இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Jallikattu Game

காதலுக்காக அரச வாழ்க்கையை துறக்கும் ஜப்பான் இளவரசி!

May 19, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
5213 Views

தன்னுடைய காதலனின் கரம் பிடிப்பதற்காக இளவரசி பட்டத்தை தூக்கியெறியவுள்ளார் ஜப்பான் இளவரசி மாகோ.

ஜப்பான் மன்னர் அகிஹிட்டோவின் பேத்தியும், இளவரசியுமான மாகோ, டோக்கியோவில் உள்ள சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழத்தில் படித்து பட்டம் பெற்றவர். 25 வயதான இளவரசி மாகோ கல்லூரியில் படிக்கும்போதே உடன் படிக்கும் ‘கெய் குமுரோ’ என்பவரிடம் காதல் வயப்பட்டார். முன்னாள் டூரிஸ்ட் கெயிடான இவரை 5 வருடங்களுக்கு முன்பு தனியார் விடுதியில் நடைபெற்ற  பார்ட்டி ஒன்றில் சந்தித்துள்ளார் இளவரசி மாகோ. ஒரே கல்லூரியில் படித்து பட்டம்பெற்ற இவர்களின் நட்பு பின்பு காதலாக வளர்ந்துள்ளது.

இந்நிலையில், கெய் குமுரொவை தான் காதலிப்பதாகவும், அவரையே திருமணம் செய்துகொண்டு வாழவிரும்புவதாகவும் தன் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார் இளவரசி மாகோ. அவரின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டிய பெற்றோர்கள், திருமணத்திற்கு பிறகு மாகோ,  தன்னுடைய இளவரசி பட்டத்தை துறக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஏனெனில், ஜப்பான் அரசு குடும்ப விதிமுறைகளின் படி, அரச குடும்பத்தை சார்ந்தவர்கள், அரச குடும்பத்தை சார்ந்த ஒருவரைத்தான் திருமனம் செய்துகொள்ள வேண்டும். இதற்கு மாறாக திருமணம் செய்துகொண்டால் அவரின் பட்டம் பறிக்கப்படும். 

இதையடுத்து, இளவரிசி பட்டத்தைக்காட்டிலும் தன்னுடைய காதலனுடன் சேர்ந்த வாழ்வதே முக்கியம் என கருதிய மாகோ, விரைவில் தன்னுடைய காதலனை மணமுடிக்கப்போவதாகவும், இதற்காக தன்னுடைய இளவரசி பட்டத்தை துறக்க தயாராக இருப்பதாகவும் அறிவித்துள்ளார்.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

நிலவில் 4வதாக கால் பதித்தவர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான

தைராய்டு பிரச்னை குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும்

இரு துருவங்களாக இருக்கும் வடகொரியா - அமெரிக்கா இடையே

ஊழல் புகாரில் சிக்கிய மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிடம்

அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா-மிச்செல் ஒபாமா ஆகியோரின்

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 81.11 /Ltr (₹ 0.16 )
  • டீசல்
    ₹ 72.91 /Ltr (₹ 0.17 )