Skip to main content

2019 உலகக்கோப்பை தொடர் : இந்தியாவின் NO. 4 யார்? - ஒரு முக்கிய அலசல்

April 02, 2019
Image

தினேஷ் அகிரா

கட்டுரையாளர்

Image

2019 உலகக்கோப்பை தொடரில்  இந்திய அணியின்  நான்காம் நிலை வீரர் யார் என்ற குழப்பம் இன்றுவரை தீர்ந்தபாடில்லை.

 

உலகக்கோப்பை தொடரில் விராட் கோலியை நான்காம் ஆட்டக்காரராக களமிறக்கும் யோசனையும் இருப்பதாக இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியுள்ளார். இந்தக் குறிப்பிட்ட நகர்வின் மூலமாக அணியில் தனக்கான தோதான இடமின்றித் தடுமாறி வரும் கே.எல்.ராகுலை அணிக்குள் கொண்டு வந்துவிடலாம் என்பது அணி நிர்வாகத்தின் திட்டம். ஆனால் அணியின் நலன் என்ற பெயரில், மூன்றாம் நிலையில் இறங்கி இதுவரை 34 சதங்களைக் குவித்த ஒரு ஜாம்பாவானை வேறொரு இடத்தில் ஆடவைப்பது அணிக்கு மட்டுமல்ல கோலியின் தனிப்பட்ட ஆட்டத்துக்கே ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது. இதே உத்தியைத் தான் 2015 உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவும்  சாஸ்திரி தலைமையிலான அணி நிர்வாகம் முயன்றுப் பார்த்தது. அணியின் பேட்டிங் வரிசையைப் பலப்படுத்தும் முயற்சியாக அன்றைக்கு சீராக ரன்கள் குவித்து வந்த ராயுடுவை மூன்றாம் நிலையில் இறக்கி சோதனை ஓட்டம் விடப்பட்டது. அந்த முயற்சி தோல்வியில் முடியவே, வேறு வழியில்லாமல் மீண்டும் கோலியே மூன்றாம் நிலையில் ஆடப் பணிக்கப்பட்டார்.

 

ஒரு நாள் போட்டிகளில் NO. 4 இன் முக்கியத்துவம்  


ஒரு நாள் ஆட்டத்தில் இரண்டு பந்துகள் உபயோகப்படுத்தும் முறை கொண்டு வரப்பட்ட பிறகு, நான்காம் நிலையில் பேட்டிங் செய்வதன் வரையரை முழுக்கவே மாறியுள்ளது. முன்பெல்லாம் ஒர் அணியின் நான்காம் நிலை வீரர் என்பவர் சுழற்பந்து வீச்சை நன்றாக ஆடக் கூடியவராக, தேவைப்படும் பொழுது வேகமெடுக்க கூடியவராக இருந்தால் மட்டும் போதுமானதாக இருந்தது. ஆனால் இப்பொழுது ஓர் அணியின் NO. 4 புதிய பந்தையும் வேகப்பந்து வீச்சையும் சந்திக்கும் திறமை உள்ளவராகவும் இருப்பது அவசியம் ஆகியுள்ளது. கூடவே ஆட்டத்தின் போக்கை ஒரு சில பந்துகளில் மாற்றும் தனித்துவமான திறமை (X factor) கொண்டவராக இருக்க வேண்டும். இதையெல்லாம் விட முக்கியமாக பௌன்சர்களை அநாயசமாக ஆடக் கூடியவராகவும் இருக்க வேண்டும்.

விராட் கோலி

பௌன்சர்களுக்கு தடுமாறியதன் காரணமாகத் தான் யுவ்ராஜ் சிங்கும் ரெய்னாவும் ஒருநாள் போட்டிகள் அணியிலிருந்து நீக்கப்பட்டார்கள் என்பதை மறந்துவிட முடியாது. 2015  உலகக்கோப்பைக்குப் பிறகு, நான்காம் நிலையில் ஆடுவதற்கு இந்திய அணிக்கு ஒரு நிலையான வீரர் கிடைக்கவே இல்லை. ரஹானே, யுவராஜ் சிங், ரெய்னா, தோனி, ஹர்திக் பாண்ட்யா என்று ஒரு பெரிய பட்டாளத்தையே தேர்வுக்குழுவினர் முயன்றுப் பார்த்துவிட்டு இப்போது அம்பாதி ராயுடு, தினேஷ் கார்த்திக், கேதார் ஜாதவ், விஜய் சங்கர் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பி இருக்கிறார்கள். 

 

இந்திய அணியின் மிடில் ஆர்டர் குழப்பங்கள்

 

தற்போதுள்ள உலக கிரிக்கெட் அணிகளில் இருந்து வசீகரமற்ற ஒரு லெவனைத் தேர்வு செய்தால் அதில் அம்பாதி ராயுடுவின் பெயரும் நிச்சயம் இடம்பெறும். அந்த அளவுக்கு நளினமில்லாத ஒரு மட்டையாளர் ராயுடு. ஆனால் சுழற்பந்து வீச்சுக்கு எதிராக வலுவான ஷாட்களை ஆடக் கூடியவர். கடந்த  ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சி.எஸ்.கே. அணிக்காக சிறப்பாக விளையாடியதன் காரணமாக தேசிய அணியில் மீண்டும் இடம்பிடித்தவர். கடந்த நியூசிலாந்து தொடரில் ஓர் கடினமான இன்னிங்ஸை ஆடியதன் மூலமாக நான்காம் நிலையில் ஆடுவதற்கான வீரர்களுக்கான பந்தயத்தில் தன் பெயரை ராயுடு வலுவாக முன் நிறுத்தியிருக்கிறார்.  யுவராஜ் போல ஆட்டத்தின் முக்கிய தருணங்களை வசப்படுத்தும் X factor இல்லாதது ராயுடுவின் பலவீனம்.

 

அம்பத்தி ராயுடு

கேதார் ஜாதவைப் பொறுத்தவரை, நீண்ட காலமாக உள்ளூர் போட்டிகளில் மிடில் ஆர்டரில் விளையாடிய அனுபவம் உள்ளவர். குறிப்பாக அபாயகரமான ஷாட்களை அடிக்காமலேயே பந்தை தரையோடு சேர்த்து அடிப்பதன் (Maneuvering) மூலமாக ரன் குவிக்கும் திறன் கொண்டவர். ஆனால் அணியில் தற்போதுள்ள சூழலில், ஐந்தாம் அல்லது ஆறாவது நிலையில் ஆடுவதற்கே ஜாதவின் unorthodox பாணி ஆட்டம் பொருத்தமானதாக இருக்கும். இரு வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர்களுடன் இந்திய அணி விளையாட வேண்டிய ஒரு சூழ்நிலை ஏற்பட்டால், தமிழகத்தின் விஜய் சங்கர் NO.4 க்கு ஒரு நல்ல தேர்வாக இருப்பார். பாண்ட்யாவை விட சங்கரின் பேட்டிங் இறுக்கமானது (compact).  இறுதிக்கட்ட ஓவர்களில் மின்னல் வேகத்தில் ரன் குவிப்பதற்கு ஏதுவான பெரிய அளவிலான ஷாட்களையும் கொண்டவர் விஜய் சங்கர். அதே நேரம் ஆட்டத்தின் போக்கிற்கு ஏற்ப ஒற்றை, இரட்டை ரன்களை  ஓடியும் எடுக்கக் கூடிய திறன் கொண்டவர். ஆனால் ஒருநாள் ஆட்டத்தில் மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு என ஒரு ஆதார குணம் இருக்கிறதல்லவா, அதை இதுவரை சங்கரின் ஆட்டத்தில் உணர முடியவில்லை. 

 

தினேஷ் கார்த்திக் : ஏன் சரியான NO.4 இல்லை? 


ரிஷாப் பந்த் X factor உள்ள வீரர். ஆனால் ஒருநாள் போட்டிகளில் ஓர் இன்னிங்ஸை எப்படிக் கட்டமைக்க வேண்டும் என்ற நுணுக்கம் இன்னும் அவருக்கு கைவரப் பெறவில்லை. டெஸ்ட், T20 என்று முற்றிலும் மாறுபட்ட இருவேறு வடிவங்களில் சிறப்பாக செயல்படும் பந்த், இடைப்பட்ட வடிவமான ஒருநாள் ஆட்டத்தில் தடுமாறுவது தான் கிரிக்கெட் ஆட்டத்தின் சுவாரஸ்யம்.  பந்த்தின் அதிரடி ஆட்டம் உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு சாதகமாக அமையும் என்ற பார்வை கங்கூலி போன்ற நிபுணர்களால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு கொண்டே இருக்கிறது. ஆனால் மிடில் ஆர்டர் சூட்சமம் கைகூடும் வரையில் ரிஷாப் பந்த்தின் அதிரடி பாணி, மிடில் ஆர்டரை விட முன்களத்தில் ஆடுவதற்கே பொருத்தமானதாக இருக்கும். மணீஷ் பாண்டே இயல்பாகவே மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கான ஆதார குணத்தைக் கைவரப் பெற்றவர்.

தினேஷ் கார்த்திக்

 

2016 ஆம் ஆண்டு சிட்னி ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக அவர் எடுத்த சதம் மிகப் பிரமாதமானது. ஆனால் அதற்குப் பிறகு ஏனோ பெரிய அளவில் பாண்டேவால் சோபிக்க முடியவில்லை. தொடர் தோல்வி காரணமாக களத்தில் அவரது உடல்மொழியே மிகவும்  எதிர்மைறையான ஒன்றாக மாறியுள்ளது. தினேஷ் கார்த்திக், நிதாஸ் கோப்பை இறுதிப் போட்டிக்குப் பிறகு அனைவரும் கவனிக்கத்தக்க ஒரு கிரிக்கெட் வீரராக மாறிவிட்டார். ஆனால் தினேசின் 360° ஆட்டம் கடைசி நேர மட்டை சுழற்றலுக்கு கைகொடுக்கலாமே தவிர, நான்காம் நிலையில் விளையாடுவதற்கு பொறுத்தமானதல்ல. உண்மையில் தினேஷின் பிரச்சினை அவரது ஆட்டத்தில் இல்லை. நீர்க் குமிழி போல எந்நேரமும் கிளம்பிக் கொண்டிருக்கும் மனம் தான் அவரது பிரச்சினை. எதுவும் இழப்பதற்கில்லை என்ற சூழ்நிலையில் மட்டுமே, தினேஷ் கார்த்திக்கால் நிதானமாக விளையாட முடியும். அதனால் தான்  பொறுமையும் நிதானமும் தேவைப்படும் NO.4  நிலையில் தினேஷ் கார்த்திக்கால் சோபிக்க முடியவில்லை.  

 

ஹாரிஸ் சொஹைல் : இன்சமாம் உல் ஹக்கின் மறுவார்ப்பு  


நான்காம் நிலையில் ஆடுவதற்கு இந்தியாவிற்கு இப்போது தேவைப்படுவதெல்லாம் பாகிஸ்தானின் ஹாரிஸ் சொஹைல் மாதிரியான ஒரு வீரர். ஹாரிஸ் சொஹைலை, ஒரு விதத்தில் இன்சமாம் உல் ஹக்கின் மறுவார்ப்பு என்றே கூறலாம். இன்சமாம் போலவே சொஹைலும் தனது ஷாட்களில் யானை வலுவும், மற்றவர்களைக் காட்டிலும் பந்தை சற்றுத் தாமதமாக சந்திக்கும் அற்புதமான டைமிங்கும் கொண்டவர். குறிப்பாக சுழற்பந்து வீச்சுக்கு எதிராக, அவர் பின்னங்காலுக்கு சென்று ஆப் சைடில் வெட்டி விளையாடும் விதமே அலாதியானது.  சொஹைல் எந்த அளவுக்கு வலுவும் நுணுக்கமான டைமிங்கும் கொண்ட வீரரென்று பறைசாற்றுவதற்கு அவரது மட்டையில் பந்து பட்டதும் இடி போல எழும் ஓசையே சாட்சி.

