Skip to main content

வி.பி.சிங் எனும் வரலாற்று நாயகன்!

November 27, 2018
Image

கதிர் ஆர்.எஸ்

கட்டுரையாளர்

Image

எப்படி பெரியாரை கடவுள் மறுப்பு என்ற எல்லைக்குள் சுருக்குகிறார்களோ அப்படித்தான் வி.பி.சிங் அவர்களை இட ஒதுக்கீடு என்ற வரையறைக்குள் சுருக்கி ஒரு சாரார் புறக்கணிக்கின்றனர்.

இந்தியாவின் பிரதமராக ஓர் ஆண்டு கூட நிறைவு செய்யாத வி.பி.சிங் செய்து முடித்த காரியங்கள் பல நூறு ஆண்டுகள் நினைவுக்கூறத்தக்கவை. பிரதமர் ஆவதற்கு முன்பும், பின்பும் அவர் செய்த சாதனைகளும் எடுத்த முடிவுகளும் எந்த ஒரு அரசியல் தலைவராலும் அத்தனை எளிதில் எடுக்க முடியாததாகும்.
முதல்வர் பதவியை துறந்ததாகட்டும், தான் சார்ந்த கட்சியின் மீதே கரிசனம் காட்டாமல் தான்  வகித்த மத்திய அமைச்சர் பதவிக்கு மதிப்பளித்து எடுத்த முடிவுகளாகட்டும், அதனால் தலைமையுடன் ஏற்பட்ட முரண்களை விசிறியடித்து கட்சியை விட்டு வெளியேறியதாகட்டும், பிரதமர் பதவியை துறந்த பின்னும் தனது வாழ்நாளின் இறுதி மூச்சுவரை நோயுடன் போராடிய வேளையிலும் ஏழைகள், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக நடத்திய போராட்டங்களாகட்டும், உடலில் வலிமையிருந்தால் நான் இந்நேரம் ஒரு மாவோ போராளியாக இருந்திருப்பேன் என்று உறுதிபட முழங்கியதாகட்டும். எந்த அரசியல் வரம்புகளுக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் இந்திய அரசியல் எனும் மாபெரும் உப்புகடலில்   கலந்தபின்னரும்  தனித்தன்மையுடன் நன்னீர் நதியாக பல்லாண்டுகாலம் மக்களுக்கான அரசியலை மட்டுமே முன்னெடுத்த மாவீரன் வி.பி.சிங் அவர்கள்.

1989ல் இந்திய அரசியலில் ஒரு மிகப்பெரிய புரட்சி நடத்தப்பட்டது. எந்த பெரிய தேசிய கட்சிகளின் தயவுமின்றி திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்று சேர்ந்து அந்த புரட்சியை நிகழ்த்தினர். மாநில கட்சிகளின் பலம் என்ன என்பதும், அவை ஒன்று சேர்ந்து பணியாற்றினால்  நாட்டில் எப்பேர்பட்ட மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்று தில்லிக்கு தெரியவந்த காலகட்டம் அது.
நிலையற்ற அரசு என்ற விமர்சனங்கள் இருந்தாலும் அத்தனை ஆண்டுகளாக நிலையான அரசுகள் செய்த சாதனைகளை விஞ்சும் வகையில் சாதனை புரிந்த அரசாக வி.பி.சிங் அரசு இருந்தது. வி.பி சிங் அரசை கவிழ்க்க இரண்டு பிரதான கட்சிகளுமே மறைமுக கூட்டணி அமைத்தன என்று சொன்னால் அது மிகையில்லை. 

“என்னை நீங்கள் தோற்கடிக்கலாம்; ஆனால் நான் இந்த நாட்டுக்கு செய்யவேண்டியதை எப்போதோ செய்து முடித்துவிட்டேன்” என்று பிரதமராக தனது இறுதி பாராளுமன்ற  உரையில் குறிப்பிட்டார் வி.பி.சிங். தான் எப்போது அவுட் ஆவோம் என்று தெரியாமல் எத்தனை பந்துகள் மிச்சமிருக்கின்றன என்றும் தெரியாமல் அடித்து ஆடிய வி.பி.சிங் அடித்த சில சிக்சர்கள் கீழே:

1.இந்திய அரசியலமைப்பின் தந்தையாக இருந்தாலும் எந்த அரசு மரியாதையும் வழங்கப்படாமல் இருந்த பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கருக்கு "பாரத ரத்னா" பட்டம் வி.பி.சிங் ஆட்சியிலேயே வழங்கப்பட்டது.

 2.நாடாளுமன்றத்தில் அம்பேத்கரின் படத்தை இடம் பெற வைத்த பெருமையும் வி.பி.சிங்கையே சேரும். 

3.ராஜிவ்காந்தி பிரதமராக இருந்த போது இலங்கைக்கு சென்றிருந்த இந்திய ராணுவத்தை திரும்ப பெற்றவர் வி.பி.சிங்.

4.1990 மே மாதம் சென்னை வந்திருந்த வி.பி.சிங்கிடம் செய்தியாளர்கள் விடுதலை புலிகளை தீவிரவாத இயக்கம் என்பதாக ஒரு கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், ”எவரையும் தீவிரவாதி என முத்திரை குத்தும் ரப்பர் ஸ்டாம்ப் எனது பாக்கெட்டில் இல்லை” என பதிலளித்தார்.

5.சங்பரிவார் நடத்திய  ரத யாத்திரையை நிறுத்தி, அதற்கு தலைவராக இருந்த அத்வானியை பிஹார் முதல்வர் லல்லு பிரசாத் மூலம் கைது செய்ய வைத்தார். அந்த கைது அவர் பதவியையே பறிக்கும் என்று தெரிந்தபோதும் அதற்காக அவர் கவலைப்படவில்லை.

6.அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி அவர்கள் வேண்டுகோளை ஏற்று காவிரி நடுவர் மன்றம் அமைத்திட உத்தரவிட்டது. 

7.சென்னை மீனம்பாக்கத்திலுள்ள வெளிநாட்டு விமான தளத்துக்கு அண்ணா பெயரும், உள்நாட்டு விமான தளத்துக்கு காமராஜர் பெயரும் சூட்டவேண்டும் என்று கலைஞர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்ததும், அந்த வேண்டுகோளை ஏற்று அதனை விழா மேடையிலேயே அறிவித்தது.

8.பொற்கோயிலில் போய் இந்திரா காலத்தில் நடந்தவற்றுக்கு மன்னிப்பு கேட்டார். கூடவே, பஞ்சாபில் அமைதி திரும்ப மனதார முன்னெடுப்புகள் எடுத்தார். 

9.வெகுகாலமாக கிடப்பில் கிடந்த மண்டல் கமிஷனின் பரிந்துரையான  பிற்படுத்தபட்டோருக்கு  27% இடஒதுக்கீட்டை தனி மெஜாரிட்டி இல்லாத பொழுதும் தைரியமாக அமல்படுத்தியது.

இப்படி அரசியல்களத்தில் நாட்டின் பிரதமராக எந்த சமரசமுமின்றி துணிச்சலான பல முடிவுகளை எடுத்த விபி சிங் தனது அரசியல் வரலாற்றில்  ஆரம்ப காலந்தொட்டே இத்தகைய அணுமுறை கொண்டவராகவே இருந்திருக்கிறார்.

