முகப்பு > உலகம்

சிரியாவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு!

January 10, 2017

சிரியாவில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு!


சிரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப்படைக்கும் மோதல் நீடித்து வருவதால், டமாஸ்கஸ் நகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 

சிரியா நாட்டில் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படைக்கும் தொடர்ந்து  மோதல் நீடித்து வருகிறது. இதனால் வடமேற்கு டமாஸ்கஸ் நகரில் உள்ள  Wadi Barada பகுதியில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

பெரும்பாலான குடிநீர் சுத்திகரிப்பு மையங்கள் மூடப்பட்டுள்ளதால், குடிநீர் கிடைக்காமல் மக்கள் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். குடிநீர் பாட்டில்களின் விலையும் 50 சதவீதம் உயர்ந்துள்ளது. 

10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குளிக்க முடிவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கிணறுகளில் இருந்து தண்ணீர் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. 

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்