முகப்பு > உலகம்

ஆண், பெண் என பாலின பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக வழிபடுவதற்கான மசூதி!

June 19, 2017

ஆண், பெண் என பாலின பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக வழிபடுவதற்கான மசூதி!


ஆண், பெண் பாகுபாடுமின்றி அனைவரும் சமமாக வழிபடுவதற்கான மசூதி ஒன்று ஜெர்மனியின் பெர்லின் நகரில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

40 லட்சத்திற்கும் மேலான இஸ்லாமியர்கள் வாழும் ஜெர்மனியில் இந்த மசூதிக்கு வரும் பெண்கள் முக்காடு அணிந்து வர அவசியமில்லை என்றும், இமாம்கள் போல் பெண்களும் போதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மதத்தின் பேரால் உலகெங்கும் வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், சமத்துவத்தை விரும்பும் இஸ்லாமியர்களின் முகங்கள் தெரிய வேண்டும் என்று இந்த மசூதியை திறப்பதற்காக 8 ஆண்டுகளுக்கு மேல் போராடி வந்த செய்ரன் ஏட்ஸ் என்ற வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்