உத்தரபிரதேசத்தில் தையா என்ற ராஜவம்சத்தைச் சேர்ந்தவர் விஷ்வநாத் பிரதாப் சிங் என்கிற வி.பி.சிங்.டமாண்டா என்கின்ற பகுதியை ஆண்டு வந்த ராஜ குடும்பத்தில், 1931-ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி பிறந்தார். இயற்பியல் படித்துக் கொண்டிருந்த காலத்தில், அவருடைய உச்சகட்ட லட்சியமாக இருந்தது, 'எதிர்காலத்தில் மிகப் பெரிய அணு விஞ்ஞானி ஆக வேண்டும்' என்பதுதான். காலம் அவரை அரசியல்வாதியாக்கியது. 1941-ம் ஆண்டு மாண்டாவின் ராஜ் பகதூராக வி.பி.சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

அரச குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவரது அரசியல் எளியோர்களுக்கானதாகவே இருந்தது. இளம் வயதிலேயே வினோபா பாவேயின் பூமிதான இயக்கத்தில் ஈடுபாடு கொண்டதால், தன்னுடைய விளைநிலங்களை தானமாக அளித்த நிகழ்வு அவர் எப்படிப்பட்ட அரசியல்வாதி என்பதை உலகத்திற்கு உணர்த்துவதாக இருந்தது.

காங்கிரஸ் கட்சியின் மீது தீவிரமான ஈடுபாடு கொண்டிருந்த வி.பி.சிங். 1969-ம் ஆண்டு உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் வென்று எம்எல்ஏ அமைச்சர் என்று அடுத்தடுத்து வளர்ந்து காங்கிரஸ்கட்சியின் மிக முக்கிய ஆளுமையானார்.  1980-ம் ஆண்டு உத்தரபிரதேச மாநில முதல் அமைச்சராக இந்திரா காந்தியால் தேர்வு செய்யப்பட்டார். 

இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் நடந்த தேர்தலில், காங்கிரஸ் கட்சி வென்று ராஜீவ் காந்தி பிரதமரானபோது நிதியமைச்சர் ஆனார் சிங். வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அவர் தயங்கவில்லை. திருபாய் அம்பானி, நடிகர் அமிதாப் பச்சனின் சகோதரர் என எந்த வி.ஐ.பி-யும், வி.பி.சிங்கின் தாக்குதலில் இருந்து தப்ப முடியவில்லை. அமலாக்கப் பிரிவு அதிகாரிகளின் கெடுபிடிகளைத் தாங்கிக் கொள்ள முடியாத பெரும் பணக்காரர்கள், ராஜீவ் காந்தியிடம் முறையிடவே, நிதியமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் வி.பி.சிங்.

ஆனால், அடுத்து வந்த காலங்களில் பாதுகாப்புத் துறைக்கு அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த நேரத்தில் ராணுவத் தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் நடந்திருப்பதாக ஸ்வீடன் வானொலி அறிவித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் ராஜீவ் காந்திக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்க, அமைச்சர் பதவி மற்றும் கட்சிப் பதவியிலிருந்தே நீக்கப்பட்டார் வி.பி.சிங். 

1989-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் இருப்பதற்காக, இடதுசாரிக் கட்சிகள்  மற்றும் திமுக, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் போன்ற மாநில கட்சிகளுடன் இணைந்து மெகா கூட்டணியை உருவாக்கினார். இந்தக் கூட்டணி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, பா.ஜனதா வெளியில் இருந்து ஆதரித்த நிலையில், இந்தியாவின் பத்தாவது பிரதமரானார் வி.பி.சிங். அதிலும், டிசம்பர் 1, 1989 அன்று வி.பி.சிங் நாடாளுமன்றத்தின் அவையில் தேவிலாலை பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார். ஹரியானாவின் ஜாட் தலைவரான தேவிலால்,  பரிந்துரையை ஏற்க மறுத்து வி.பி.சிங்கையே பிரதமர் பதவிக்கு பரிந்துரைத்தார் என்பது கூடுதல் சிறப்பு. பா.ஜ.க ஒருபுறம், இடதுசாரிகள் மறுபுறம் என இருதுருவங்களின் ஆதரவுடன் ஆட்சியை மிகத் திறமையாக நடத்திக் கொண்டிருந்தார்.
அந்த காலகட்டத்தில் அவர் நிகழ்த்திக்காட்டிய சாதனைகளைத்தான் மேலே குறிப்பிட்டிருந்தோம். தனது பதவியை இழந்த பின்னர் மீண்டும் அந்த பதவியில் அமர விரும்பாத வி.பி.சிங், அதே கூட்டணியின் மூலம் 1996-ம் ஆண்டு தேவகௌடாவைவும், பின்னர் ஐ.கே.குஜ்ராலையும்  பிரதமர் பதவியில் அமரத்த முக்கியப் பங்கு வகித்தார். 

ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பின்னர், பல ஆண்டுகள் பொதுவாழ்க்கையிலிருந்து ஒதுங்கியிருந்தவர், 2006-ம் ஆண்டு ஜனமோர்ச்சா கட்சியை மீண்டும் தொடங்கினார்.  2006-ல் உத்தரபிரதேசத்தின் தாத்ரி பகுதியில், விவசாயிகளின் நிலங்களை அனில் அம்பானியின்  ரிலையன்ஸ் நிறுவனம் கைப்பற்றியதைக் கண்டித்து, தீவிரமான போராட்டங்களில் பங்கெடுத்தார். தொடர் போராட்டங்களும் டயாலிசிஸ்களும் அத்துடன் சேர்ந்த புற்றுநோயும் உடலை வாட்ட, 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் காலமானார்.

'பிரதமர் பதவியைவிட முக்கியமானது தேசத்தின் ஒற்றுமை’ என பாராளுமன்றத்தில் முழங்கிய விபிசிங் இந்தியாவின் ஒற்றுமைக்கு மதச்சார்பின்மை எவ்வளவு முக்கியம் என்பதை மட்டுமல்லாமல், பொதுவாழ்க்கையில் ஈடுபடுபவர்கள் எவ்வளவு தூய்மையானவர்களாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக வாழ்ந்தவர்.

இந்திய அரசியலையே புரட்டிப்போட்ட அந்த செம்மல் பதவியில் நீடிக்கமுடியாமல் போனது இந்தியாவின் துரதிருஷ்டம் என்றால் அது மிகையல்ல. 


தொகுப்பு: கதிர் ஆர்எஸ்
தொடர்புக்கு: rasukumar@gmail.com

இக்கட்டுரையின் கருத்துக்கள் கட்டுரையாளரையே சாரும், நியூஸ்7 தமிழ் இதற்கு பொறுப்பாகாது.

தற்போதைய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது!

5 hours ago

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் நியூஸ்7 தமிழுக்கு கிடைத்த பிரத்யேக தகவலுக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் விளக்கம்!

6 hours ago

கடந்த 2 ஆண்டுகளாக மத்திய அரசிடம் வறட்சி நிவாரண நிதியை தமிழக அரசு கோரவில்லை - RTI-யில் தகவல்...!

7 hours ago

RAW உளவுப்பிரிவின் தலைவராக சமந்த் கோயல் நியமனம்..!

8 hours ago

"டிடிவி தினகரன் சர்வாதிகாரியாக செயல்படுகிறார்!" - தங்க தமிழ்ச்செல்வன்

11 hours ago

வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வரும் 30ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது : இந்திய வானிலை ஆய்வு மையம்

13 hours ago

நாடு முழுவதும் ஐஎஸ் அமைப்போடு தொடர்புடைய 155 பேர் கைது!

14 hours ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்றது இங்கிலாந்து!

1 day ago

“தங்க தமிழ்ச்செல்வன், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவார்!” - டிடிவி தினகரன்

1 day ago

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.26,464ஆக விற்பனை...!

1 day ago

தேனி மற்றும் மதுரை மாவட்ட அமமுக நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் இன்று ஆலோசனை...!

1 day ago

ஓமலூர் அருகே பள்ளி மாணவர்களை மிரட்டும் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தீவிர முயற்சி!

1 day ago

டெல்லியில் இன்று நடைபெறுகிறது காவிரி மேலாண்மை ஆணையத்தின் 4வது கூட்டம்!

1 day ago

ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் மதன் லால் சைனி ( வயது 75 ) டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்: சைனியின் மறைவு பாஜக குடும்பத்திற்கு பேரிழப்பு - பிரதமர் மோடி இரங்கல்!

1 day ago

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான கர்நாடகாவின் திட்ட அறிக்கையை நிராகரிக்க வேண்டும் ; பிரதமருக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்!

2 days ago

பிரியங்கா காந்தி, ஜோதிராதித்ய சிந்தியா பரிந்துரையின் அடிப்படையில் உ.பி காங்கிரசின் அனைத்து மாவட்ட கமிட்டிகளும் கலைக்கப்பட்டது!

2 days ago

தமிழக சட்டபேரவை சபாநாயகர் எதிராக திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வரும் ஜூலை 1 ஆம் தேதி விவாதம்...!

2 days ago

சபாநாயகர் மீது திமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஜூலை 1ம் தேதி விவாதம்...!

2 days ago

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 28 முதல் ஜூலை 31 வரை நடைபெறும்...!

2 days ago

பா.ரஞ்சித் மீதான வழக்கில் ஆதாரங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உயர்நீதிமன்றக் மதுரை கிளை உத்தரவு...!

2 days ago

"குடிநீர் பஞ்சத்தை போக்காமல் எடுபிடி ஆட்சியாக எடப்பாடி ஆட்சி இருக்கிறது!"- மு.க.ஸ்டாலின்

2 days ago

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி திமுகவினர் போராட்டம்...!

2 days ago

இந்தோனேஷியாவின் தனிம்பார் தீவுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவு கோலில் 7.2 ஆக பதிவு!

2 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: 49 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வெற்றி

2 days ago

ஜப்பானை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை வென்றது இந்திய அணி.

2 days ago

குடிநீர் பிரச்னையை திசை திருப்புவதற்காகவே யாகம் நடத்தினர் - கனிமொழி

2 days ago

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, அணிதிரண்ட எதிர்க்கட்சிகள்.

2 days ago

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று கூடுகிறது.

2 days ago

“தண்ணீர் பஞ்சத்தை மறைக்க நடிகர் சங்க தேர்தலை பயன்படுத்திக்கொள்கின்றனர்!” - மன்சூர் அலிகான்

3 days ago

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகர் விஜய்!

3 days ago

ஜம்மு காஷ்மீரின் சோபியானில் பாதுகாப்பு படையினரால் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

3 days ago

சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடக்கம்!

3 days ago

நடிகர் சங்கத்தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என ரஜினிகாந்த் வேதனை!

3 days ago

அல்வா கிண்டி பட்ஜெட் அச்சடிப்பு பணிகளை தொடங்கி வைத்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!

3 days ago

திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமாகவே இருப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விளக்கம்!

3 days ago

மத்திய அரசின் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு ஊழியர்களுக்கு ஜூன் மாத ஊதியம் தள்ளிப்போக வாய்ப்பு!

3 days ago

ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் அரைசதம் அடித்தார் கேப்டன் விராட் கோலி!

4 days ago

இயக்குநர் பா.ரஞ்சித்தை கைது செய்வதற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை மறுப்பு!

4 days ago

அரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்சனை குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளிக்க மறுப்பு!

4 days ago

பாடத் திட்டத்தில் இந்துத்துவ கொள்கைகளை திணிக்க மத்திய அரசு முயற்சிப்பதாக வேல்முருகன் குற்றச்சாட்டு!

4 days ago

தமிழகத்தில் மதவாதம் தலைதூக்க ஒருபோதும் விடமாட்டோம்: டிடிவி தினகரன்

4 days ago

தமிழக அரசைக் கண்டித்து திமுக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம்!

4 days ago

செல்வாக்கு மிகுந்த நபர் மோடி: பிரிட்டிஷ் ஹெரால்டு இதழ் நடத்திய கருத்துக்கணிப்பில் முடிவு

4 days ago

பிகில் திரைப்படத்தில் 2 வேடங்களில் நடிக்கும் விஜய்!

4 days ago

நடிகர் சங்கத்திற்கு திட்டமிட்டபடி நாளை தேர்தல் நடத்த உயர் நீதிமன்றம் அனுமதி!

4 days ago

மழை வேண்டி கோயில்களில் யாகம் நடத்த அதிமுகவினருக்கு OPS - EPS உத்தரவு!

4 days ago

இலங்கை குண்டுவெடிப்பு விவகாரம்: கன்னியாகுமரியைச் சேர்ந்த இளைஞரிடம் என்ஐஏ தீவிர விசாரணை!

4 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட் : இங்கிலாந்து அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி...!

4 days ago

மழை வேண்டி நாளை கோயில்களில் யாகம் நடத்த முதல்வர் பழனிசாமி உத்தரவு!

5 days ago

பிகில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் படத் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது

5 days ago

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லேசான, மிதமான மழை பெய்யும்: வானிலை மையம்

5 days ago

எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கிடையே, நாடாளுமன்ற மக்களவையில் முத்தலாக் தடுப்பு மசோதா தாக்கல்...!

5 days ago

வங்கிக் கடன் பாக்கி: விஜயகாந்தின் வீடு, கல்லூரியை ஏலம் விட நடவடிக்கை!

5 days ago

4 எம்.பி.க்கள் பாஜகவில் இணைந்ததற்கு சந்திரபாபு நாயுடு ட்விட்டரில் பதிலடி!

5 days ago

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றிய போது, காவிரியில் தண்ணீர் திறந்து விடக் கோரி, தமிழக எம்பிக்கள் கோஷம்!

5 days ago

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகும் முடிவில் பிடிவாதமாக இருக்கும் ராகுல்காந்தி!

5 days ago

டெல்லியில் இன்று மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம்!

5 days ago

ராஞ்சியில் யோகா தின நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடி!

5 days ago

வறட்சியால் தவிக்கும் சென்னைவாசிகளுக்கு 20 லட்சம் லிட்டர் குடிநீர் தர முன்வந்த கேரளா அரசு!

5 days ago

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணியை வீழ்த்தியது ஆஸ்திரேலிய அணி!

5 days ago

சென்னை அடுத்த பல்லாவரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை!

6 days ago

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் தமிழக சட்டப்பேரவை வரும் 28ம் தேதி கூடுகிறது..!

6 days ago

பல்வேறு துறைகளை சேர்ந்தவர்கள் எம்.பிக்களாக மக்களவையை அலங்கரிக்க உள்ளனர்: குடியரசுத் தலைவர்

6 days ago

நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரை...!

6 days ago

உடல்நலக்குறைவு காரணமாக முதல்வர் பழனிசாமி அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

6 days ago

சபரிமலைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த தனிச்சட்டம்!

6 days ago

வடக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தாழ்வு நிலை!

6 days ago

உலகக்கோப்பை கிரிக்கெட்: புள்ளி பட்டியலில் நியூசிலாந்து அணி 9 புள்ளிகளுடன் முதலிடம்!

6 days ago

சென்னையில் BUS DAY கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக 24 மாணவர்கள் கைது!

6 days ago

ஒரே தேசம்...ஒரே தேர்தல் தொடர்பான அனைத்துக்கட்சிக் கூட்டத்தை காங்கிரஸ், திமுக புறக்கணிப்பு!

6 days ago

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தர வரிசை பட்டியல் இன்று வெளியாகிறது!

6 days ago

நாடாளுமன்ற இரு அவைகளிலும் இன்று உரை நிகழ்த்துகிறார் குடியரசுத் தலைவர்!