ஹாரிஸ் சொஹைல்

 

சுழற்பந்து வீச்சு அளவுக்கு வேகத்தையும் நன்றாக கணித்து ஆடுக் கூடியவர் ஹாரிஸ் சொஹைல். மிடில் ஆர்டரில் விளையாடுவதற்கு இவர் பொருத்தமானவராக இருப்பார் என்று ஒரு சிலரைப் பார்த்தவுடன் மனதில் பொறி தட்டும் இல்லையா, அந்த ஆதார குணத்தை தன்னுடைய ஆட்டப் பண்பாகக் கொண்டவர் சொஹைல். ஐபிஎல் தொடரின் முடிவுகளை வைத்து உலக்கோப்பை தொடருக்கான அணித் தேர்வு இருக்காது என்று விராட் கோலி தெளிவுபடுத்திவிட்டார். ஆனால் பிருத்வி ஷா, மாயங்க் அகர்வால் போன்றவர்களின் ஆட்டங்களைப் பார்க்கும் போது, இந்தியா தனது நான்காம் நிலை மட்டையாளனுக்கான தேடலை இன்னும் ஒரு மாத காலத்திற்கு நீட்டி வைக்கலாம் என்று தான் தோன்றுகிறது. 
 

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டக்குழுவினர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு.!

46 minutes ago

டெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்வு!

2 hours ago

டெல்லி கலவரம்: சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைத்தது காவல்துறை!

3 hours ago

தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100 செயலிழந்ததால் மக்கள் அவதி!

3 hours ago

டெல்லி வன்முறைக்கு காங்கிரஸ், ஆம் ஆத்மியே காரணம்: பிரகாஷ் ஜவடேகர்

5 hours ago

கே.பி.பி.சாமியின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் அஞ்சலி!

9 hours ago

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரிப்பு!

12 hours ago

வடகிழக்கு டெல்லியில் ஏற்பட்ட கலவரத்தில் பலியானோர் எண்ணிக்கை 30 ஆக அதிகரிப்பு!

13 hours ago

திருவொற்றியூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கே.பி.பி. சாமி உடல்நலக்குறைவால் காலமானார்!

14 hours ago

குழந்தைகள் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்த மேலும் ஒருவர் கைது!

14 hours ago

என்பிஆர் குறித்து யாரும் அச்சப்பட வேண்டாம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

14 hours ago

டெல்லி வன்முறைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 27 ஆக உயர்வு....!

14 hours ago

பாகிஸ்தானில் இருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்.

21 hours ago

மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாக கண்டிக்கிறேன்:ரஜினிகாந்த்

1 day ago

டெல்லி கலவரத்தை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியிருக்க வேண்டும்: ரஜினிகாந்த்

1 day ago

டெல்லி வன்முறை : மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கண்டனம்!

1 day ago

டெல்லி வன்முறை எதிரொலி: ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

1 day ago

டெல்லி வன்முறை சம்பவங்களை கண்டித்து காங்கிரஸ் சார்பில் பேரணி: சோனியா காந்தி

1 day ago

டெல்லி வன்முறை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

1 day ago

டெல்லி கலவரத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு!

1 day ago

தமிழக சட்டப்பேரவை மார்ச் 9ம் தேதி கூடுகிறது!

1 day ago

ஆபாச பட விவகாரம்: மதுரையில் ஒருவர் கைது!

1 day ago

2 நாள் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

1 day ago

டெல்லி வன்முறை: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு!

1 day ago

தேவைப்பட்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய தயார்: அதிபர் ட்ரம்ப்

2 days ago

தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக போராடும் : ட்ரம்ப்

2 days ago

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் இன்று மீண்டும் வன்முறை.!

2 days ago

அதிபர் ட்ரம்ப் - பிரதமர் மோடி பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்!

2 days ago

திருவாரூரில் மார்ச் 7 ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாரட்டு விழா!

2 days ago

குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள வரவேற்பு!

2 days ago

தமிழகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 6 இடங்களுக்கு தேர்தல்!

2 days ago

மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு மார்ச் 26ல் தேர்தல்!

2 days ago

இந்தியா-அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் இன்று கையெழுத்தாகிறது!

2 days ago

பல்லடம் கள்ளிப்பாளையம் SBI வங்கி கொள்ளை: தனிப்படை அமைப்பு!

2 days ago

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அவரச கூட்டத்திற்கு அழைப்பு!

2 days ago

டெல்லி: வடகிழக்கு பகுதியான பிரம்மபுரியில் மீண்டும் இரு தரப்பினரிடையே மோதல்!

2 days ago

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: ஏப்ரலில் அறிவிப்பாணை?

2 days ago

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் - வங்கதேச அணியை வீழ்த்தியது இந்திய மகளிர் அணி!

3 days ago

தாஜ்மஹால்-க்கு வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

3 days ago

நமஸ்தே என்று ஹிந்தியில் கூறி உரையைத் தொடங்கிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!

3 days ago

இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்க நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சி தொடங்கியது!

3 days ago

பிரதமர் மோடியுடன் சபர்மதி ஆசிரமத்தை பார்வையிடும் அதிபர் ட்ரம்ப்!

3 days ago

இந்தியா வந்தடைந்தார் அதிபர் ட்ரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர்!

3 days ago

ஜெயலலிதாவின் பிறந்தநாளான இன்று பெண்கள் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாட்டம்!

3 days ago

வில்சன் கொலை வழக்கு: தூத்துக்குடி, கடலூரில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை!

3 days ago

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

3 days ago

2 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா புறப்பட்டார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்!

4 days ago

சென்னை பச்சையப்பன் கல்லூரி மெட்ரோ ரயில் நிலையத்தில் விபத்து!

4 days ago

33 ஆயிரத்தை நெருங்குகிறது ஆபரணத் தங்கம்!

4 days ago

2வது இன்னிங்சில் இந்திய அணி நிதான ஆட்டம்: மயங்க் அகர்வால் அரைசதம்

4 days ago

ஆசிய மல்யுத்தத்தில் தங்கம் வென்றார் ரவி தாஹியா!

4 days ago

நேருவை தவறாக சித்தரிக்க முயற்சி நடப்பதாக மன்மோகன்சிங் குற்றச்சாட்டு!

4 days ago

அமெரிக்க அதிபர் டொனல்ட் ட்ரம்ப் நாளை இந்தியா வருகை !

4 days ago

சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தை திறந்து வைத்தார் முதல்வர் பழனிசாமி!

5 days ago

மகாராஷ்டிராவில் என்பிஆர், என்ஆர்சியை அமல்படுத்துவோம்: உத்தவ் தாக்ரே

5 days ago

ஏறுமுகத்தில் தங்கம் விலை: சவரனுக்கு 168 ரூபாய் அதிகரித்து 32,576 ரூபாய் விற்பனை

5 days ago

காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர்-தீவிரவாதிகள் இடையே கடும் மோதல்!

5 days ago

இந்தியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து முன்னிலை!

5 days ago

சிறுபான்மை மக்களின் நம்பிக்கைக்குரிய அரணாக செயல்படும்! - அதிமுக

6 days ago

நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சிக்கு வந்தால் ஏற்றுக்கொள்வோம் : கே.எஸ்.அழகிரி

6 days ago

தயாநிதி மாறனுக்கு எதிராக சென்னை நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு!

6 days ago

லைகா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

6 days ago

மஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவாலயங்களில் குவிந்த பக்தர்கள்!

6 days ago

முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக ஃபிரஞ்சு ஓபனில் கலந்துகொள்ளப் போவதில்லை: ரோஜர் ஃபெடரர் அறிவிப்பு!

1 week ago

7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு செய்த பரிந்துரை வலுவிழந்துவிட்டது - மத்திய அரசு

1 week ago

தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது!

1 week ago

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம்!

1 week ago

விவசாயி சேற்றில் கால் வைத்தால்தான் சோற்றில் கைவைக்க முடியும் - முதல்வர்

1 week ago

டேவிட் தேவாசீர்வாதம், சந்தீப் மிட்டல், பாலநாகதேவி, சேஷாயி ஆகியோர் ஏ.டி.ஜி.பி.யாக பதவி உயர்வு!

1 week ago

பல்லாவரம் மற்றும் மதுரவாயல் தாலுக்காக்களில் புதிய நீதிமன்றங்கள்: சி.வி சண்முகம்

1 week ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் முடிவு எடுக்காமல் இருப்பது தவறு: வைகோ

1 week ago

7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் நிச்சயம் நல்ல முடிவை எடுப்பார்: ஈபிஎஸ்

1 week ago

அவிநாசி அருகே சொகுசுப் பேருந்து மீது கண்டெய்னர் லாரி மோதி கோர விபத்து!

1 week ago

ஏப்.1 முதல் தூய்மையான பெட்ரோல்: பெட்ரோலிய நிறுவனங்கள் அறிவிப்பு

1 week ago

இந்தியன்-2 படப்பிடிப்பில் அதிர்ச்சி சம்பவம்!

1 week ago

சிஏஏ போராட்டம் - 20,000 பேர் மீது வழக்கு

1 week ago

மதுரை, கோவையில் எழுத்துத்தேர்வு நடைபெறாது என டிஎன்பிஎஸ்பி அறிவிப்பு!

1 week ago

சிட்கோ நில முறைகேடு வழக்கில் திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியத்திற்கு நோட்டீஸ்!

1 week ago

"7 பேர் விடுதலை தொடர்பாக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருக்கிறோம்" - முதல்வர் பழனிசாமி

1 week ago

இந்தாண்டு இறுதிக்குள் அத்திக்கடவு அவினாசி திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் - முதல்வர்

1 week ago

சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு!

1 week ago

சென்னையில் இஸ்லாமிய அமைப்புகளின் பேரணி தொடங்கியது!

1 week ago

தலைமைச் செயலகத்தில் இதுவரை இல்லாத அளவில் கூடுதல் பாதுகாப்பு !

1 week ago

கொன்று குவிக்கும் கொரோனா: ஒரே நாளில் 132 மரணங்கள்!

1 week ago

இஸ்லாமிய அமைப்புகள் தலைமைச்செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த தடை!- உயர்நீதிமன்றம்

1 week ago

பூரண மது விலக்கே எங்களது கொள்கை: அமைச்சர் தங்கமணி

1 week ago

சச்சின் டெண்டுல்கருக்கு லோரியஸ் விருது!

1 week ago

கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,868 ஆக உயர்வு!

1 week ago

ஆவடி அருகே 2 குழந்தைகளுடன் மின்சார ரயில் முன் பாய்ந்து இளம்பெண் தற்கொலை!

1 week ago

ஆர்.எஸ்.பாரதி தெரிவித்த கருத்து குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம்!

1 week ago

"என்பிஆர்-க்கு எதிராக மக்களை திரட்டி காந்திய வழியில் ஒத்துழையாமை இயக்கம்!" - திமுக தீர்மானம் நிறைவேற்றம்!

1 week ago

நிர்பயா வழக்கின் குற்றவாளிகளை மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் உத்தரவு!

1 week ago

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்குகளில், மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக சம்மன்!

1 week ago

2006 - 2011 திமுக ஆட்சிக்காலத்தில் அதிக முறைகேடுகள் நடைபெற்றுள்ளன: அமைச்சர் ஜெயக்குமார்!

1 week ago

வண்ணாரப்பேட்டை போராட்டம் தொடர்பாக முதல்வரின் விளக்கம் திருப்தி அளிக்கவில்லை எனக்கூறி திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு.

1 week ago

“கைது செய்ய முயன்றபோது போராட்டக்காரர்கள் பேருந்து கண்ணாடியை உடைத்தனர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

“போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது தண்ணீர் பாட்டில்கள், கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

”காவல்துறையின் அனுமதியின்றி வண்ணாரப்பேட்டையில்போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர்” - முதல்வர் பழனிசாமி

1 week ago

வேளாண் மணடலத்தை அறிவிப்பது நீங்கள் அனுமதியை எங்கள் எம்.பிக்கள் பெற்றுத்தர வேண்டுமா? - சட்டப்பேரவையில் துரைமுருகன் கேள்வி

1 week ago

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது!

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை