முகப்பு > உலகம்

புகைப்பட மோகத்தால் பற்றி எரிந்த மணப்பெண்!

May 19, 2017

புகைப்பட மோகத்தால் பற்றி எரிந்த மணப்பெண்!


சீனாவை சேர்ந்த மணப்பெண் ஒருவர் வித்தியாசமாக புகைக்கபடம் எடுக்க விரும்பி தன்னுடைய உடையை போட்டோகிராபரின் உதவியுடன் தீயால் பற்றவைத்துக்கொண்ட வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.

திருமணம் என்பது அனைவரின் வாழ்விலுமே ஒரு முக்கிய நாள். இந்நாளை மறக்கமுடியாத மகிழ்ச்சியான நினைவு சின்னமாக மாற்றுபவை திருமணத்தின்போது எடுக்கப்படும் புகைப்படங்களே. தொழில்நுட்பம் வளர்ந்துவிட்ட இக்காலத்தில் பல்வேறு சாகச செயல்களையும் செய்து வித்தியமாசன புகைப்படம் எடுக்கவே பலர் விரும்புகின்றனர். இவ்வாறு வித்தியாசமாக புகைப்படம் எடுக்க விரும்பிய சீனாவை சேர்ந்த மணப்பெண் ஒருவர் தன்னுடைய உடையில் போட்டோகிராபரைக் கொண்டு தீயை பற்ற வைத்துவிட்டு புகைப்படம் எடுக்க விரும்பியுள்ளார்.

இதையடுத்து, மணப்பெண்னின் கவுனில் தீ பற்றவைக்கப்பட்டுள்ளது.ஆனால் போட்டோ எடுப்பதற்குள் தீ மள மளவென பரவி, மணப்பெண்ணின் உடை முழுவதும் பற்றி எரியத்தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக போட்டோ எடுப்பதை நிறுத்திவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 

இச்செயலால் மணப்பெண்ணின் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் லேசான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இறுதியாக மணப்பெண் விரும்பியவாரே அது மறக்கமுடியாத ஒரு நாளாக அமைந்துவிட்டது. ஆனால் கணம் தப்பியிருந்தாலும், அப்பெண் தன்னுடைய உயிரையே அதற்கு விலையாக கொடுக்க நேரிட்டிருக்கும் என்பதுதான் இதில் சோகம்.

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்