முகப்பு > உலகம்

​அமெரிக்காவிலும் ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப் படைக்கப்போகும் குடும்ப அரசியல்

January 10, 2017

​அமெரிக்காவிலும் ஆட்சி அதிகாரத்தை ஆட்டிப் படைக்கப்போகும் குடும்ப அரசியல்


அமெரிக்க அதிபராக பதவியேற்கவுள்ள டொனால்டு ட்ரம்பின் முதன்மை ஆலோசகராக அவரது மருமகன் நியமிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் இந்த மாதம் பதவியேற்கவுள்ளார். இதனை தொடர்ந்து ட்ரம்ப் அமைச்சரவையில் பங்கேற்கும் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 

இதன் ஒரு கட்டமாக அவரின் மகள் ivankaவின் கணவரும், ட்ரம்பின் மருமகனுமான ஜெராட் குஷ்னர் அதிபரின் மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே தேர்தலின் போது, மருமகனின் ஆலோசனையின் பேரிலேயே ட்ரம்ப் செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டு வந்தது. 

தற்பொழுது குஷ்னர் நியமிக்கப்படுவதன் மூலம் அவரின் ஆதரவாளர்களே அமைச்சரவையில் அதிகம் இடம்பெறுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே ஜார்ஜ் புஷ், கிளிண்டன் ஆகியோர் வரிசையில் அமெரிக்க அரசியலில் குடும்ப அரசியல் ஆதிக்கம் தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்