இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

விலை உயர்ந்த கார்கள் புல்டோசர் மூலம் அழிப்பு !

July 31, 2018 எழுதியவர் : priyadharshini எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4237 Views

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விலை உயர்ந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் புல்டோசர்கள் மூலம் அழிக்கப்பட்டன. 

பிலிப்பைன்சில் அதிபர் ரொட்ரிகோ டுட்டேர்ட் தலைமையிலான அரசு, ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள், அதிபர் முன்னிலையில் புல்டோசர்கள் மூலம் அழிக்கப்பட்டன. 

லம்போர்கினி, போர்ஷே, மெர்சிடிஸ் பென்ஸ் போன்ற விலை உயர்ந்த சொகுசு கார்களும், ஹார்லே டேவிட்சன் , பி.எம்.டபிள்யூ போன்ற பல மோட்டார் சைக்கில்களும் இதில் அடங்கும். இதன் மதிப்பு 5.5 மில்லியன் டாலர்கள் இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கை குறித்து பேசிய பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ, சட்டவிரோதமாக நடக்கும் எந்த செயலுக்கும் தான் ஆதரிப்பதில்லை  என்று கூறினார்.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )