இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​சொந்தமாக மலை வாங்க விருப்பமா? லாஸ் ஏஞ்சல்ஸுக்கு மிக அருகாமையில்...

July 31, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
2602 Views

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை உச்சியில் உள்ள 157 ஏக்கர் நிலப்பரப்பு ஒன்று விற்பனைக்கு வருகிறது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகானத்தில் உள்ளது Beverly Hills, los Angeles மற்றும் மேற்கு ஹாலிவுட் நகரங்களை ஒட்டி அமைந்திருக்கும் இந்த மலைப்பகுதியில் என்னற்ற சொகுசு விடுதிகள், முக்கிய பிரபலங்களின் பன்னை வீடுகள், முக்கிய நிறுவனங்களின் தலைமையிடங்கள் போன்றவை அமைந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் இருந்து los Angeles மற்றும் மேற்கு ஹாலிவுட் ஆகிய நகரங்களின் வானுயர்ந்த கட்டடங்கள் உள்ளிட்ட நகரின் அழகை பார்ப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும். பல ஹாலிவுட் படங்களில் இந்த Beverly Hills பகுதியினை நாம் பார்த்து இருக்கலாம்.

மிகவும் பிரசித்தி பெற்ற Beverly Hills பகுதியின் மலை உச்சி ஒன்றில் மிகவும் பிரம்மாண்ட வகையில் அமைந்துள்ள 157 ஏக்கர் நிலப்பகுதி விற்பனைக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் விலை குறைந்தபட்சம் 1 பில்லியன் டாலர்கள் ( இந்திய மதிப்பில் சுமார் 6,800 கோடி ரூபாய்) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

'The Mountain' என்ற பெயரிலான இந்த பிரம்மாண்ட நிலப்பகுதி அங்குள்ள மலைத் தொடரின் உச்சியில் அமைந்துள்ளது. உலகிலேயே இந்த அளவிற்கு விலை மதிப்பு கொண்ட வசிப்பிட நிலப்பகுதி ஒன்று விலைக்கு வருவது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.

Beverly Hills பகுதியின் அதிக உயரத்தில் இருக்கும் 'The Mountain'  அப்பகுதியின் மகுடம் என போற்றப்படுகிறது. இந்த நிலத்தின் அருகாமையில் வசிப்போரை சந்திக்க அரை மைல் தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும்.

இங்கிருந்து San Gabriel Mountains முதல் Malibu வரையிலும், பசிபிக் பெருங்கடலையும், Los Angeles நகரின் மொத்த அளவையும் காண இயலும்.

1970ஆம் ஆண்டு அப்போதைய ஈரான் அரசரின் (shah of Iran) சகோதரியான Shams Pahlavi இந்த 157 ஏக்கர் பரப்பளவிலான 'The Mountain'-ன் சொந்தக்காரராக விளங்கினார். பின்னர் இது தொலைக்காட்சி பிரபலமான Merv Griffin கைகளுக்கு மாறியது, பொருளாதார சூழல் காரணமாக விற்பனை செய்யப்பட்டதால் Herbalife நிறுவனர் Mark Hughes கைகளுக்கு 1997ல் சென்றது.

2000வது ஆண்டில் Mark Hughes திடீர் மரணம் அடைந்ததையடுத்து, இந்த சொத்தானது தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு சென்றது, Tower Park Properties நிறுவனத்திற்கு அந்த தொண்டு நிறுவனம் இந்த நிலப்பகுதியை விற்பனை  செய்தது.

இதன் பின்னர் நிலத்தை விற்பனை செய்த தொண்டு நிறுவனத்திற்கும், Tower Park Properties நிறுவனத்திற்கும் இடையே குறிப்பிட்ட நிலம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றதால், 'The Mountain' நிலமானது Secured Capital Partners என்ற வேறு ஒரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த பிரம்மாண்ட நிலப்பகுதி விற்பனை தொடர்பாக  Secured Capital Partners நிறுவனத்தின் மூத்த அதிகாரியான Aaron Kirman கூறும்போது, உலகெங்கும் 2,800 மாபெரும் கோடீஸ்வரர்கள் இருப்பதாகவும், அதில் 100 பேர் வரை இந்த சொத்தை வாங்குவதற்காக போட்டியிடலாம் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Oct 22
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )