முகப்பு > உலகம்

​மக்களைப் பிரித்துவிட்டேன்;என்னை மன்னித்துவிடுங்கள் - மார்க்

October 04, 2017

​மக்களைப் பிரித்துவிட்டேன்;என்னை மன்னித்துவிடுங்கள் - மார்க்தனது சமூக வலைதளமான பேஸ்புக் மூலம், மக்களைப் பிரித்து விட்டதாகவும், எனவே தன்னை மன்னித்து விடுமாறும், பேஸ்புக் வலைதளத்தை உருவாக்கிய மார்க் ஜூகர்பெர்க் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பேஸ்புக் வலைதளம் பயன்பாட்டுக்கு வந்து 10 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில், அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். யூதர்களின் வருடாந்திர புனித தினத்தையொட்டி தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு பதிவிட்டுள்ள அவர், தன்மை மேம்படுத்திக் கொண்டு சரியாக செயல்பட முயற்சிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தான் உருவாக்கிய சமூக வலைதள கட்டமைப்பான பேஸ்புக் மற்றும் அதன் செயல்பாடுகள், மக்களைப் சேர்ப்பதற்குப் பதிலாக பிரித்து விட்ட தருணமே நிகழ்ந்திருப்பதாகவும், அதற்காக மன்னிப்பு கோருவதாகவும் மார்க் ஜூகர்பெர்க் வருத்தம் தெரிவித்துள்ளார். 

Categories : உலகம் : உலகம்

தொடர்புடைய செய்திகள்

தலைப்புச் செய்திகள்