இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Jallikattu Game

​டிக் டொக்கான மியூசிக்கலி!

August 4, 2018 எழுதியவர் : shanmugapriya எழுதியோர்
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
7401 Views

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள மியூசிக்கலி செயலின் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் இளைஞர்கள் மட்டுமல்லாது நடுத்தர வயதினரும் பயன்படுத்தும் செயலியாக மியூசிக்கலி ஆப் இருக்கிறது. இந்த செயலியை உலகம் முழுவதும் 10 கோடிக்கும் மேல் பயனாளர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த செயலியின் பெயர் டிக் டொக் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

டிக்டொக் செயலியானது பைட் டான்ஸ் என்ற சீனாவைச் சேர்ந்த நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இந்த நிறுவனம் மியூசிக்கலி செயலியை கடந்த ஆண்டு ஒரு பில்லியன் டாலருக்கு வாங்கியது. இந்நிலையில், மியூசிக்கலி செயலியை நேற்று டிக்டொக்குடன் அந்த நிறுவனம் இணைத்துள்ளது. மியூசிக்கலி செயலியை பயன்படுத்தி வந்த அனைத்து பயனர்களின் விவரங்களும் டிக்டொக் செயலியுடன் இணைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை பலகோடி பேர் பயன்படுத்திவந்த மியூசிக்கலி செயலி இனி டிக்டொக் என்ற பெயரில் செயல்படும் என்றும், பயனாளர்களின் விவரங்கள், இதுவரை எடுக்கப்பட்ட வீடியோக்கள், சேவ் செய்தவை, லைக் செய்தவை என அனைத்தும் எந்த மாற்றமும் இல்லாமல் அப்படியே இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் மியூசிக்கலி செயலி அப்டேசனுக்கு பிறகு டிக்டொக்காக மாறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பயனாளர் இரண்டு மணிநேரத்திற்கு மேல் டிக்டொக்கில் ஆக்டிவாக இருந்தால், ரசிகர்களுக்கு (Fans) நோட்டிபிகேஷன் வருமாறு புதிதாக கூடுதலான வசதி செய்யப்பட்டுள்ளது. பைட் டான்ஸ் நிறுவனம் மியூசிக்கலி மற்றும் டிக் டொக் பயனாளர்களை ஒன்றிணைத்துள்ளது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட செயலியானது 100 மில்லியன் ஆக்டிவான பயனாளர்களை வைத்திருக்கிறது. 

மியூசிக்கலியை ஒப்பிடும்போது சீனாவைத் தவிர்த்து டிக்டொக் செயலியானது உலகம் முழுவதும் 500 மில்லியன் பயனாளர்களைக் கொண்டுள்ளது. சீனாவில் டிக்டொக்கின் கிளை செயலியான டாய்ன் (Douyin) பயன்படுத்தப்பட்டுவருகிறது.

கடிகாரம் இயங்கும்போது எழும் டிக் டொக் என்ற ஓசையை மையமாக வைத்து இந்த செயலிக்கு ‘டிக்டொக்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், மியூசிக்கலியின் இணைப்பிற்கு பிறகு பைட்டான்ஸ் உடனான ஒப்பந்தத்தின் படி live.ly என்ற செயலியும் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. live.ly தளத்தை பயன்படுத்தினால் அது live.me என்ற தளத்திற்கு ரீடைரக்ட் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மியூசிக்கலி போன்று ஒரு செயலியை உருவாக்க பேஸ்புக் நிறுவனம் முயன்றுகொண்டிருக்கும் நிலையில், மியூசிக்கலி செயலி டிக்டொக்குடன் இணைக்கபட்டுள்ளது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

அதோடு இந்த செயலியையும் தனித்தனியே தரவிறக்கம் செய்ய பயனாளர்களை வலியுறுத்துவதற்கு பதில் இரண்டையும் இணைத்துவிட்டால், இதன் மூலம் அதிக வருமானத்தை பெறலாம் என்பதாலும் இந்த இணைப்பு நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Sep 26
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.41/Ltr (₹ 0.10 )
  • டீசல்
    ₹78.10 /Ltr (₹ 0.10 )