இன்றைய வானிலை

  • 31 °C / 87 °F

Popup

Breaking News

Jallikattu Game

49 அகதிகள் கடலில் தள்ளப்பட்டுக் கொலை!

August 11, 2017
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3715 Views

பாதுகாப்பு படையினர் நடமாட்டம் காரணமாக ஆப்பிரிக்காவில் இருந்து ஏமன் வந்த அகதிகளை கடற்கொள்ளையர்கள் கடலில் தள்ளி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிரிக்காவில் உள்ள சோமாலியா, எத்தியோப்பியோ போன்ற நாடுகளில் உள்நாட்டு போர் காரணமாகவும், வறட்சி காரணமாகவும் ஏராளமான மக்கள் வறுமையில் தவிக்கிறார்கள். அவர்கள் அரபு நாடுகள், ஐரோப்பிய நாடுகளுக்கு பிழைப்பு தேடி அகதிகளாக செல்கிறார்கள். சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இவர்கள் செல்வதற்குப் பல தடைகள் இருப்பதால் சட்டவிரோதமாக படகுகளில் ஏறி செல்கின்றனர். இப்படிப்பட்டவர்களை அழைத்து செல்வதற்கு என்றே சில கடத்தல்காரர்கள் படகுகளை இயக்குகிறார்கள். 

இதேபோல, எத்தியோப்பியாவில் இருந்து 120 பேரை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று ஏமன் நாட்டுக்கு வந்தது. அப்போது அந்த பகுதியில் பாதுகாப்பு படையினர் நடமாட்டம் தெரிந்தது. இதனால் தங்களை கைது செய்துவிடுவார்கள் என்று படகை ஓட்டிவந்த கடத்தல்காரர்கள் பயந்தனர். இதில் இருந்து தப்பிக்க படகில் இருந்த அனைவரையும் கடலுக்குள் தள்ளிவிட்டனர். இதில் 49 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் கடலில் தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த பாதுகாப்பு படையினர் 71 பேரை மீட்டனர். இவர்கள் அனைவருமே 17 வயதுக்குட்பட்டவர்கள். அவர்களில் அதிகமான அளவில் பெண்கள் இருந்தனர்.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின்

மார்ச் 24ம் தேதி உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் “உலக காசநோய்

அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டன் உள்ளிட்ட பல்வேறு

கம்யூனிச தத்துவத்தின் மூலவர்களில் ஒருவரும், புரட்சியாளரும்,

சிரியாவின் மீது தாக்குதல் நடத்துவதைக் கண்டித்து, இங்கிலாந்து

தற்போதைய செய்திகள் Mar 24
மேலும் படிக்க...

Tamilrathna

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹ 75.06 (லி)
  • டீசல்
    ₹ 66.64 (லி)