முகப்பு > தொழில்நுட்பம்

யாஹு நிறுவனத்தில் நடந்த ஊடுருவலால் 100 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு

December 15, 2016

யாஹு நிறுவனத்தில் நடந்த ஊடுருவலால் 100 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருட்டு


2013ம் ஆண்டு யாஹு நிறுவன மின் அஞ்சல் கணக்குகளில் அத்துமீறி நடந்த ஊடுருவல் சம்பவத்தில் 100 கோடி பேரின் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இணையதள சேவைகளை அளித்து வரும் யாஹு நிறுவனத்தின் மின் அஞ்சல் கணக்குகளில் அந்நியர்கள் அத்துமீறி ஊடுருவியது குறித்து அந்நிறுவனம் புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. 

2013ம் ஆண்டு நடந்த ஊடுறுவல் சம்பவத்தில் பல கோடி பேரின் தனிப்பட்ட தகவல்களை ஹேக்கர்ஸ் திருடியதாகவும், அதே போல் 2014ம் ஆண்டு நடந்த ஊடுறுவலில் சுமார் 50 கோடி மின் அஞ்சல் கணக்குகளின் ரகசிய தகவல்கள் திருடப்பட்டுள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

ஆனால், 2013 மற்றும் 14ம் ஆண்டுகளில் நடந்த  இணையத் தகவல் திருட்டு சம்பவங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என யாஹு கூறியுள்ளது. மின் அஞ்சல் கணக்கு வைத்திருந்தவர்களின் பெயர்கள், அவர்களின் தனிப்பட்ட விவரங்கள் திருடப்பட்டதாக கருதப்படும் இந்த சம்பவங்கள் பற்றி காவல் துறையுடன் இணைந்து விசாரித்து வருவதாக யாஹு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Enter your News7 Tamil username.
Enter the password that accompanies your username.

Add new comment

தலைப்புச் செய்திகள்