முகப்பு > அரசியல்

மாவட்ட நிர்வாகிகளுக்கு சசிகலாவின் ஆலோசனைகள் என்ன?

January 04, 2017

மாவட்ட நிர்வாகிகளுக்கு சசிகலாவின் ஆலோசனைகள் என்ன?


அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பெற்றுள்ள வி.கே. சசிகலா, இன்று 5 மாவட்டங்களைச் சேர்ந்த 13 நிர்வாகிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது அவர்களிடம் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற நன்கு உழைக்க வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பின்னர், வி.கே. சசிகலா மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையை இன்று தொடங்கினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மேற்கு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் காலையில் ஆலோசனை நடத்தினார். 

இதைத் தொடர்ந்து மாலையில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக வெற்றிபெற முழு மூச்சோடு நிர்வாகிகள் உழைக்க வேண்டும் என்றும், ஊராட்சிகளில் தெருமுனை கூட்டம், பேரூராட்சிகளில் செயல்வீரர்கள் கூட்டம் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா, ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம், குறித்து கட்சி நிர்வாகிகளுடன் பொதுச் செயலாளர் வி.கே. சசிகலா ஆலோசனை நடத்தினார். 

மேலும் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி, தங்கமணி உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களும், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை உள்ளிட்டோரும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Enter your News7 Tamil username.
Enter the password that accompanies your username.

Add new comment

தலைப்புச் செய்திகள்