முகப்பு > உலகம்

அணு ஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு

January 10, 2017

அணு ஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக பாகிஸ்தான் அறிவிப்பு


நீர் மூழ்கி கப்பலில் இருந்து பாயும் அணு ஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதனை செய்துள்ளதாக பாகிஸ்தான்  தெரிவித்துள்ளது.  

நீர் மூழ்கி கப்பலில் இருந்து செலுத்தக்கூடிய முதல் ஏவுகணையான பாபர் - 3, இன்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. வெடி பொருட்களை சுமந்து செல்லும் இந்த ஏவுகணை சுமார் 450 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டதாகும்.

நிர்ணயித்த இலக்கை, பாபர் - 3 ஏவுகணை கடலுக்கு அடியில் இருந்து சரியாக தாக்கி அழித்ததாக பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. இது தங்கள் நாட்டு ராணுவத்தின் மைக்கல்லாக அமைந்துள்ளது என்று பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது. இருப்பினும், சோதனை நடத்தப்பட்ட இடம் துல்லியமாக தெரியவில்லை.


 

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்