முகப்பு > தொழில்நுட்பம்

​2016ன் பிரபலமான டாப் 5 ஸ்மார்ட் போன்கள்..!

December 15, 2016

​2016ன் பிரபலமான டாப் 5 ஸ்மார்ட் போன்கள்..!


2016ஆம் ஆண்டு உலகெங்கிலும் இணையத்தில் தேடப்பட்ட டாப்-5 ஸ்மார்ட் போன்களை கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்றைய நவநாகரிக காலகட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரருக்கும் 3வது கையாக மாறியுள்ளது மொபைல் போன்கள் என்றால் மிகையாகாது, அதிலும் குறிப்பாக ஸ்மார்ட் போன்களில் பொழுதைக் கழிப்பதை பலரும் விரும்புகின்றனர்.

கூகுள் நிறுவனம், 2016ஆம் ஆண்டு தன் தேடுபொறியில் (Search Engine) உலகம் முழுவதிலும் தேடப்பட்டு பிரபலமாக விளாங்கும் டாப்-5 ஸ்மார்ட் போன்கள் எவை என்பதனை அறிவித்துள்ளது.

2016-ன் டாப்-5 ஸ்மார்ட் போன்கள்:

1. ஐ-போன் 7:

உலகம் முழுவதும் அனைவராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 7 மற்றும் 7 ப்ளஸ் சில மாதங்களுக்கு முன் அறிமுகமானது.டிஸ்ப்ளே, ஸ்டோரேஜ், பாதுகாப்பு அம்சங்கள், சென்சார்கள், பேட்டரி, கேமரா போன்ற பல்வேறு புதிய அம்சங்களுடன் வெளியான ஐ-போன்-7 2016ன் உலகில் அதிகம்பேரால் கூகுளில் தேடப்பட்ட ஸ்மார்ட் போன்களின் வரிசையில் முதல் இடம் பிடித்துள்ளது.

2. Freedom 251:

வெறும் $4-க்கு உலகிலேயே மலிவு விலை ஸ்மார்ட்போன் என விளம்பரப்படுத்தியபோது வெளிநாடுகளில் இருந்தவர்கள் ஆச்சரியத்தில் விக்கித்துப்போயினர். ரிங்கிங் பெல்ஸ் என்ற இந்திய நிறுவனத்தால் 251 ரூபாய்க்கு ஸ்மார்ட் போன் என்ற அறிவிப்பு வெளியானது, மேலும் மொபைலுக்கான புக்கிங் நடைபெற்ற போது அந்நிறுவனத்தின் வளைத்தளமே முடங்கிப் போனது.

கடைசி வரையிலும், அந்நிறுவனம் சொன்னபடி இந்த போன்கள் வெளிவரவே இல்லை என்ற போதும், பிரீடம்-251 கூகுள் லிஸ்டில் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

3. ஐ-போன் SE:

கடந்த மார்ச் மாதம் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய ஐபோன் எஸ்.இ. என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டது. அமெரிக்காவில் இந்த போனின் விலை 399 டாலர்கள். இது இந்திய மதிப்பில் ரூ.39,000 ஆகும். ஐபோன் எஸ்.இ. போனானது ஐபோன் 6எஸ் போனை முன்மாதிரியாக கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது

4. ஐ-போன் 6S:

ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களை உலகமெங்கும் போட்டி போட்டுக்கொண்டு வாங்குகிறார்கள். ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களைவிட ஆப்பிளின் ஐபோன் அந்தஸ்தின் அடையாளம். இவை அமெரிக்காவில் செப்டம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டன. 

5. Google Pixel:கூகுள் நிறுவனம் HTC நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்த முதல் ஸ்மார்ட் போன் கூகுள் பிக்சல், இது ஆண்ட்ராய்ட் இயங்குதளம் கொண்டது. 5 இன்ச் கொரில்லா கண்ணாடி பாதுகாப்பு கொண்ட HD டிஸ்பிளே, மிக வலிமையான பேட்டரி (3450mAh), 4ஜிபி RAM, 64 பிட் ஸ்னாப் ட்ரேகன் பிராசசர், 12.3 எம்.பி பின்பக்க கேமரா, 8 எம்.பி முன்பக்க கேமரா, Finger print scanner என பல சிறம்பங்சங்களுடன் வெளியான இந்த போன் உலகம் முழுதும் பலரால் தேடப்பட்ட ஸ்மார்ட் போன் வரிசையில் 5வதாக இடம்பிடித்துள்ளது.

Categories : தொழில்நுட்பம் : தொழில்நுட்பம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்