Skip to main content

இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நினைவுகளை தந்த தினம் இன்று!

September 24, 2019
Image

கா. அருண்

கட்டுரையாளர்

Image

எம்.எஸ்.தோனியின் தலைமையின் கீழ் இதே நாளில் தான் இந்திய அணி, உலகக் கோப்பை டி-20 தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது. 

ஐசிசி சார்பில் டி-20 போட்டிகளுக்கான முதல் உலகக் கோப்பை 2007ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்றது, இதில் 12 அணிகள் கலந்துகொண்டன.

2007 செப்டம்பர் 24ம் தேதி ஜோகனஸ்பர்க் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியாவும், பரம வைரியான பாகிஸ்தானும் மோதின.

மகேந்திர சிங் தோனி என்ற இளைஞரின் தலைமையின் கீழ் களமிறங்கிய இந்திய அணியில் கவுதம் காம்பீர், யுவ்ராஜ் சிங், ஸ்ரீசாந்த், ஹர்பஜன் சிங், இர்பான் பதான், ரோகித் சர்மா, ஜோகிந்தர் சர்மா உள்ளிட்ட வீரர்கள் இடம்பிடித்திருந்தனர். யூசப் பதான் இத்தொடரில் இந்திய அணியில் அறிமுகமானார். பாகிஸ்தான் அணி, ஷாகித் அப்ரிதி தலைமையில் களமிறங்கியது.

இந்தியா பேட்டிங்:

பரபரப்புக்கு பஞ்சமில்லாத இப்போட்டியில் முதலில்  இந்திய அணி பேட்டிங் செய்தது. கவுதம் காம்பீரும், யூசுப் பதானும் ஒபனர்களாக களமிறங்கினர். இந்திய அணியை அச்சுறுத்தும் வகையில் பந்துவீசினார் உமர் குல். 

யூசுப் பதான் ஆரம்பகட்டத்திலேயே 15 ரன்களில் கேட்சாகி வெளியேறினாலும் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கவுதம் காம்பீர் அதிரடி காட்டினார். அடுத்து வந்த ராபின் உத்தப்பா சோபிக்க தவறினார்.

6 சிக்ஸர் சாதனை மன்னன்:

இத்தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் தொடர்ச்சியாக 6 பந்துகளில் 6 சிக்ஸர்கள் விளாசி உலக சாதனை படைத்திருந்த யுவ்ராஜ் சிங் மீது எதிர்பார்ப்பு விழுந்தது. 14 ரன்களில் Edge ஆகி கேட்ச் கொடுத்து வெளியேறினார் அவர்.

இதன் பின்னர் களமிறங்கினார் கேப்டன் தோனி, 8 ரன்களில் விளையாடிக்கொண்டிருந்த போது ஸ்டெம்பு பறக்கும் முறையில் தோனியை போல்டாக்கினார் உமர் குல். பின்னர் ரோகித் களமிறங்கினார். இந்த நேரத்தில் இந்தியாவுக்கு நங்கூரமாக செயல்பட்ட கம்பீர் 54 பந்துகளில் இரண்டு சிக்ஸர்கள், 8 பவுண்டரிகளுடன் 75 ரன்களை திரட்டி வெளியேறினார். இவரையும் உமர் குல்லே வெளியேற்றினார். அப்போது இந்திய அணி 18 ஓவர்களில் 130 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்திருந்தது.

இதன் பின்னர் இர்பான் பதான் களமிறங்கினார். ரோகித் சர்மா 16 பந்துகளில் 30 ரன்களை சேர்த்தார். இதன் மூலம் 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 157 ரன்களை திரட்டியது இந்திய அணி. கடைசி இரண்டு ஓவர்களில் இந்திய அணி 27 ரன்களை திரட்டியதால் சவாலான இலக்கை பாகிஸ்தானுக்கு நிர்ணயித்தது இந்தியா.

பாகிஸ்தான் சேஸிங்:

158 ரன்கள் எடுத்தால் பரம வைரியான இந்தியாவை வீழ்த்துவதுடன் உலக சாம்பியன் ஆகிவிடலாம் என ஒரே கல்லில் இரட்டை மாங்காய் இலக்காக களமிறங்கினர் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்கள் முகமது ஹஃபீஸும், இம்ரான் நசீரும்.

அதிர்ச்சியளித்த முதல் ஓவர்:

போட்டியின் முதல் ஓவரிலேயே பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்தார் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங். அவரது பந்துவீச்சில் ஒரு ரன் மட்டுமே எடுத்து உத்தப்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் முகமது ஹஃபீஸ். 

இரண்டாவது ஓவரை ஸ்ரீசாந்த் வீசியபோது அவரின் பந்துவீச்சை வெளுத்து வாங்கினார் தொடக்க ஆட்டக்காரர் இம்ரான் நசீர். அந்த ஓவரில் இரண்டு சிக்ஸர்கள், இரண்டு பவுண்டரிகளை பறக்க விட்டார் நசீர்.

ஆர்.பி.சிங்கின் மூன்றாவது ஒவரில் ரன் ஏதும் எடுக்காத நிலையில் கம்ரான் அக்மல் போல்டாகி வெளியேறினார்.

முதல் ஓவரில் 20 ரன்களை வாரி வழங்கிய ஸ்ரீசாந்த், அடுத்த ஓவரை மெய்டனாக வீசி மெய்சிலிர்க்க வைத்தார். 6 பந்துகளையும் யூனஸ் கான் எதிர்கொண்டார்.

திருப்புமுனையான ரன் அவுட்:

இதனிடையே சிறப்பாக ஆடி வந்த இம்ரான் நசீர் 14 பந்துகளில் 33 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார். ராபின் உத்தப்பாவின் துல்லியமான தாக்குதலில் அவர் அவுட் ஆனார். இது இந்திய அணிக்கு திருப்புமுனையாக அமைந்தது. இதன் பின்னர் சீரான இடைவெளியில் பாகிஸ்தான் விக்கெட்களை இழக்கத் தொடங்கியது. யூனிஸ் கான் 24 ரன்கள் எடுத்து வெளியேறினார். 

இரட்டை செக் வைத்த இர்பான் பதான்:

ஆட்டத்தின் 12 ஓவரை வீசிய இர்பான் பதான் பாகிஸ்தான் அணிக்கு கடும் அதிர்ச்சியை அளித்தார். அவரது ஓவரின் 3வது பந்தில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சோயிம் மாலிக்கையும் (8 ரன்கள்), 4வது பந்தில் கேப்டன் ஷாகித் அஃப்ரிதியையும் (0 ரன்கள்) வெளியேற்றி இந்திய ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அப்போது 77 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது பாகிஸ்தான்.

டெயில் எண்டர்களான யாசர் அராபத் (15 ரன்கள்), சோகைல் தன்வீர் (12 ரன்கள்) ஓரளவு ரன்களை திரட்டித் தந்தனர். பந்துவீச்சில் கலக்கிய உமர் குல் டக் அவுட் ஆனார்.

பரபரப்பான இறுதி ஓவர்:

இறுதி ஓவரில் பாகிஸ்தானின் வெற்றிக்கு 13 ரன்கள் தேவை என்ற நிலையில் ஜோகிந்தர் சர்மாவை பந்து வீச அழைத்தார் கேப்டன் எம்.எஸ். தோனி.

முகமது ஆஸிப்புடன், தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய மிஸ்பா இருவரும் கடைசி விக்கெட்களாக களத்தில் இருந்தனர்.

முதல் பந்தை மிஸ்பா எதிர்கொண்ட போது அகலப்பந்தாக வீசினார் ஜோகிந்தர். இப்போது தேவைப்படும் ரன்கள் 12 ஆக இருந்தது. 

2வது பந்தை சிக்ஸருக்கு விரட்டினார் மிஸ்பா. இதன் மூலம் வெற்றிக்கு தேவையான ரன்கள் 6 ஆக குறைந்தது. 

முதல் சாம்பியன்:

4 பந்துகளில் 6 ரன்களே தேவை என்ற நிலையில் 3வது பந்தை ஸ்வீப் முறையில் தூக்கி அடித்தார் மிஸ்பா, பவுண்டரி பகுதியில் இருந்து விரைந்து ஓடி வந்த ஸ்ரீசாந்த் அருமையாக கேட்ச் செய்தார். இதன் மூலம் முதல் உலகக் கோப்பை டி-20 தொடரில் பாகிஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய அணி சாம்பியன் பட்டத்தையும் வென்றது.

பாகிஸ்தான் அணியின் ஒரே நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கியவர் மிஸ்பா உல் ஹக் மட்டுமே. (இவர் இன்றைய பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வாளர் என்ற இரட்டை பதவியில் அண்மையில் நியமிக்கப்பட்டார்) 38 பந்துகளில் மிஸ்பா 43 ரன்கள் திரட்டினார். இதில் ஆட்டநாயகன் விருதை இர்பான் பதானும், தொடர் நாயகன் விருதை அப்ரிதியும் வென்றனர்.

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக தமிழக அரசு என்ன முடிவெடுத்துள்ளது என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது!

2 hours ago

இது மறுக்க வேண்டிய சம்பவமில்லை; மறக்க வேண்டிய சம்பவம்: ரஜினி

3 hours ago

ரஜினியின் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் : ஹெச்.ராஜா

3 hours ago

துக்ளக் விழாவில் பேசியது குறித்து மன்னிப்பு கேட்க முடியாது: நடிகர் ரஜினிகாந்த்

3 hours ago

பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்ட அறிவிப்பு எதிரொலியால் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.

3 hours ago

"நாடு முழுவதும் ஜூன் 1ம் தேதி முதல் ஒரே தேசம் ஒரே ரேசன் அட்டை திட்டம் செயல்படுத்தப்படும்!" - மத்திய அமைச்சர்

6 hours ago

மெரினா போராட்டம்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்தார் ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஸ்வரன்.

6 hours ago

பேட்டிங் தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்த கோலி!

6 hours ago

ஆந்திரா சட்டப்பேரவை வளாகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட சந்திரபாபு நாயுடு கைது.

6 hours ago

எதிர்காலத்தில் அதிக சங்கடங்கள் வரலாம்: பிரதமர் மோடி

6 hours ago

ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

18 hours ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரராக தேர்வான ரஞ்சித் குமாருக்கு கார் பரிசளிப்பு.

21 hours ago

தீவிரவாதிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பெங்களூருவில் கைதான மூவருக்கு நீதிமன்ற காவல்!

22 hours ago

நிர்பயா வழக்கில் சிறார் நீதி சட்டத்தின் கீழ் விசாரிக்க கோரிய குற்றவாளி பவன்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!

22 hours ago

பாஜகவின் தேசிய தலைவராக ஜே.பி. நட்டா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

23 hours ago

அல்வா வழங்கி மத்திய பட்ஜெட் தயாரிக்கும் பணி தொடக்கம்!

1 day ago

எஸ்எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு நாகர்கோவில் மாவட்ட நீதிமன்றத்திற்கு மாற்றம்.

1 day ago

சென்னையில் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழக அரசின் விருதுகள் வழங்கும் விழா தொடங்கியது.

1 day ago

ஜெயலலிதா பிறந்த நாள் கொண்டாட்டம் தொடர்பாக சென்னையில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.

1 day ago

குடியரசு தின ஒத்திகை: சென்னை காமராஜர் சாலையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை போக்குவரத்து நிறுத்தம்!

1 day ago

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதியில்லை என அமைச்சரவை கொள்கை முடிவெடுக்க வேண்டும்: மு.க.ஸ்டாலின்

1 day ago

திருப்பதி கோயில் செல்லும் பக்தர்களுக்கு இன்று முதல் ஒரு இலவச லட்டு!

1 day ago

பாஜக தேசிய தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் இன்று வேட்பு மனு தாக்கல்!

1 day ago

தமிழகத்தில் தனியார் பால் விலை அதிகரிப்பு; லிட்டருக்கு 4 ரூபாய் வரை உயர்ந்ததால் மக்கள் அவதி.

1 day ago

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கைப்பற்றியது இந்தியா!

1 day ago

மருத்துவம், அடிப்படை கட்டமைப்புகள் உட்பட பல்வேறு துறைகளில் ஜிடிபி 61% உயர்ந்துள்ளது - நிர்மலா சீதாராமன்

1 day ago

அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு!

1 day ago

அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் மாடு முட்டி ஒருவர் உயிரிழப்பு!

1 day ago

வாட்ஸ் அப்பில் புகைப்படம்,வீடியோ பதிவேற்றம் செய்யமுடியாமல் பயனர்கள் அவதி!

1 day ago

கடைசி ஒருநாள் போட்டி - இந்தியாவுக்கு 287 ரன்கள் இலக்கு!

1 day ago

CAAவுக்கு எதிராக அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக 1700 பேர் மீது வழக்குப்பதிவு!

