இன்றைய வானிலை

  • 29 °C / 84 °F

Breaking News

Jallikattu Game

​உங்கள் Instagram கணக்கை verified- ஆக மாற்றவேண்டுமா?

August 30, 2018 Posted By : shanmugapriya Authors
Image
  • Image SHARE
  • Image TWEET
  • Image SHARE
13936 Views

ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதள கணக்கு வைத்திருப்பவர்கள், தங்களை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கவேண்டும் என எண்ணுவர். பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, விதவிதமான போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவேற்றம் செய்துகொண்டே இருப்பர்.

சில பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் verified-ஆக இருக்கும். அதாவது, அவர்களது கணக்கு போலியானது அல்ல, உண்மையானதுதான் என்பதை உறுதிப்படுத்துவதற்காக verified symbol கொடுக்கப்படும்.

பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், தானாகவே, அவர்களது கணக்கு verified ஆகிவிடும். ஆனால், தற்பொழுது ஒருவரது கணக்கை verified ஆக்கவேண்டுமானால், அதற்கு விண்ணப்பிக்கலாம் என இன்ஸ்டாகிராம் நிறுவனம் அறிவித்துள்ளது. இப்பொழுது, ஆப்பில் ஐ-போன் பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே இந்த வசதியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராம கணக்கை Verified கணக்காக மாற்றுவதற்கு சிலவற்றை செய்யவேண்டும் எனவும் அவர்கள் கேட்கும் சில அதிகாரப்பூர்வ தகவல்களையும் சமர்ப்பிக்கவேண்டும் எனவும் அதனை சரிபார்த்துவிட்டு verified கொடுக்கவேண்டுமா இல்லையா என்பதை இன்ஸ்டாகிராம் நிறுவனம் முடிவுசெய்யும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஒரு முறை அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுவிட்டால், 30 நாட்களுக்கு அடுத்து மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும் இன்ஸ்டாகிராம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Verified - ஆக மாற்ற நீங்கள் செய்யவேண்டியவை:

Settings சென்று Request Verification-ஐ கொடுக்கவேண்டும். அதன் பிறகு அவர்கள் கேட்கும் அடையாள அட்டை முதலியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். 

Categories: உலகம்
Image
Image தொடர்புடைய செய்திகள்

உலகம் முழுவதும் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமடைந்துள்ள

திமுக தலைவர் கருணாநிதி நலம்பெற வேண்டும்: இலங்கை தமிழ்

உலகளவிலான ஸ்மார்ட்போன் சந்தையில், ஆப்பிள் நிறுவனத்தை

அமெரிக்காவின் புகழ்பெற்ற Beverly Hills பகுதியின் மலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட

தற்போதைய செய்திகள் Nov 19
மேலும் படிக்க...
Image
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    ₹85.50/Ltr (₹ 0.00 )
  • டீசல்
    ₹78.61 /Ltr (₹ 0.26 )