முகப்பு > உலகம்

ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹசிமி ரப்சஞ்சானி காலமானார்!

January 09, 2017

ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹசிமி ரப்சஞ்சானி காலமானார்!


ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹசிமி ரப்சஞ்சானி தனது 82-ஆவது வயதில் மாரடைப்பால் காலமானார்.

ஈரான் நாட்டின் முன்னாள் அதிபர் அக்பர் ஹசிமி ரப்சஞ்சானி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது எண்பத்திரண்டு. ஈரான் நாட்டின் அதிபராக 1989ஆம் ஆண்டு முதல் 1997ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தவர் அக்பர் ஹசிமி ரப்சஞ்சானி. 

சிறந்த சீர்திருத்தவாதியும் முற்போக்குவாதியுமான இவரது ஆட்சியில் ஈரான் பல துறைகளிலும் நல்ல வளர்ச்சி கண்டது. 82 வயதான ரப்சஞ்சானி தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். 

தலைநகர் டெகரானில் அவரது இல்லத்தில் அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். ரப்சஞ்சானியின் மறைவு சீர்திருத்தவாதிகளுக்கு ஒரு பேரிழப்பு எனக் கூறப்படுகிறது.

அதிபர் அக்பர் ஹசிமி ரப்சஞ்சானி இறப்பை தொடர்ந்து மருத்துவமனை வாசலில் கூடிய அவரது ஆதரவாளர்கள் கண்ணீர் வெள்ளத்தில் மூழ்கினர். 

அக்பர் ஹசிமி ரப்சஞ்சானி மறைவுக்கு பல்வேறு வ்தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, அக்பரின் மறைவுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஈரான் அரசு நாடு முழுவதும் 3 நாள் விடுமுறை அளித்து துக்கம் அனுசரிக்கிறது. பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளன. 

அக்பர் ஹசிமி ரப்சஞ்சானியின் இறுதிச்சடங்குகள் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அக்பர் ஹசிமி ரப்சானி மறைவால் ஈரான் சோகத்தில் மூழ்கியுள்ளது. 

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்