1 day ago

"வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் வெண்கலச் சிலை அமைக்கப்படும்!" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

1 day ago

மதுரை உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கணூரில் நகராட்சிக்கு சொந்தமான குப்பை உரக்கிடங்கில் தீ விபத்து!

2 days ago

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி பந்துவீச்சு.

2 days ago

"குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் அனைவரும் தேச விரோதிகள்!" - ஹெச்.ராஜா

2 days ago

போலியோ என்ற கொடிய நோய் தமிழகத்தில் எங்கும் இல்லை: முதல்வர் பழனிசாமி

2 days ago

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தொடங்கியது!

2 days ago

பழம்பெரும் இந்தி நடிகை சபானா ஆஸ்மி சாலை விபத்தில் படுகாயம்; விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக பிரதமர் மோடி டுவிட்

2 days ago

ஒருநாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்?; பெங்களூருவில் இந்தியா-ஆஸ்திரேலியா இன்று பலப்பரீட்சை

2 days ago

சீரடி கோயில் காலவரையின்றி மூடப்படாது என கோயில் நிர்வாகம் விளக்கம்; சாய்பாபா பிறப்பிடம் குறித்து சர்ச்சை கிளப்பியதற்கு சிவசேனாவுக்கு பாஜக கண்டனம்

2 days ago

தமிழகம் முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்; 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க மருத்துவர்கள் அறிவுரை

2 days ago

600 கோடி ரூபாயை தாண்டியது பொங்கல் பண்டிகைகால மதுவிற்பனை; கடந்த ஆண்டை காட்டிலும் 10 சதவீதம் அதிகரிப்பு

2 days ago

திமுக-காங்கிரஸ் உறவு, உடைந்த கண்ணாடி போன்றது; ஒட்ட வைத்தாலும் மீண்டும் உடையும் என அமைச்சர் ஜெயக்குமார் ஆருடம்

2 days ago

டெல்லி சட்டப்பேரவை தேர்தல்: 54 பேர் கொண்ட முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

2 days ago

பொதுவெளியில் இருக்கட்சியினரும் கூட்டணி குறித்து கருத்து தெரிவிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

2 days ago

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் எந்த பிரச்னையும், பிளவும் இல்லை: கே.எஸ்.அழகிரி

2 days ago

பாஜக உதவியை கமல்ஹாசன் நாடுகிறாரா? -கே.எஸ்.அழகிரி

3 days ago

தமிழகத்தில் நாளை முதற்கட்ட போலியோ முகாம்!

3 days ago

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சந்திப்பு!

3 days ago

குடியுரிமை பற்றி ராகுலுக்கு தெரியாது: ஜே.பி.நட்டா

3 days ago

வில்சன் கொலை - முக்கிய நபர் கைது

3 days ago

நிர்பயா வழக்கை வைத்து அரசியல் செய்ய வேண்டாம்: அரவிந்த் கெஜ்ரிவால்

3 days ago

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி!

3 days ago

பாஜகவின் தேசிய தலைவராக வரும் 21ம் தேதி ஜே.பி. நட்டா பதவியேற்பார் என அறிவிப்பு

3 days ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒரே சுற்றில் 16 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார் மாடுபிடி வீரர் ரஞ்சித்..!

3 days ago

2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 341 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

3 days ago

அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது.

3 days ago

12 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் பிரவீன்குமார் காயம்!

3 days ago

நிர்பயா வழக்கில் புதிய தண்டனை தேதியை அறிவித்தது பாட்டியாலா நீதிமன்றம்!

3 days ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 34 பேர் காயம்!

3 days ago

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மாலை 5 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு!

3 days ago

கொரனோ வைரஸ் பாதிப்பு தடுப்பு நடவடிக்கை குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை!

3 days ago

பயங்கரவாதிகள் தடுப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணனுக்கு என்ன தெரியும்? - அமைச்சர் கருப்பணன்

3 days ago

சீனாவின் பொருளாதாரம் கடந்த 29 ஆண்டுகளில் இல்லாத வகையில் 2019ம் ஆண்டில் 6.1% ஆக சரிவு!

3 days ago

9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் ஜனவரி 27ம் தேதி வெளியிடப்படும் என தகவல்!

3 days ago

CAA -வுக்கு எதிராக பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றம்!

4 days ago

நிர்பயா வழக்கின் குற்றவாளி முகேஷின் கருணை மனுவை நிராகரித்தார் குடியரசுத் தலைவர் !

4 days ago

வில்சன் கொலை - சுமார் 14 மணி நேர விசாரணை நிறைவு

4 days ago

உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கோலாகலமாக தொடங்கியது!

4 days ago

எஸ்.எஸ்.ஐ. வில்சன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளிகளிடம் நடத்தப்பட்ட விசாரணை நிறைவு..!

4 days ago

பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது.

4 days ago

பாலமேட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நிறைவு.

4 days ago

மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு மேலும் 30 நிமிடம் நீடிக்கப்பட்டது.

4 days ago

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கான பிசிசிஐ-யின் ஒப்பந்தப் பட்டியலில் மகேந்திர சிங் தோனியின் பெயர் இடம்பெறவில்லை. 2019 அக்டோபர் முதல் 2020 செப்டம்பர் வரையிலான ஒப்பந்தப் பட்டியலை வெளியீடு.

4 days ago

"நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது, டெல்லி அரசின் அலட்சியத்தால் தாமதம்; நீதி தாமதமாவதற்கு ஆம் ஆத்மி தான் பொறுப்பு!" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

4 days ago

இந்த ஆண்டின் தேவை மதுவிலக்கு :வைரமுத்து

5 days ago

தயார் நிலையில் பாலமேடு ஜல்லிக்கட்டு வாடிவாசல்!

5 days ago

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்தது!

5 days ago

கூட்டணியை விட்டு காங்கிரஸ் விலகினாலும் கவலை இல்லை! - திமுக பொருளாளர் துரைமுருகன்

5 days ago

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 16 பேர் காயம்!

6 days ago

கள்ளியாக்கவிளை எஸ்.எஸ்.ஐ வில்சன் கொலையில் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் தமிழக போலீசாரிடம் ஒப்படைப்பு!

6 days ago

சீறிபாயும் காளைகளை அடக்க மாடுபிடி வீரர்கள் தீவிரம்!

6 days ago

மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது!

6 days ago

கவலைகளை நிரந்தரமாக்கி கொண்டால் நோயாளி தற்காலிகமாக்கி கொண்டால் அறிவாளி, சோ ராமசாமி அறிவாளி: துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த்

6 days ago

தற்போது அரசியல், சமுதாயம், அனைத்தும் கெட்டுப் போய்விட்டது: துக்ளக் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேச்சு

6 days ago

“முரசொலி பத்திரிகை வைத்திருப்பவர்களை திமுககாரர்கள் எனலாம்; துக்ளக் பத்திரிக்கையை வைத்திருப்பவர்களை அறிவாளி எனலாம்!” துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேச்சு

6 days ago

நிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார் குற்றவாளி முகேஷ் சிங்!

6 days ago

மும்பை: முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 256 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயம்!

6 days ago

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளின் சீராய்வு மனுக்கள் தள்ளுபடி!

6 days ago

திமுக கூட்டணியில் சலசலப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை - கே.எஸ்.அழகிரி

1 week ago

பேரறிவாளன் வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனம்!

1 week ago

தேர்தல் பணியாற்றும் ஊடகவியலாளர்களுக்கு தபால் வாக்கு; இந்தியாவில் முதல்முறையாக அறிமுகம்!

1 week ago

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், கே.எஸ்.அழகிரி திடீர் சந்திப்பு!

1 week ago

இந்தியா வருகிறார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்!

1 week ago

தமிழகத்தில் உள்ள அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வாழ்த்து - தமிழிசை சௌந்தரராஜன்

1 week ago

மண்ணச்சநல்லூரில் பெண்ணை கொலை செய்து உடல் ஆற்றில் புதைப்பு; காவல்துறையினர் விசாரணை

1 week ago

போகிப்பண்டிகை - சென்னை முழுவதும் புகையால் சூழப்பட்டது!

1 week ago

மதுரை மாட்டுத்தாவணி, பெரியார், ஆரப்பாளையம் பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை!

1 week ago

மதுரை பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என மர்ம நபர் மிரட்டல்!

1 week ago

தமிழக மக்கள் அனைவரும் எல்லா வளமும், நலமும் பெற்று சீரோடும், சிறப்போடும் வாழ வாழ்த்து - முதல்வர் பழனிசாமி

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை