இன்றைய வானிலை

  • 31 °C / 88 °F

Popup

Jallikattu Game

ரூ.2,459 கோடி மதிப்பிலான தங்கம் விமானத்தில் இருந்து சிதறிய அதிர்ச்சி சம்பவம்!

March 17, 2018
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
11302 Views

ரஷ்யாவில் ஓடும் விமானத்தில் இருந்து தங்கக்கட்டிகள், பிளாட்டினம், வைரம் உள்ளிட்டவை கீழே விழுந்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அதிகாரிகள் அங்கு சென்று அவற்றை பத்திரமாக எடுத்து வந்தனர். 

ரஷ்யாவின் யாகூட்ஸ்க் நகரில் உள்ள விமான நிலையத்தில் ஓடு தளத்தில் இருந்து ஒரு விமானம் பறக்க தொடங்கியதுமே, திடீரென கதவுகள் திறந்து அதில் இருந்து தங்க கட்டிகள் கீழே விழுந்து சிதறியுள்ளது. எனினும் விமானம் பறந்து சென்று விட்டது. 

பின்னர் உடனடியாக அங்கு வந்த விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தங்கக் கட்டிகளை சேகரித்து அவற்றை விமான நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர். இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

விமானத்தில் இருந்து கீழே விழுந்த தங்கக் கட்டிகளின் மதிப்பு சுமார் 378 மில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.2,459 கோடி என்பது குறிப்பிடப்பட்டுள்ளது. 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

சர்வதேச அளவில் அமைதியை நிலைநாட்டுவதில் இந்தியாவும், ரஷ்யாவும்

வெனிசுலா நாட்டின் அதிபர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.

ஹவாய் தீவில் உள்ள எரிமலையில் இருந்து தீப் பிழம்புகள்

கியூபாவில் பயணிகள் விமானம் விபத்துள்ளானதில் 100-க்கும்

Tamilrathna

Image
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ (லி)
  • டீசல்
    ₹ (லி)