Skip to main content

இந்தியாவுக்கு எதிரான 5வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி!

March 13, 2019 17 views Posted By : nirubanAuthors
Image

டெல்லியில் நடைபெற்ற 5வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 35 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை, ஆஸ்திரேலியா அணி வீழ்த்தி, தொடரை கைப்பற்றியது.


இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து தொடக்க வீரராக களம் இறங்கிய உஸ்மான் கவாஜா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.இந்த தொடரில் நன்றாக விளையாடிய அவர், இப்போட்டியில் 102 பந்துகளில் சதம் அடித்து, பின்னர் ஆட்டமிழந்தார். இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 9விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை குவித்தது.


இதனையடுத்து இந்திய அணி 273 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. தொடக்க வீரர் தவான் 12 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஜோடி சேர்ந்த கேதர் ஜாதவ், புவனேஸ்குமார் இணை பொறுப்பாக விளையாடியதால், இந்திய அணி  கவுரவமான ஸ்கோரை எட்டியது. இறுதியில் இந்திய அணி 50 ஓவரின் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 237 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதனால், இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.  5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 3க்கு 2 என்ற கணக்கில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா அணி, தொடரையும் கைப்பற்றியது. 
 

Categories: Sports
Image
தற்போதைய செய்திகள்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் பயிற்சி ஆட்டத்திலேயே இந்திய அணி தோல்வி.

13 hours ago

ஆந்திர ஆளுநர் நரசிம்மனை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார் ஜெகன்மோகன் ரெட்டி.

13 hours ago

மத்தியில் ஆட்சியமைக்க நரேந்திர மோடிக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைப்பு.

13 hours ago

குடியரசுத் தலைவரிடம் ஆட்சியமைக்க உரிமை கோரினார் நரேந்திர மோடி!

1 day ago

மக்களவைத் திமுக குழு தலைவராக டி.ஆர்.பாலு தேர்வு

1 day ago

செஞ்சி அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கொலை செய்த மனைவி.