முகப்பு > உலகம்

உலகிலேயே நீளமான கால்களை கொண்ட இளம்பெண்ணுக்கு கின்னஸ் விருது!

September 13, 2017

 உலகிலேயே நீளமான கால்களை கொண்ட இளம்பெண்ணுக்கு கின்னஸ் விருது!


ரஷ்யாவை சேர்ந்த மாடல் அழகி எக்டேரினா லிஷினா உலகிலேயே நீளமான கால்களை கொண்ட இளம்பெண் எனபதற்கான கின்னஸ் விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார். 

29 வயதான எக்டேரினா லிஷினாவின் வலது கால் 132.3 செ.மீ. நீளமும், இடது கால் 132.2 செ.மீ. நீளமும் உடையதாக உள்ளது. கின்னஸ் சாதனைக்காக இரண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் எக்டேரினா லிஷினாவின் கால்களை அளவெடுத்தனர். பின்னர் அவர்கள் சம்ர்பித்த தகவல்களின் அடிப்படையில் எக்டேரினா லிஷினாவுக்கு  உலகிலேயே நீளமான கால்களை கிண்ட இளம்பெண் என்ற கின்னஸ் விருது வழங்கப்பட்டது. 

இது குறித்து எக்டேரினா லிஷினா கூறும்போது, பள்ளி பருவத்தில் உயரமாக இருப்பதற்கு மற்றவர்கள் கிண்டல் செய்ததாக கூறினார். மேலும் இளமை பருவத்தில் காருக்குள் அமரும்போதும், விமானத்தில் பயணம் செய்யும்போதும் பல சிரமங்களை சந்தித்ததாக கூறினார். மேலும் காலணி மற்றும் உடைகளை தேர்வு செய்யும்போதும், அவருக்கேற்ற உடைகளை தேர்வு செய்வதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் தெரிவித்தார். 

ஆனாலும் நீளமான கால்கள் இருப்பதால்தான் 2008ம் ஆண்டு சீனாவில் நடந்த ஒலிம்பிக்கில் கூடைப் பந்து போட்டியில் கலந்துகொண்டு வெண்கல பதக்கம் வெல்ல முடிந்தது என்றும், ஒரு மாடல் அழகியாகவும் பல சாதனைகளை படைக்க முடிந்ததாகவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். 

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்