முகப்பு > உலகம்

Message மூலம் இரக்கமற்ற முறையில் காதலனை தற்கொலைக்கு தூண்டிய இளம்பெண்!

June 19, 2017

Message மூலம் இரக்கமற்ற முறையில் காதலனை தற்கொலைக்கு தூண்டிய இளம்பெண்!


அமெரிக்காவின் மாசஸூசெட்ஸ்-இல் 2014 ஜூலை 12ம் தேதி 18 வயது இளைஞர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் அவரது பெண் தோழி குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கான்ராட் ராய்-3 என்ற 18 வயது இளைஞரை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது பெண் தோழி 20 வயதான மிச்செல் கார்டெர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இவ்வழக்கில் கடந்த வெள்ளியன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இருவர் இடையேயான பிரச்சனையில் தனது காரில் நச்சு வாயுவான கார்பன் மோனாக்சைடை நிரப்பி தற்கொலைக்கு முயல்வதை ராய், கார்டருக்கு தெரிவித்துள்ளார். விஷவாயு மூச்சை முட்டும் நிலையில் காரில் இருந்து வெளியேற ராய் முயன்றுள்ளார். இந்நிலையில், 10-க்கும் மேற்பட்ட Message-களை அனுப்பிய கார்டர், கார்பன் மோனாக்சைடு நிரம்பிய கார் உள்ளேயே மீண்டும் செல்லுமாறு இரக்கமற்ற முறையில் அறிவுறுத்தியதன் மூலம், ராயை தற்கொலைக்கு தூண்டியுள்ளார்.

நச்சு வாயு நிரம்பிய காரில் ராய் இருப்பது உறுதியானதும் அது குறித்து போலீசாருக்கு கார்டர் தகவல் அளித்திருந்த வேண்டும் என்று தனது தீர்ப்பில் தெரிவித்த நீதிபதி லாரன்ஸ் மொனிஸ், இரக்கமற்ற முறையில், மிகவும் கொடுரமான வகையில் மீண்டும் விஷவாயு நிரம்பிய காரினுள் செல்லுமாறு கார்டர் அறிவுறுத்தியதை விமர்சித்துள்ளார்.

இளைஞரை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் கார்டர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுவதாக நீதிபதி மொனிஸ் குறிப்பிட்டதும், மிச்செல் கார்டர் நீதிமன்றத்திலேயே தேம்பி தேம்பி அழுதார். 

குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கார்டருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நீதித்துறை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கார்டருக்கான தண்டனை வரும் ஆகஸ்ட் 3ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்