​தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் பற்றி தெரியுமா? | How an Indian firm's help saved life in Thailand cave rescue mission | News7 Tamil

இன்றைய வானிலை

  • 32 °C / 90 °F

Breaking News

Jallikattu Game

​தாய்லாந்து குகையில் சிக்கிய சிறுவர்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியர்கள் பற்றி தெரியுமா?

July 11, 2018 எழுதியவர் : arun எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
4101 Views

தாய்லாந்து நாட்டின் ஆபத்தான குகைக்குள் 12 சிறுவர்கள் மற்றும் கால்பந்து பயிற்சியாளர் ஒருவர் என மொத்தம் 13 பேர் சிக்கிக்கொண்ட சம்பவம் கடந்த சில நாட்களாக உலக அளவிலான கவனத்தை ஈர்த்து வந்தது. குகைக்குள் அவர்கள் உயிருடன் இருப்பதே சில நாட்களுக்கு பின்னர் தான் வெளி உலகிற்கு தெரியவந்தது. இந்நிலையில் நேற்று அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

மீட்பு நடவடிக்கைகளில் உதவுமாறு தாய்லாந்து நாட்டின் சார்பில் உதவி கோரப்பட்டதால் 13 பேரின் மீட்பு நடவடிக்கைகளில் இரண்டு இந்திய பொறியாளர்கள் ஈடுபட்டது தற்போது தெரியவந்துள்ளது.

இந்திய தூதரகமானது தாய்லாந்து வெளியுறவுத் துறை அதிகாரிகளிடம் குகையில் இருக்கும் நீரை வெளியேற்ற அப்பணியில் நிபுணத்துவம் பெற்ற இந்தியாவில் உள்ள Kirlosker Brothers நிறுவனத்தினரை பயன்படுத்திக்கொள்ளுமாறு அறிவுறுத்தியிருந்தது.

அதனை ஏற்று உதவியளிக்குமாறு தாய்லாந்து நாடு கோரியதையடுத்து, நீர் பம்பு தயாரிப்பு நிறுவனமான புனேவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் Kirlosker Brothers நிறுவனத்தின் இந்தியா, இங்கிலாந்து மற்றும் தாய்லாந்து நாடுகளில் உள்ள பொறியாளர்களை அந்நிறுவனம் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பிவைத்தது. அந்நிறுவனத்தின் சார்பில் அனுப்பப்பட்ட குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொறியாளர்களான குல்கர்னி மற்றும் சுக்லா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். 

20 சதுர கிமீ பரப்பளவு கொண்ட அக்குகை மிகவும் கரடு முரடாக, இருட்டாக இருந்ததால் நீரை வெளியேற்றும் பணி மிகவும் கடினமாக இருந்ததாக மீட்புப் பணியில் ஈடுபட்டு நாடு திரும்பிய பொறியாளர்களில் ஒருவரான குல்கர்னி தெரிவித்தார்.
 

90 டிகிரி கோணத்தில் வளைவு நெளிவுகள் இருந்ததால் மீட்புப் பணி மிகவும் சிரமமாக இருந்ததாகவும், சில நேரங்களில் ஸ்கூபா டைவர்கள் கூட சிரமத்தை சந்தித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

சிறுவர்களை அடைவது மிகவும் கடினமாக இருந்ததாகவும், மிகவும் குறுகலான பாதையாக இருந்ததால் சிறிய ரக மோட்டார்களை தண்ணீரை வெளியேற்றும் பணிக்காக பயன்படுத்தியதாக பொறியாளர் சுக்லா தெரிவித்தார்.

கடந்த 25 ஆண்டுகளாக Kirlosker Brothers நிறுவனத்தின் தயாரிப்பு டிசைன் பிரிவு தலைவராக குல்கர்னி பணியாற்றி வருகிறார், பெருநிறுவன ஆராய்ச்சி மற்றும் பொறியியல் மேம்பாடு பிரிவின் பொது மேலாளராக சுக்லா பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

தாய்லாந்து நாட்டின் குகையில் சிக்கிய 13 பேரை பத்திரமாக மீட்கும் பணியில் இந்திய நிறுவனம் மற்றும் அதில் பணியாற்றிய பொறியாளர்களின் பங்கு அளப்பரியது என்பது குறிப்பிடத்தக்கது. 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Aug 21
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹79.96/Ltr (₹ 0.13 )
  • டீசல்
    ₹72.29 /Ltr (₹ 0.13 )