இன்றைய வானிலை

  • 29 °C / 85 °F

Jallikattu Game

கல்வி பயில அமெரிக்காவுக்கு செல்லும் இந்திய மாணவர்களுக்கு சிக்கல்

March 14, 2018 எழுதியவர் : manoj எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3476 Views

அமெரிக்காவின் புதிய குடியேற்றக் கொள்கைகளால் அந்நாட்டிற்கு கல்வி பயில செல்லும் இந்திய மாணவர்களுக்கு அளிக்கப்படும் விசாக்கள் 27 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் கல்வி பயில்வதற்கு இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டிவரும் நிலையில், அந்நாட்டின் குடியேற்றக் கொள்கைகளால் பெரும்பாலான இந்திய மாணவர்களின் அமெரிக்க பயணம் கனவாகிவருகிறது. ஒபாமா அதிபராக இருந்தபோது அமெரிக்காவில் 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த நிதியாண்டில் 65,257 இந்திய மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டது. 

ஆனால் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு கடைப்பிடிக்கும் குடியேற்றக் கொள்கைகளால், கடந்த ஆண்டில் 47,302 இந்திய மாணவர்களுக்கு மட்டுமே விசா வழங்கப்பட்டது. முந்தைய ஆண்டை விட இது 27 சதவீதம் குறைவு. இதே போல, சீனா மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களிலும் 24 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. 

இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் அமெரிக்காவுக்குப் பதிலாக கனடா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் கல்வி பயில அதிகம் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Sep 25
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )