இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

முதுமையை தவிர்க்க இதோ எளிய வழி!

September 6, 2018 Posted By : priyadharshini Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
16670 Views

முதுமையை தவிர்க்க ஒரு வழி அதுவும் எளிதான வழியாக இருந்தால் எப்படி இருக்கும்? 

அகம் மறைக்க நினைத்தாலும், நம் முகம் மறைக்க விரும்பாதது நம் முதுமையைத்தான். வயதாவதை தடுப்பதற்காகவும், முதுமையை மறைப்பதற்காகவும் காஸ்மெடிக் முதல் கேப்சியூல்ஸ் வரை பல வழிகளை கண்டறிந்திருக்கிறது மனித சமூகம். அந்த வகையில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலத்தை 150 வருடங்களாக நீட்டிக்கும் வழியை கண்டுப்பிடித்திருக்கிறார்கள் ஹார்வர்ட் மற்றும் செள்த் வேல்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள். 

சுவாசிப்பதற்கு நமக்கு உதவியாக இருக்கும் ஒரு மூலக்கூறு தான் நிக்கோட்டினமைடு அடிநைன் டைநியூக்கிலியோட்டைடு. நம் உடலில் நடக்கும் சுவாச செயல்முறைகளில் துணை ஊக்கியாக செயல்பட்டு, நம் உடலுக்கு தேவையான ஆற்றலை உற்பத்தி செய்கிறது NAD. NAD என்று அழைக்கப்படும் இந்த மூலக்கூறுக்களில் சில மாறுதல்களை செய்து ரீப்புரோகிராமிங் செய்தால், இது கொடுக்கும் ஆற்றலை பயன்படுத்தி, உடல் உறுப்புகளை மறு உற்பத்தி செய்யமுடியும் என்று சொல்கிறார் ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் சின்க்லேர். உறுப்புகள் வலுவிழந்து முதுமையடைவதன் வேகத்தை குறைத்து நம் ஆயுட்காலத்தை நீட்டிக்கிறது NAD மாத்திரைகள். இன்னும் ஐந்தே வருடங்களில், மாத்திரை வடிவத்தில் அனைவருக்கும் NAD கிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது. 

எலிகளுக்கு NAD யை கொடுத்து சோதனை செய்து பார்த்ததில், எலிகளின் ஆயுட்காலம் 10 சதவிகிதம் அதிகரித்ததை கண்டு ஆச்சர்யம் அடைந்தார்கள் செளத் வேல்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். அதுமட்டுமின்றி, தானும், தன் தந்தையும் NAD மாத்திரைகளை எடுத்துக்கொண்டுதால் தங்களுடைய முதுமை எந்த அளவிற்கு மெதுவாக நடக்கிறது என்பதையும் பேராசிரியர் சின்க்கிலேர் பதிவு செய்கிறார். NAD சோதனைக்கு மனிதர்களும் உட்படுத்தப்பட்டு. அதில் வெற்றிக்கண்டோமேயானால், இந்த நூற்றாண்டின் அறிவியல் கண்டுப்பிடிப்புகளில் இது வரலாற்று முக்கியத்துவம் பெற்றதாக மாறிவிடும்.

நாம் பிறந்ததிலிருந்து இறப்பதுவரை இந்த பூமியில் நம் இருப்பை தீர்மாணிப்பது நேரம் என்ற ஒரு முதன்மை விஷயம் தான். NAD மாத்திரைகளால் தனிநபருக்கான நேரம் 150 வருடங்களாக நீட்டிக்கப்படும் போது நாம் என்ன செய்யப்போகிறோம் ? இன்னும் சில ஆண்டுகளில் நடக்கவிருக்கும் இந்த விஞ்ஞான ஆச்சர்யம் பல ஆண்டுகளுக்கு முன் நடந்திருந்தால், ஃபாசிசம் முதல் ரேசிசம் வரை அனைத்து வகையான ஜனநாயக சீர்கேடுகளை எதிர்த்து குறல் கொடுத்த சித்தாந்தவாதிகள் இந்த பூமியில் நீடித்து நிலைத்திருப்பார்கள். சித்தாந்தங்கள் காலத்திற்கு அப்பாற்பட்டது என்றாலும், அதை முன்னெடுத்த தலைவர்கள் நேரத்துக்கு இறையானதை தடுத்திருந்திருக்கும் டைம் கேப்சியூலான இந்த NAD.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )