முகப்பு > தொழில்நுட்பம்

வாட்ஸ் அப்பில் இலவச வீடியோ அழைப்பு வசதி இந்தியாவில் அறிமுகம்!

November 15, 2016

வாட்ஸ் அப்பில் இலவச வீடியோ அழைப்பு வசதி இந்தியாவில் அறிமுகம்!


உலகம் முழுவதும் 100 கோடி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் வாட்ஸ் அப் செயலியில் வீடியோ காலிங் வசதியை இந்தியாவில் இன்று அறிமுகப்படுத்தி உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. 

ஸ்மார்ட் போன்களின் வருகைக்கு பின்னர் தகவல் பரிமாற்றமானது உச்சநிலையை அடைந்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் பல கோடி மக்கள் பயன்படுத்துகின்றனர். அதனால் அந்த செயலியை அடிக்கடி அப்டேட் செய்வதை வாட்ஸ் அப் நிறுவனமானது வழக்கமாக கொண்டிருந்தது. மேலும் வாட்ஸ் அப் மூலம உலகின் எந்த இடத்தி இருக்கும் மனிதர்களுடனும் வாய்ஸ் கால் மூலம் தொடர்பு கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அதனை மேம்படுத்தும் விதமாக வாட்ஸ் அப் மூலம் வீடியோ அழைப்பு (Video Calling) செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வாட்ஸ் அப் நிறுவனமானது வீடியோ அழைப்பு குறித்து ஏற்கெனவே ஆல்பா மற்றும் பீட்டா எனப்படும் இரண்டு கட்ட சோதனைகளை செய்து முடித்துவிட்டது. 

இது குறித்து இந்தியாவுக்கான வாட்ஸ் அப் நிறுவனத்தின் வியாபார தலைவர் கூறும்போது சர்வதேச அளவில் இந்தியாவில் தான் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகம் என்று கூறினார். 

மேலும் வாட்ஸ் அப் வீடியோ காலிங் வசதி இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே அதனை பயன்படுத்தும் 180 நாடுகளில் அறிமுகப்படுத்தப்படும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். 

மேலும் வீடியோ காலிங் வசதியை பயன்படுத்த எந்த ஒரு புதிய தொழில்நுட்பத்தையும் வாட்ஸ் அப் நிறுவனம் பயன்படுத்தவில்லை. மாறாக வாட்ஸ் அப் மூலம் வாய்ஸ் கால் செய்யும் பட்டனை அழுத்தும்போது அதில் Voice call மற்றும் Video call என்ற இரண்டு விருப்பங்களை தெரிவிக்கும் அதில் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான் விருப்பத்தை தேர்ந்தெடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

மேலும் வாட்ஸ் அப் வாய்ஸ் காலிங் போலவே வீடியோ காலிங் வசதியும் செயல்படுத்தப்படிருப்பதால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளனர். 

Categories : தொழில்நுட்பம் : தொழில்நுட்பம்

தொடர்புடைய செய்திகள்

Enter your News7 Tamil username.
Enter the password that accompanies your username.

Add new comment

தலைப்புச் செய்திகள்