6 days ago

ஒரே நாடு, ஒரே தேர்தல் தொடர்பாக விவாதிக்க குழு அமைக்கப்படும்: ராஜ்நாத் சிங்

6 days ago

காயம் காரணமாக உலகக் கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகல்....

1 week ago

5 ஆம் கட்ட கீழடி அகழாய்வுப் பணியில் ஏராளமான ஓடுகள் மற்றும் மண்பானைகள் கண்டெடுப்பு!

1 week ago

"நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு அரசுதான் காரணம்!” - பூச்சி முருகன்

1 week ago

நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு சங்களுக்கான மாவட்ட பதிவாளர் உத்தரவு; நீக்கப்பட்ட உறுப்பினர்கள் விவகாரம், நிலுவையில் உள்ளதால் நடவடிக்கை..!

1 week ago

நடிகர் சங்க தேர்தல் விவகாரம்: தமிழக ஆளுநருடன் நடிகர் விஷால் சந்திப்பு!

1 week ago

மக்களவை சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு!

1 week ago

திமுக பொருளாளர் துரைமுருகன் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி!

1 week ago

தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!

1 week ago

ஒரே தேசம், ஒரே தேர்தலை அமல்படுத்த அனைத்து கட்சிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை!

1 week ago

தமிழக எம்பிக்கள் பதவியேற்பின் போது மக்களவையில் ஒலித்த தமிழ் வாழ்க கோஷம்!

1 week ago

நடிகர் சங்க தேர்தலை எம்ஜிஆர் - ஜானகி கல்லூரியில் நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்

1 week ago

தமிழகத்தின் 15 ஆவது மாநகராட்சிக்கு ஆவடியை அறிவித்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு....!

1 week ago

நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் இன்று பதவியேற்பு!

1 week ago

செயற்கை மழை பெய்விப்பதற்கான பணிகளை அரசு மேற்கொள்ளும் : அமைச்சர் பாண்டியராஜன்

1 week ago

சென்னையில் தடையை மீறி பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 24 கல்லூரி மாணவர்கள் கைது!

1 week ago

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பங்களாதேஷ் அணி அபார வெற்றி!

1 week ago

நடிகர் சங்கத்தில் புகுந்த பெருச்சாளி விஷால் என இயக்குனர் பாரதிராஜா விமர்சனம்!

1 week ago

எதிர்க்கட்சிகள் குறைந்த அளவில் இருந்தாலும் அவர்கள் மரியாதையுடன் நடத்தப்படுவார்கள்: பிரதமர்

1 week ago

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேச அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

1 week ago

17வது நாடாளுமன்ற முதல் கூட்டத் தொடர் தொடங்கியது!

1 week ago

நிஃபா அறிகுறியுடன் ஜிப்மர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்ட கடலூர் முதியவர் உயிரிழப்பு!

1 week ago

ராஜுவ் கொலை வழக்கில் 7 பேரை நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே விடுதலை செய்ய வேண்டும்: கே.எஸ். அழகிரி

1 week ago

இலங்கை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கோவையைத் தொடர்ந்து மதுரையிலும் என்.ஐ.ஏ அதிகாரிகள் விசாரணை!

1 week ago

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களைப் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் நடைமுறை இன்று முதல் தமிழகத்தில் அமல்!

1 week ago

உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு 50 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்படும்: செல்லூர் ராஜூ

1 week ago

குடிநீர் பிரச்னையை போக்க, புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்க மத்திய அரசுக்கு எடப்பாடி பழனிசாமி கோரிக்கை.

1 week ago

2024ஆம் ஆண்டிற்குள் நாட்டின் பொருளாதாரத்தை 5 டிரில்லியன் டாலராக உயர்த்த இலக்கு; மாநில அரசுகள் இணைந்து செயல்பட பிரதமர் மோடி அழைப்பு

1 week ago
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    73.29/Ltr (0.10 )
  • டீசல்
    68.14/Ltr ( 0.07 )
Image பிரபலமானவை