இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

தாய்லாந்தில் சிறுவர்கள் குகைக்குள் சிக்கியது முதல் மீட்கப்பட்டது வரை

July 11, 2018 Posted By : manoj Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
3827 Views

தாய்லாந்து குகையில் கடந்த மாதம் 23-ம் தேதி சிக்கிய சிறுவர்கள் 12 சிறுவர்களும், பயிற்சியாளரும் நீண்ட போராட்டத்திற்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

குகைக்குள் சிக்கியது முதல், மீட்கப்பட்டது வரையிலான நிகழ்வுகள்

ஜூன் 23-ம் தேதி, சிறுவர்கள் 12 பேரும் அவர்களது பயிற்சியாளரும் தாய்லாந்து தாம் லாங் குகைக்குள் சென்றனர். அப்போது தொடர் மழையால் வெள்ளம் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

➤ஜூன் 25-ல் தாய்லாந்து கடற்படை வீரர்கள், சிறுவர்களை தேடும் பணியை தொடங்கினர்.

➤ஜூன் 26-ம் தேதி, குகைக்குள் சென்ற கடற்படை வீரர்களை அதிகளவு வெள்ள நீர் காரணமாக திரும்பி வந்தனர்.

➤இதையடுத்து, ஜூன் 27-ம் தேதி, அமெரிக்க கடற்படையை சேர்ந்த 30 மீட்பு நிபுணர்கள் தாய்லாந்து வந்தனர்.

➤ஜூன் 28-ம் தேதி, குகைக்குள் மழை வெள்ள நீர் வேகமாக பாய்ந்து சென்றதால் மீட்பு பணி தடைபட்டது.

➤இதன் பின்னர் ஜூன் 30-ம் தேதி, மீட்புப்  பணி மீண்டும் தொடங்கப்பட்டது

➤ஜூலை 2-ம் தேதி, சிறுவர்கள் 12 பேரும் அவர்களது பயிற்சியாளரும் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

➤ஜூலை 3-ல் உணவு, ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உதவி குகைக்குள் அனுப்பி வைக்கப்பட்டது

➤ஜூலை 4-ம் தேதி, குகையில் சிக்கிய சிறுவர்களுக்கு நீச்சல் குறித்து எடுத்துரைக்கப்பட்டது

➤ஜூலை 6-ல், சிறுவர்களுக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட பொருட்களை வழங்கிவிட்டு திரும்பி வரும் வழியில் தாய்லாந்து கடற்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார்

➤ஜூலை 8-ம் தேதி, அதிக மழை பொழிவு தொடங்க இருந்த நிலையில், முதலில் 4 சிறுவர்கள் மீட்கப்பட்டனர்

➤ஜூலை 9-ம் தேதி  மேலும் 4 சிறுவர்கள் பத்திரமாக மீட்பு

➤ஜூலை 10-ம் தேதி  பயிற்சியாளர் மற்றும் கடைசியாக இருந்த 4 சிறுவர்கள் என 5 பேர் மீட்கப்பட்டனர்

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )