இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​ஒரு பெண்ணை கண்டுபிடிக்க 246 பெண்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய இளைஞர்!

September 12, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
6967 Views

கனடாவை சேர்ந்த இளைஞர் ஒருவர், அவர் பார்த்த பெண்ணை கண்டுபிடிக்க கல்காரி பல்கலைக்கழகத்தை (University of Calgary ) சேர்ந்த 246 பெண்களுக்கு மின்னஞ்சல் அனுப்பிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

கனடாவை சேர்ந்த மாணவர் ஒருவர், உணவகத்தில் ஒரு பெண்ணை பார்த்து, அவரிடம் செல்போன் எண்ணை கேட்டுள்ளார். அப்பொழுது, அந்த பெண் தவறான எண்ணை கொடுத்துவிட்டார். எனினும் அப்பெண்ணை கண்டுபிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த பெண்ணின் பெயர் கொண்ட 246 பேருக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். 

“நாம் நேற்று உணவகத்தில் சந்தித்தோம்; நீங்கள் எனக்கு தவறான தொலைபேசி எண்ணை கொடுத்துவிட்டீர்கள்” என்று அந்த மின்னஞ்சல் செய்தி தொடங்கியது. ‘நிக்கோல்’ என்ற பெயரில் அந்த பெண்ணின் பெயர் தொடங்குவதால் அதே பெயரில் உள்ள 246 பெண்களுக்கு இதுபோன்ற மின்னஞ்சலை அனுப்பி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் அந்த இளைஞர்.

இறுதியில், அந்த இளைஞர் சந்தித்த பெண்ணிற்கு அவரது நண்பர் மூலம் இந்த செய்தி தெரியவந்தது. அதனையடுத்து அந்த பெண், இவருக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பினார். சில நாட்களுக்கு அடுத்து அந்த பெண் இளைஞரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நண்பர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொள்வதற்கு தற்காலத்து தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது என அந்த இளைஞர் தெரிவித்தார். 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )