளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு!

1 week ago

ஒகேனக்கல் காவிரி ஆற்றுக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு!

1 week ago

தொடர்மழை காரணமாக நிலைகுலைந்த நீலகிரி!

1 week ago

கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி, இதுவரை 72 பேர் உயிரிழப்பு!

1 week ago

இல்லாத மக்களுக்கு இயன்றதை கொடுக்கும் பக்ரீத் திருநாள் இன்று...!

1 week ago

கேரளாவின் வயநாடு புத்துமலை எஸ்டேட் பகுதியில் நிலச்சரிவு!

1 week ago

திராவிட முன்னேற்ற கழகம் அதலபாதாளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது: பொன் ராதாகிருஷ்ணன்

1 week ago

உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையை 33-ஆக அதிகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல்!

1 week ago

2வது ஒரு நாள் கிரிக்கெட்:இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இன்று மீண்டும் மோதல்!

1 week ago

கர்நாடகா அணைகளில் இருந்து பெருமளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு!

1 week ago

கேரளாவில் பாதிக்கப்பட்ட இடங்களை இன்று பார்வையிடுகிறார் ராகுல்காந்தி!

1 week ago

அத்தி வரதர் தரிசன காலத்தை 108 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என விஸ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்!

1 week ago

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத்தலைவராக சோனியா காந்தி தேர்வு!

1 week ago

டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டிக் கூட்டத்தில் சோனியா காந்தி தலைவராக மீண்டும் தேர்வு...!

1 week ago

காஷ்மீரில் பொது வாக்கெடுப்பை நேரு நடத்தாதது நம்பிக்கை மோசடி - வைகோ

1 week ago

"இயற்கையின் மீது பெரிதும் அக்கறை கொண்டவர் பிரதமர் மோடி!" - பியர் கிரில்ஸ்

1 week ago

கேரள மாநிலம் வயநாட்டிற்கு நாளை செல்கிறார் ராகுல் காந்தி!

1 week ago

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 3 புலிக்குட்டி மற்றும் 4 சிங்கக்குட்டிகளுக்கு பெயர் சூட்டினார் முதல்வர்.

1 week ago

தமிழ் திரையுலகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாக ரசிகர்கள் அதிர்ச்சி!

1 week ago

முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

மிரட்டும் கனமழையால் கேரளாவில் தொடர்ந்து ரெட் அலர்ட்!

1 week ago

வேலூர் தொகுதி வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அறிக்கை!

1 week ago

ஜெயலலிதா மறைந்த பின்பும், அதிமுகவின் வாக்கு சதவீதம் அப்படியே உள்ளது என ஓபிஎஸ், ஈபிஎஸ் கூட்டறிக்கை!

1 week ago

வேலூர் மக்களவைத் தேர்தலில் 8 ஆயிரத்து 141 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

1 week ago

உடல் நலக்குறைவு காரணமாக முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி...!

1 week ago

திமுகவுக்கு கிடைத்த வெற்றி ஜனநாயகத்திற்கு கிடைத்த வெற்றி - மு.க.ஸ்டாலின்

1 week ago

கனமழை காரணமாக நாளை காலை 9 மணி வரை கொச்சி விமான நிலையத்தில் விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து...!

1 week ago

இந்தி, தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை ஜம்மு காஷ்மீருக்கு வரவழைப்பேன் - பிரதமர் மோடி

1 week ago

அம்பேத்கர்,பட்டேல்,வாஜ்பாய் உள்ளிட்டோரின் கனவு நனவாகி உள்ளது - பிரதமர் மோடி

1 week ago

தொடர் மழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ராசாமணி

1 week ago

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு அடுத்த 4 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவு...!

1 week ago

காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரஸ் குற்றவாளி எனக் கூறிய வைகோவிற்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்...!

1 week ago

வரலாற்றில் முதல் முறையாக கபினி அணையிலிருந்து 85,000 கனஅடி நீர் வெளியேற்றம்...!

1 week ago

கபினி அணையில் இருந்து 85,000 கன அடி நீர் வெளியேற்றம்...!

1 week ago

“அரசின் திட்டங்கள் குறித்து ஒவ்வொரு மாதமும் கள ஆய்வு செய்ய வேண்டும்!” - தமிழக முதல்வர்

1 week ago

கர்நாடகத்தில் இருந்து தமிழகத்துக்கு 67,500 கன அடி நீர் திறப்பு!

1 week ago

கர்நாடகாவில் கனமழை காரணமாக 10 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

1 week ago

காஷ்மீர் விவகாரம்: நாட்டு மக்களுக்கு இன்று விளக்கம் அளிக்கிறார் பிரதமர் மோடி.

1 week ago

இடைவிடாத தொடர் மழையால், வெள்ளத்தில் மிதக்கும் கர்நாடகம்!

1 week ago

கனமழை காரணமாக வால்பாறை வட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

1 week ago

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் விடுவிப்பு...!

1 week ago

இந்தியாவுடனான வர்த்தக உறவை தற்காலிகமாக நிறுத்தவும், தூதரக ரீதியிலான உறவை குறைத்துக்கொள்ளவும் பாகிஸ்தான் முடிவு...!

1 week ago

வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டியை 0.35% குறைத்தது ரிசர்வ் வங்கி!

1 week ago

கீழடியில் ஐந்தாம் கட்ட அகழ்வாராய்ச்சியின் பணிகளின் போது உறை கிணறு கண்டுபிடிப்பு!

1 week ago

அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை இணையத்தில் வெளியிட தடை!

1 week ago

மறைந்த கருணாநிதியின் சிலை திறப்பு விழா ஏற்பாடுகள் தீவிரம்!

1 week ago

முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக காலமானார்: அவருக்கு வயது 67

1 week ago

சட்டப்பிரிவு 370ஐ திரும்பப்பெறும் தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது...!

1 week ago

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது சரியான முடிவா, இல்லையா என்பதை வரலாறு தீர்மானிக்கும் - மத்திய அமைச்சர் அமித்ஷா

1 week ago

"நீலகிரி மற்றும் கோவையில் மிக கனமழைக்கு வாய்ப்பு!" - வானிலை மையம்

1 week ago

அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் மாணவர்களுக்கு ஆதார் எண் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

1 week ago

கோமாளி டீசர் மூலம் ரஜினியை கிண்டல் செய்ததற்காக வருத்தம் தெரிவித்த ஜெயம் ரவி!

1 week ago

காஷ்மீரில் கலவரம் மூள்வதை தடுக்க உச்சக்கட்ட உஷார் நிலை.

1 week ago

விசாரணைக்கு ஆஜராக விஜயகாந்துக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் சம்மன்.

1 week ago

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள பதற்றம் குறித்து ஐ.நா சபை கவலை.

1 week ago

“ஜம்மு- காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பிய பின் மாநில அந்தஸ்து வழங்கப்படும்” - மாநிலங்களவையில் அமித்ஷா உறுதி

1 week ago

சிறப்பு அந்தஸ்தை நீக்கியதால் காஷ்மீர் தனது தனித்துவத்தை இழந்துவிட்டது! - வைகோ

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை